காதல் கவிதைகள் நீ !
Chapter 13
......................................அவன் கேட்டதன் அர்த்தம் புரிந்த கவிதா , என்னது? என்று சத்தமாக மிரட்டும் தொனியில் கேட்க , அதானே இப்பொழுது மட்டும் தெளிவாக பேசுவடி, என மனதில் நினைத்து கொண்டே , எதற்கு இப்பொழுது கத்துகிறாய் , நான் அகைன் என் டார்லிங் காவியா என்று நினைத்து கேட்டு விட்டேன் போதுமா, நீ பாட்டுக்கு கற்பனை செய்ய வேண்டாம் புரிந்ததா , போனை வை என்று தானும் மிரட்டும் விதமாக வேண்டும் என்றே பேசிவிட்டு கால் கட் செய்தவன் , அப்பாடா எப்படியோ இன்று கிஸ் பண்ணியாச்சு , இப்போ நிம்மதியாக தூங்கலாமா குட்டிமா என்று அவள் போட்டோவை பார்த்து கண்ணடித்து விட்டு , நாளைய விடியலை நோக்கி உறங்கினான் கீர்த்தி.
இங்கு கால் கட் செய்து விட்டு படுத்தவளுக்கோ , இதில் ஏதோ இருக்கிறது என்று தெளிவாக தோன்றியது , கண்டிப்பாக கீர்த்தி ஒரு பெண்ணிடம் இவ்வளவு பேசகூடியவன் அல்ல , அது மட்டும் அல்லாமல் அவன் சமாளிப்பதும் லேசாக புரிந்தது அதை எண்ணி மனம் சிறிது சந்தோஷ பட்டாலும் , இருப்பினும் நம்மை மன்னித்தேன் என்று சொல்லவில்லையே , ஸோ நாமாக எதையும் எதிர்பார்க்க வேண்டாம், அவனை சரி செய்ய நாம் என்னதான் செய்ய முடியும் என்று ,யோசிப்போம் என நினைத்து கொண்டே படுத்து இருந்தவளை உறக்கம் ஒருவழியாக தழுவியது.
மறு நாள் காலை , மிகவும் ரம்மியமாக விடிந்தது , வழக்கம் போல் அறைக்குள் வரும் சூரிய வெளிச்சம் , பக்கத்து வீட்டின் மரத்திலிருந்து கேட்கும் குயிலின் ஓசை என்று ரசித்து கொண்டே எழுந்து கிச்சனுக்கு சென்றவள் , அம்மா ஏதோ விறுவிறுப்பாக வேலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
பின் கழுத்தை செல்லமாக கட்டி கொண்டவள் , அம்மா அப்படி என்னதான் இன்று விசேஷம் , ஊரில் இருந்து யாரும் வர போகிறார்களா என கேட்டவளை , ஆமாம் இன்று மிகவும் முக்கியமான நாள் தான் , நீ சென்று குளித்து ரெடி ஆகி ஒரு பட்டு புடவையை கட்டி கொள் அடுத்த பேச்சு வேண்டாம் , சரிதானா , அம்மாவிற்கு நிறைய வேலைகள் உள்ளது , ஸோ நீ சென்று கிளம்பி வா , என்று ஆணையிட்டு அனுப்பினாள். என்னவாக இறுக்கும் என யோசித்து கொண்டே வந்து படுக்கையில் விழுந்தவளுக்கு தலை விண் என்று வலிக்க துவங்கி இருந்தது.
