காதல் கவிதைகள் நீ !
Chapter 14
..................................அவன் செய்கையின் அர்த்தம் புரியாமல் யோசித்த கவிதா , இது பற்றி யாரிடம் கேட்பது, பட் இதில் ஏதோ இருக்கிறது , அவன் என்னை அணைத்த நிமிடங்களோ கல்லுரி தினங்களில் அவன் கொண்டிருந்த காதலில் சிறிதும் குறையாமல் இருக்கிறது என்று தெளிவாக காட்டியது, என்னதான் இருக்கும் என யோசித்து கொண்டே , தன் மன எண்ணங்களை அடக்கிவிட்டு அவர்களை வழியனுப்பும் வேலையை கவனித்தாள்.
இதை பற்றி யாரிடம் கேட்பது என யோசித்து ஒரு முடிவிற்கு வந்தவளாக, காலையிலே பரபரப்புடன் கிளம்பி அலுவலகம் சென்றவள் மதிய வேலையையும் சேர்த்து முடித்து விட்டு கொஞ்சம் பார்த்து கொள்ப்பா என்று அலுவலக தோழியிடம் கூறிவிட்டு , அறை நாள் விடுமுறையுடன் கீர்த்தியின் வீட்டிற்கு விரைந்தாள்.
அடடே வா வா கவிதா , நேற்று தானே வந்துவிட்டு வந்தோம் , அதற்குள் கீர்த்தி நியாபகமா என்று சாரதா கேலி செய்ய , ஐயோ அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைம்மா , உங்களை தான் பார்க்க வந்தேன் என்று பதில் கூறிய தன் வருங்கால மருமகளை பார்த்து கேலி புன்னையுடன் , சரி சரி வா , முதலில் சாப்பிட்டுவிட்டு பிறகு பேசலாம் என்று வேண்டாம் என கூறியவளை வலுகட்டாயமாக சாப்பிட செய்தாள் சாரதா.
மாமா எங்கே அத்தை ,என்றவளை பார்த்து புன்னகை செய்தவள் , உங்கள் மாமா இன்னும் சிறிது நேரத்தில் மதிய சாப்பாடிற்கு வருவார் , இரு இரு , நீ கேட்கவில்லை என்றாலும் நானே சொல்லிவிடுகிறேன் , உன் வாசு மதியம் வருவதில்லை , இவினிங் 6மணிக்கு வந்து விடுவான் போதுமா தகவல் என்று அவள் கூற கவிதாவிற்கோ வெட்கமாகி போனாலும் , எப்படியோ நாம் பேசும்பொழுது அவன் இல்லாமல் இருப்பதும் நல்லது என தோன்றியது.
சரிம்மா சொல்லு , என்ன விஷயம் என்று தொடங்கியவளிடம் யோசித்து கொண்டே அது இல்லை அத்தை என கவிதா இழுக்க , இங்க பாரு கவிதா ,என்னை உன் அம்மாவென்றே நினைத்து கொள், தைரியமாக சொல் புரியுதா என உரிமையாக கேட்க அதற்கு மேல் தயக்கம் காட்டவில்லை கவி.
எனகென்னவோ இந்த திருமணத்தில் கீர்த்திக்கு அவ்வளவு விருப்பம் இல்லை என்று தோன்றுகிறது , ஆகையால் இது வேண்டாம் என்று நினைக்கிறன் , சாரிம்மா என்னை மன்னித்துவிடுங்கள், இந்த பேச்சை இதோடு நிறுத்திவிடலாம் என்று கண் கலங்க பேசியவளை பார்த்து சிரிப்பு தான் வந்தது சாரதாவிற்கு.