ஒரு வேலை , பெண் பார்க்கும் படலமாக இருக்குமோ, ஐயோ நான் தான் 3மாதம் டைம் கூறி இருந்தேனே , எப்படியும் நமக்கு பிடிக்காத ஒன்றை நம் மீது திணிப்பர்வகள் அல்ல , ஸோ பார்த்துகொள்ள வேண்டியது தான் , மேலும் நிலைமை வேறு மாதிரி சென்றால் , உடனடியாக கீர்த்தியிடம் பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டியது தான் என்று மனதில் நினைத்தவளாக குளித்து ரெடி ஆகி , மெரூன் கலரில் பட்டு புடைவையும் , அதற்கு தகுந்த பொன்னிற கலரில் மேல் ஆடையும் அணிந்து கீழே வந்தவளை கண் இமைக்காமல் பார்த்தார் நடேசன் ,
ச்ச நம் பெண்தான் மனதில் இவ்வளவு நாளும் மாப்பிளையை பற்றி நினைத்து கொண்டு, அதை தமது முன்னாடி மறைத்து என்ன ஒரு துன்பம் அனுபவித்து இருக்கிறாள் , இனியும் இதை தள்ளி போடாமல் முடிக்கவேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டவர் ,
அதோடு இல்லாமல் , லட்சுமி இங்கு வந்து பாரு , நாம் பெண்ணை , அப்படியே மஹாலட்சுமி மாதிரி இருக்கிறாள் முதலில் நீ சுற்றி போடு , என்ற சத்தம் கேட்டு வெளியே வந்தவள் மகளை பார்த்து அதிசயித்து நின்றாலும் , கணவனது அருகில் வந்து நின்றவள் , இப்பொழுது என்ன என்னவென்று உங்கள் அருமை மகள் கேட்பாள் அதற்கு பதில் கூற ரெடி ஆகிகொள்ளுங்கள் , புரிந்ததா என்று காதினை கடித்தவளை கவனித்த கவிதா , அம்மா அங்க என்ன ரகசியம் பேசிட்டு இருக்கீங்க , முதலில் என்னை எதற்கு இந்த லீவ் நாளில் கூட இப்படி புடவை என்று , ஏதும் கோவிலுக்கு போக போகிறோமா , சொல்லுங்கள்ம்மா என்ற மகளினை பார்த்து புன்னகை செய்து விட்டு ,
கவிதா அது ஒன்றும் இல்லை , நீ கூறிய படி நாங்கள் 3மாதத்திற்கு பிறகு தான் திருமணம் பற்றி பேச நினைத்தோம் , ஆனால் இன்று வரபோகிறவர்களோ , உன்னை பார்த்தே தீர வேண்டும் என்று நேற்று தான் கால் செய்து பேசினார்கள், சரி நாங்களும் பார்க்க தானே வராங்க என்று ஒத்துகொண்டோம் ,
ஆனால் ஒன்று மட்டும்டா , உன் விருப்பதிருக்கு மாறாக ஒன்றுமே நடக்க வாய்ப்பில்லை சரிதானா , நீ சென்று இந்த பூவினை சூடி கொண்டு ரெடியாகு , அப்பா சென்றேன்லடா போ , என்றவரை பார்த்து கடமைக்கு புன்னகை செய்து விட்டு அறைக்குள் வந்தவளுக்கு ஒரு பெரிய துக்கம் மனதில் ஏறி கொண்டதை போல் இருந்தது ,அவசர அவசரமாக கீர்த்திக்கு கால் செய்தவள் அவன் ஃபோன் அட்டென் செய்யாதது வேற பெரும் கவலையாக இருந்தது,
யார் யார் முன்னாடியோ சென்று நிற்க வேண்டிவருமோ எண்ணி யோசனையோடு அமர்ந்து இருந்தவளை கலைத்தது நடேசனின் குரல் , கவிதா அவர்கள் வந்து விட்டார்கள் நீ கீழே வாம்மா என்றவரை பார்த்து , அப்பா இப்பொழுது இது ரொம்ப அவசியமா , எனக்கெனவோ பயமாக உள்ளதுப்பா , ப்ளீஸ் இதெல்லாம் வேண்டாமே என்று சிறு குழந்தையை போல் பேசும் மகளை பார்த்து ,