தான் கூறியதை கேட்டு , தன் முன் சிரித்து கொண்டிருப்பவளை கலக்கத்துடன்கவிதா பார்க்க, பின்னே என்னம்மா , திருமணதேதி அடுத்த மாதம் என்று பேசியதற்கே , ஏன்ம்மா ஒருமாத இடைவெளி அதற்கு முன்னாடி ஏதும் நாட்கள் இல்லையா என்று என்னை தொல்லை செய்கிறான் , இதில் நீ அவனுக்கு விருப்பம் இல்லை என்று கூறினால் நான் சிரிக்காமல் வேறு என்னதான் செய்வது சொல்லு என்ற பதிலை கேட்டு மனதில் ஒரு குளிர்ச்சி பரவியது. இருப்பினும் விடாமல் இல்லைம்மா உங்கள் விருப்பத்திற்காக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது என்றவளிடம் ,
இங்கே பாரு கவிதா , கீர்த்தி சிறுவயதிலேயே எது செய்தாலும் பொறுப்பாக பார்த்து பார்த்து செய்வான் , ஆகையால் அவன் எடுக்கும் எந்த முடிவிற்கும் நானும் அவனது அப்பாவும் தடை செய்தது இல்லை, அவ்வாறு இருக்கையில் எனக்கு தெரிந்து அப்பொழுது கல்லுரி இரண்டாம் வருடம் என்று நினைக்கிறேன் ஒருநாள் என்னிடம் வந்து அம்மா நான் எனது மனைவியை தேர்ந்தெடுத்து விட்டேன் , இந்த வீட்டிற்கு மருமகள் என்றால் அவள் ஒருத்தியால் மட்டும்தான் வரமுடியும் என்று தெளிவாக கூறினான்.
ஆனால் அதன் பின் உங்களுக்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை கல்லுரி முடிந்தும் கூட அவன் எதுமே கூறவில்லை , அதன்பின் அடுத்த இரண்டு வருடங்களில் நாங்களும் எப்பொழுது அவளை கூட்டிவருவாய் அல்லது வேறு பெண் பார்க்கலாமா என்று கூட கேட்டுபார்த்தும் அம்மா டைம் வேண்டும் என்று மட்டும் தான் கூறினான், ஆனால் கடந்த வாரம் என்னிடம் வந்து திருமணதிற்கு சம்மதம் , பெண் நீங்கள் வீட்டிற்கு கூட்டிவந்த கவிதாதான் , என்று கூறிய பொழுது தான் அப்பாடா ஒரு வழியாக ஒத்துகொண்டானே என்று தோன்றியது.
இவனாக வந்து கூறினான் என்றால் கண்டிப்பாக நீ தான் கல்லுரி படிக்கும்பொழுது கூறிய பெண் என்று அவன் கூறி எனக்கு புரியவேண்டியது இல்லை . நீயும் அப்படிதான் என்று பெண் பார்க்க வந்த பொழுது உன் அம்மா கூறினார்கள் , அப்படிருக்க நீங்கள் இப்பொழுதாவது சேரும் முடிவெடுத்ததை எண்ணி நாங்கள் சந்தோசமாக இருந்தால் , நீ வந்து கண் கலங்க திருமணத்தை நிறுத்த சொல்லும் காரணம் தான் புரியவில்லை கவிதா , சொல்லு அப்படி என்னதான் நடந்தது என்று கவிதாவின் மனதிற்கு தெம்பளிக்கும் விதமாக பேசினாள் அவள்.

அது வந்து என்று கவிதா இவ்வளவு நாட்கள் தங்களுக்குள் நடந்த அனைத்தையும் விவரமாக கூற, சாராதாவிடம் இருந்து நிம்மதி புன்னகை தான் தோன்றியது, ஸோ நீ கூறியதை வைத்து பொழுது இரண்டு விஷயம் தெளிவாக தெரிகிறது , ஒன்று நீங்கள் இருவருமே ஒருவரை விட்டு ஒருவர் பிரியும் முடிவில் சிறிதும் இல்லை, அது மட்டுமில்லாமல் என் மருமகளுக்கு தன் தவறை புரியவைக்க நினைத்தவன் , அவள் அழும் ஒரு நிமிடங்களை கூட அவன் தொடரவிடவில்லை என்று தெளிவாக புரிகிறது என்று சாரதா பேசுவதை கேட்க கேட்க கவிதாவிற்கு ஏதோ தெளிவானதை போன்று தோன்றியது.