கவிதா இன்று வந்திருப்பவர்கள், அந்த அம்மா ஏதோ உன்னை கோவிலில் பார்த்து பேசினார்களாம், உன்னை மிகவும் பிடித்து விட்டதாம் , உன்னை தான் தன் மகனுக்கு கட்டுவேன் என்று உறுதியாக வந்து இருக்காங்க , நாம் ஏன் அவர்களை தடுத்து கொண்டு , நீ ஒரு பார்மல்க்கு வந்து வணக்கம் கூறிவிட்டு வந்துவிடு , பிறகு அப்பா எதையாவது சொல்லி தள்ளி போட்டு விடுகிறேன் புரிந்ததா , நீ கீழே வா , நான் முன்னாடி செல்கிறேன் என்று பேசிவிட்டு சென்ற தந்தையை பார்த்து கொண்டே , அவர் கூறிய வார்த்தைகளை யோசித்து பார்த்தவள் ,
கோவிலில் பார்த்தவர் என்றால் சாரதா அம்மா தானே , அவர் வந்து இருக்கிறார் என்றால் கீர்த்தி தான் மாப்பிள்ளையா என்று யோசித்தவளுக்கு சந்தோசம் தொற்றி கொண்டது , ஒரு வேலை அதனால் தான் நேற்று இரவு கூட அப்படி பேசிஇருப்பானோ , சரி எதுவாக இருந்தாலும் பார்த்து கொள்ளலாம் என நினைத்தவள் , கீழே செல்ல ரெடி ஆகி கண்ணாடியில் தன் முகத்தினை பார்த்தவள் , ஹ்ம்ம் ஏதோ மிஸ் ஆகுதே என யோசித்து கொண்டே , இதுதான் என்று தான் அணிந்து இருந்த குட்டி செயினை கழட்டி விட்டு , புடவைக்கு தகுந்தார்போன்று லாங் செயின் போட்டுகொண்டு , மற்றும் உதட்டுக்கு லேசாக சிகப்பு லிப் லைனர் போட்டு, தலை நிறைய பூ சூட்டி கொண்டு , காது தோடுகளை புடவைக்கு ஏற்றார் போல் மாற்றி கொண்டு , ஒரு தடவை பார்த்தவளுக்கு திருப்தியாக இருக்க மனதில் சிறு எதிர்பார்ப்புடன் கீழே சென்றாள் .
முழுமதியை போல் வரும் மகளை கண்ட தந்தைக்கோ பெண் மனம் தான் என்ன , யாரோ என்று கூறிய பொழுது ஏனோ தானோ என்று கிளம்பிய மகளுக்கும் , கீர்த்தியின் அம்மா என்று கூறிய பிறகு பார்த்து பார்த்து அலங்கரித்து போல் , இந்த பொலிவான தோற்றம் ஹம்ம் அனைத்து பெண்களுமே இப்படி தானே , இதில் நம் மகள் மட்டும் விதி விலக்கு அல்ல என்று நினைத்து பெருமிதம் கொண்டார்.
அங்கு வந்த கவிதா சாரதா மற்றும் கேசவனை பார்த்து புன்னகையுடன் ஆசிர்வதியுங்கள் என்று வணங்கி விட்டு , பார்வையினால் கீர்த்தியை தேடியவளுக்கு அவன் இல்லாதது சிறு ஏமாற்றமாக இருந்தது , அவள் பார்வையைபுரிந்து கொண்டவளாக சாரதா , என்னடா மாப்பிள்ளையை தேடுகிறாயா என எல்லார் முன்னிலையில் கேட்டு வைக்க , அதெல்லாம் ஒன்றும் இல்லையேம்மா என்று சமாளித்தாலும் மனம் அவனையே நாடியது, கேசவன்,சாரதா கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறி கொண்டிருந்தவள் , ஃபோன் பேசிவிட்டு உள்ளே வந்தவன் அவளை புடவையில் பார்த்து அதிசயித்து வாசலில் மெய் மறந்து நின்று கொண்டு இருப்பதை கவனித்து இருக்க வாய்ப்பில்லை,
என்ன கீர்த்தி , மருமகளை அங்கிருந்து பார்த்தால் எப்படி , உள்ளே வரலாமே என்று கீர்த்தியின் கவனத்தை கலைத்தார் அவனது அப்பா , நீங்கள் வேறு ஏனப்பா இப்படியெல்லாம் என மனதில் நினைத்து கொண்டு உள்ளே வர , அவனை நிமிர்ந்து பார்த்தாள் கவிதா, மெரூன் கலரில் ஷர்ட் மற்றும் சாண்டல் கலரில் பான்ட் என்று பொருத்தமாக அணிந்து மாப்பிள்ளையை போல் வந்தவனை விட்டு பார்வையை எடுக்க கவிக்கும் மனசு வரவில்லை, அவன் அருகில் வந்ததும் கேசுவலாக எழுந்து நின்றவளை பார்த்த சாரதவிற்கோ , நன்றாக மரியாதை தெரிந்த பெண் தான் நம் மருமகள் என பெருமிதம் பட்டு கொண்டாள்.
பார்த்தியா சாராதா , நம் மகன் வரவும் கவிதா எப்படி எழுந்து நிற்கிறாள் பார் , நீ இப்படி ஒருநாளாவது இப்படி செய்து இருக்கியா என்று மருமகளை பற்றி பெருமை அடிக்க , என்னை பற்றி பேசவில்லை என்றால் உங்களுக்கு தூக்கமே வராதே என்று கூற அங்கு ஒரு சிரிப்பலை பொங்கியது. லட்சுமி அனைவர்க்கும் ஸ்வீட்ஸ் பரிமாற குனிந்த தலையை நிமிராமல் அமர்ந்து இருந்தால் கவிதா , அடடா இது நம்ம பொண்ணு தானா லட்சுமி இவ்வளவு அமைதியாக நம்பவே முடியவில்லையே என்று கேலி பேச , அப்ப நீங்கள் வேற என்று சிறு குரலில் பேசினாள்.
சரி , சரி நாம் பேசுவது இருக்கட்டும் , பொண்ணும் மாப்பிளையும் பேசட்டுமே , என்று கேசவன் தொடங்க , கவி நீ சென்று மாப்பிளைக்கு வீட்டினை சுற்றி காட்டிவிட்டு வா என்று அதற்கு வழி அமைத்து கொடுத்தார் நடேசன். ஒருவழியாக கவியிடம் பேச நேரம் வந்ததே என்று நினைத்து கொண்டு , தந்தையை பார்த்து சிரித்து கொண்டவன் , ஹ்ம்ம் ஓகேப்பா என்று எழுந்து முன் செல்ல , போய்விட்டு வருகிறேன்ப்பா என்று அவனை பின் தொடர்ந்து சென்றால் கவிதா.
வந்த காரியத்தை மிக முக்கியமாக செய்வது போல் , கவிதா ஒவொன்றாக காட்டி கொண்டே போக , கீர்த்தியோ கவிதாவினை சைட் அடித்து கொண்டே பின் தொடர்ந்தான், அவளது இந்த புடவையும் அதற்கு ஏற்றார் போல் அவள் அணிந்து இருந்த தோடு, வளையல் , பூ என அனைத்தும் ரசித்து கொண்டிருந்தான். எதேட்சையாக திரும்பிய கவிதாவோ கீர்த்தியின் கவனம் தன் மீதே என்று புரிந்து முகம் சிவந்து நின்றாள் , ஐயோ இவள் இப்படி நின்று கொண்டிருந்தால் நம்மை கட்டுபடுத்துவது மிகவும் கடினம் என்று நினைத்து கொண்டவனாக தன் பார்வையில் வித்தியாசம் காட்டினான் கீர்த்தி,
ஹ்ம்ம் அப்புறம் , நீ நினைத்தார் போல் என் அம்மாவை கரெக்ட் செய்துவிட்டாய் போல , இந்த பெண்தான் வேண்டும் என்று அவர்கள் ஒற்றைகாலில் நிற்காத குறையாக இங்கு அழைத்து கொண்டு வந்துவிட்டார்கள், பரவாயில்லை உன்னை என்னவோ நினைத்து விட்டேன் என்று அவன் ஒரு மாதிரியாக பேச , என்ன சொல்ல வருகிறிர்கள் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க முதலில் என வினவியவளிடம் , அடடா அப்படியே ஒன்றுமே தெயரியாத பொண்ணுதான் , அன்றே நீ வீட்டிற்கு வந்த பொழுதே யோசித்தேன், இதில் ஏதோ இருக்கும் என்று என்று அலட்சியமாக கூறியவனை பார்த்து,
நான் ஒன்றும் உங்கள் அம்மா என தெரிந்து பேசவில்லை , அப்படி அவர்களை சரி செய்து உங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என நான் ஒருநாளும் நினைத்தது இல்லை , பட் நீங்கள் பேசுவதை பார்த்தால் உங்களுக்கு இதில் விருப்பம் இல்லாதது போல் தோன்றுகிறது என அவள் அவனைபார்க்க ,