பார்க்கபோனால் அவன் முன் அவள் அழதொடங்கிய நேரங்களில் ஒன்று அவளை மிரட்டியோ அல்லது பேச்சினை மாற்றியோ அதை தடை செய்து இருந்தான் கீர்த்தி, கல்லுரி காலத்தில் அவன் சொன்ன வார்த்தைகள் இன்றும் அவன் மறக்கவில்லை , கவி நீ விளையாட்டாக அழுவதை கூட நான் அனுமதிக்கமாட்டேன், நீ அழுவதை பார்க்கும்பொழுது எனக்கு உயிர் போகும் வேதனை கண்ணில் தெரிகிறது ,ஸோ உன்னை கண் கலங்காமல் பார்த்து கொள்வான் இந்த கணவன் என்று அவன் கேலியாக சொன்னாலும் கூட இதை இன்று வரை பின்பற்றியும் இருக்கிறான் என்று நினைக்கும் பொழுது இது வரையுளும் அவன் காதலில் குறைவே இல்லையே என்ற எண்ணமே அவளுக்கு மிக பெரிய சந்தோசத்தை அளித்தது.
என்னடா வாசுவுடன் கனவா என்ற சாரதாவின் குரலில் நிகழ் காலத்திற்கு வந்தவள் , நீங்கள் சொல்லும் பொழுதுதான் எனக்கே இது புரிகிறது மிகவும் நன்றிம்மா என்று என அவள் சிறு குழந்தை போல் பேசுவதை பார்த்து அப்பாடா ஒருவழியாக என் மருமகளுக்கு புரிந்ததே ரொம்ப சந்தோசம் என்று அவர்கள் பேசிகொண்டிருக்கும் பொழுதே கேசவன் உள்ளே வர , அட வா கவிதா வா,வா , ஹ்ம்ம் நான் கூட கீர்த்தி மட்டும் தான் உன் நினைவால் திரிகிறான் என்று நினைத்தால் இங்கும் அப்படிதான் போலேயே என முறுவலிக்க , மாமா நான் அவரை பார்க்க வரவில்லை , அத்தையை தான் என்று கூறினாலும் வெக்கத்தில் முகம் சிவந்தது.
ஆசிர்வதியுங்கள் மாமா என்று அவர் காலை தொட்டு வணங்க , நல்லா இருடா , என்று தன் வாழ்த்துகளை கூறிவிட்டு சாப்பிட நகர்ந்தார். அத்தை நான் வேண்டுமானால் பரிமாறவா என்றவளிடம் அதெல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் , நீ சென்று வீடு சுற்றி பார்த்துவிட்டு வா, அதோ மாடியில் அந்த இரண்டாவது ரூம்தான் வாசுவினது என்று விவரம் கூறி அனுப்பிவைத்தார் .
வீடினை சுற்றி பார்த்து கொண்டே படியேறவளுக்கு அவனது அறையினை பார்க்கும் ஆவல் அதிகமானது, உள்ளே சென்று லைட் போட்டவள் ஒரு கணம் அதிர்ச்சியில் நின்றுவிட்டாள் , வீடு முழுவதும் மஞ்சளும் வெள்ளையும் கலந்து இருந்தாலும் அவன் அறை மட்டும் அவளுக்கு பிடித்த ப்ளூ மற்றும் ஒய்ட் கலவையில் மிக ரம்மியமாக காட்சி அளித்தது. அது மட்டும் இல்லாமல் அறை முழுதும் அவளது புகைப்படமே நிறைந்து இருந்தது. ஒவொன்றாக கவனிக்க ஆரம்பித்தாள் கவிதா .
அவனது பெட்ரூம் அருகில் இருந்த டேபிளில் அவர்கள் இருவரும் ஜோடியாக சிரித்து கொண்டிருக்கும் போட்டோ , இதன் காப்பி அவளிடமுமே இருந்தது , சொல்லப்போனால் இதனுடன் தானே அவள் இவ்வளவு நாட்களை கழித்தது.
திரும்பி சுவற்றினை பார்த்தவள் அதில் இருந்த பெயிண்ட்டிங் பார்த்து அசந்துவிட்டால், இது நம்மளுடைய என யோசித்தவளுக்கு அந்த போட்டோவின் அடியில் இருந்த எழுத்து தெளிவாக நியாபகபடுத்தியது , என் தேவதையை நான் முதன்முதலாய் பார்த்து மயங்கி இவளை போன்று ஒரு அமைதியான பெண் மட்டுமே என் வாழ்கை துணைவியாக வரமுடியும் என்று ஏங்கிய நாள் என்று அவளது பக்கவாட்டு தோற்றம் காட்சிஅளித்தது , அதில் அவள் மெருன் கலரில் சுடியும் , வெள்ளை கலரில் துப்பட்டாவுடன் லூஸ் ஹேர் ஸ்டைலில் மல்லிகை பூவுடன் இடது கன்னத்தில் மச்சதுடன் வகுப்பு டேபிளில் கை வைத்து ஏதோ யோசித்து கொண்டிருப்பதை போன்ற தோற்றம் , ஒரு கணத்தில் அவளுக்கு கண்ணிரே வந்து விட்டது , எனக்கு கூட இது நியாபகம் இல்லையே இதில் எப்படி இவ்வளவு தத்ரூபமாக வரைந்து இருக்கிறான் என்று அசந்து பார்த்தவள் ,
அதன் அடியில் பின்குறிப்பு என்று ஏதோ மீண்டும் எழுதிஇருக்க என்னவென்று கவனித்தாள் , அதில் ஒன்றை தப்பாக நினைத்துவிட்டேன் அன்று மட்டும் தான் அவள் அமைதி , பழகியதில் ஐயோ சரியான வாயாடி பொண்டாட்டி என்று அவன் எழுதிஇருக்க அவளை மீறி சிரிப்பு தோன்றியது, இது அவனே கூறி அவள் நிறையமுறை கேட்டிருக்கிறாள், உன்னை போய் அமைதி என்று நினைத்தேனே , ஆனால் சரியான வாய் உனக்கு , பட் அதையும் திருமணத்திற்கு பிறகு எப்படி சமாளிப்பது என்று நன்றாகவே தெரியும் என அவன் கூறி அவள் இதழ்களை பார்ப்பதும் அதன் அர்த்தம் புரிந்து அவள் முகம் சிவப்பதும் நியாபகத்திற்கு வந்தது.
அடுத்த போட்டோ அவர்கள் லவ் ப்ரொபோஸ் செய்த டே , அடுத்து அவளை முதன்முதலில் கல்லூரியில் கிஸ் செய்த டே என்று வரிசையாக இருந்தது, இறுதியாக அவர்கள் பிரிந்த அன்று அவள் சந்தேகமாக அவனிடம் பேசிய போட்டோ இருக்க , அதன் அடியில் என் உயிர் என்னை விட்டு பிரிந்த டே , என்று அவன் கண்ணிருடன் எழுதியதை போன்று இருந்தது அதன் அடியிலும் பின்குறிப்பு என எழுதிருந்தது, அவள் அப்படி பிரியும் அன்றே அவளை இழுத்து அணைத்து ஒரு முத்தம் கொடுத்து , விளக்கம் கூறி இருந்தால் இந்த பிரிவு வந்தே இருக்காது, தப்பு என் மேலும் தான் என எழுதி இருந்தான் , செய்யவேண்டியது தானே , யார் உன்னை தடுத்தது என்று மனதில் நினைத்து கொண்டதோடு இல்லாமல் இருக்கட்டும் என்று அருகில் இருந்த மார்கரால் அதை அடியில் எழுதியும் வைத்தாள்,
அடுத்து பெயிண்ட்டிங் அல்லாது போட்டோவாக இருந்தது , அது ஒரு மாததிருக்கு ,முன் அவள் அவளை சந்தித்த தினம், அதில் அவள் கோபமாக அவன் முன் கோபமாக கையை நீட்டி பேசிகொண்டிருப்பதை போன்று இருந்தது , அதிலும் அடியில் என் தேவதையை 2வருட பிரிவுக்கு பிறகு நான் சந்தித்த டே என இருக்க , அதிலும் பின்குறிப்பாக அவள் பேசுவதை கவனிக்காமல் அவள் அழகில் நான் மயங்கி அவளை ஒன்றுமே செய்ய முடியாமல் என் கையை கட்டி கொண்டு இருந்த டே என இருந்தது.
அசந்து போய் கட்டிலில் அமர்ந்து விட்டவள் வந்த அழுகையை கண்ட்ரோல் செய்ய முடியாமல்அழுது தீர்த்து விட்டாள் , ச்ச , கீர்த்தி அளவுக்கு நான் கூட காதலிக்கவில்லை போலயே , என்ன மாதிரி அவனை கஷ்டபடுத்திஇருக்கிறோம் என்று தன்னையே நொந்து கொண்டவள் இவனிடம் எப்படி தன் மேல் உண்டான நம்பிக்கையை நிரூபிப்பது, எப்பொழுது சேர்ந்து வாழ்வது என்று யோசித்தவளை சாரதாவின் குரல் கலைக்க ,ஏக்கத்துடன் அனைத்தையும் பார்த்து விட்டு , கதவினை பூட்டிவிட்டு கிழிறங்கிவந்தாள்.