என்னது விருப்பமா , என்னை சிறிதும் நம்பாத ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு வாழ ஆசை படும் அளவிற்கு நான் ஒன்றும் மடையன் அல்ல , என்று அவன் கேலியாக பேச , மனதில் எங்கோ வலித்தது போல் உணர்ந்தாள் கவிதா, ஒரு நிமிடம் கண்ணை மூடி திறந்தவள் , சரி அப்படி என்றால் நான் சென்று விருப்பம் இல்லை என்று அவர்களிடம் சொல்லிவிடுகிறேன் , விருப்பம் இல்லாமல் இதெல்லாம் எதற்கு என நகரப்போனவளை ,
ஐயோ விசயமே தலைகீழ் ஆகிவிடுமே என்று பயந்தவன் , ஏய்நில்லு என்று அவள் கையை பிடித்து அவன் இழுக்க , இதை எதிர்பார்க்காத கவிதா அவன் மேல் தடுமாறி அவன் மேல் விழுந்தாள் , ஏற்கனவே அவள் அழகில் மயங்கி நின்றவன் , அவளை ரசித்து கொண்டிருந்தவன் , அவள் இவ்வளவு அருகில் வருவாள் என எதிர்பார்க்கததால் தன் நிலை மறந்து அவளை அணைத்து தன்னுடைய முதல் முத்தத்தினை அவள் இளசிகப்பு நிற உதடுகளில் பதித்தான்,
எவ்வளவு நேரம் அது தொடர்ந்ததோ என்று இருவருக்குமே தெரியவில்லை , கீழே வாருங்கள் என்ற சத்தம் கேட்டு தன் நிலை உணர்ந்து அவளை விடுவித்தான் அவன் , அவளது கீர்த்திவாசன் , கவிதாவிற்கோ வெட்கம் மேலோங்க , முகம் சிவக்க நாம் ஏன் அவனை தடுக்க வில்லை என்று புரியாமல் நின்றாள் அவள் .
டேய் கீர்த்தி , இப்படியா இவள் முன் வழியவேண்டும் , இவளை பார்த்து தடுமாறும் இதயத்தினை என்னவென்று சொல்வது , ச்ச என நினைத்தவன், அம்மா சொல்லி நான் மறுத்தது இல்லை , ஸோ உனக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் நீ போய் சொல்லிகொள், எனக்கு ஒன்றும் இல்லை என்று அந்த நொடியை சமாளித்தவனாக , சரி கீழே போகலாம் வா , என்று அவளை அழைத்து கொண்டு வந்தான்.
அவன் செய்கையின் அர்த்தம் புரியாமல் யோசித்த கவிதா , இது பற்றி யாரிடம் கேட்பது, பட் இதில் ஏதோ இருக்கிறது , அவன் என்னை அணைத்த நிமிடங்களோ கல்லுரி தினங்களில் அவன் கொண்டிருந்த காதலில் சிறிதும் குறையாமல் இருக்கிறது என்று தெளிவாக காட்டியது, என்னதான் இருக்கும் என யோசித்து கொண்டே , தன் மன எண்ணங்களை அடக்கிவிட்டு அவர்களை வழியனுப்பும் வேலையை கவனித்தாள்...........................
ஹாய் பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருந்தா கமெண்ட் பண்ணுங்க ஆர் இந்த FB Page லைக் பண்ணுங்க
ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் சண்டே போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......
Thankyou
இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI
No comments:
Post a Comment