என்னடா வாசு ரூம்லேயே இருந்து விட்டாய் போல் , வீடை பார்த்தது போன்று இல்லையே என்பவளிடம் சமாளித்து மாமா எங்கே என கேட்க , அவர் சாபிட்டுமுடித்து அலுவலகம் சென்று திரும்பியும் வந்துவிடுவார் இன்னும் சிறிது நேரத்தில், அங்கே பார் மணியை என்று காட்ட , அதில்5.30என இருக்க இவ்வளவு நேரமா அங்கு இருந்தோம் என யோசித்து விட்டு , ஐயோ கீர்த்தி வரும் நேரமல்லவா நாம் கிளம்பிடனும் என்று அவசரமாக திரும்ப ,என்ன அவசரம் அவனை பார்க்கவந்துவீட்டு பின் பார்காமலே சென்றால் என்ன அர்த்தம் , நீ சென்று முகம் கழுவி ரெடியாக இரு , அவன் வந்து விடுவான் , நாம்அவனுக்கு பிடித்த பால் கொழுக்கட்டை செய்யலாம் புரிகிறதா போ என்று அனுப்புகையில் அதை தடுக்க முடியாமல் அவளுடைய அவனுக்காக காத்திருக்க துவங்கினாள்.
கீர்த்தியின் வண்டி சத்தம் கேட்க , ஒருவித பதற்றத்துடன் அவன் அம்மாவுடன் வேலையை பார்த்து கொண்டிருந்தாள் அவள் , என்னம்மா வாசனை எல்லாம் கமகமக்குது , யாரும் கெஸ்ட் வந்து இருகிறார்களா என வினவ , ஆமாம் ஆமாம் எல்லாம் நம் வீட்டிற்கு வரபோகிறவர் தான் இரு தண்ணிர் கொண்டு வருகிறேன் என்ற தாயின் குரலில் யாராக இருக்கும் என யோசித்து கொண்டே ஹாலில் இருந்த தொலைகாட்சியை ஆன் செய்ய , அதில்
"இதழ் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் , இதழோரம்......இதயம் இடம் மாறும் இளமை வழிந்தோடும்"....................என பாடல் ஒலித்து கொண்டிருக்க , கண் மூடி அதை ரசித்தவன் எஸ் எஸ் என் கவியின் இதழ் பட்டால் எனக்கு கூடதான் இதயம் இடம் மாறுகிறது என்று கனவில் ஆழ்ந்தவனை கவிதாவின் தண்ணீர் என்ற சத்தம் கலைக்க , என்னடா இது இவளை பற்றி நினைத்தால் , அம்மாவின் குரல் கூட கவிதாவினை போல் ஆகிவிடுமா என்ன! என்று மனதில் சிரித்து கொண்டே விழி திறந்தவனுக்கு எதிரில் கவிதா நீர் சொம்புடன் , வழக்கம் போல் அவளுக்கே உரித்தான வெட்கம் கலந்த பார்வையுடன் நிற்க அசந்து போய் இது கனவா என நினைத்து கொண்டிருக்க ,
மேகம் ஒன்று நேரில் இன்று வாழ்த்த வந்ததடி ,தாபம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்து கொண்டதடி....இனி கனவும் நினைவும் உன்னையே....தினம் தினம் தொடரந்திடும்.......காதல் கவிதைகள் படித்திடும் நேரம்.......இதழோரம் என ஒலித்து கொண்டிருக்க , இருவரும் அதில் லயித்து போய் நிற்க , வலிஞ்சது போதும் வாசு இங்க அம்மாவும் இருக்கேன்டா மறந்துடாத என்ற குரலில் இருவரும் நிகழ் காலத்திற்கு வர , அம்மா அதெல்லாம் ஒன்றும் இல்லைம்மா நீங்கள் வேற என்று சமாளித்தவன் , கவியிடம் இருந்து நீரை வாங்கி பருகி கொண்டே இவள் எப்படி இங்கு இப்பொழுது வந்தால் என யோசித்து கொண்டு அமர , கவிதாவோ அமைதியாக அவனது அம்மாவிடம் போய் அமர்ந்து கொண்டாள்.
அம்மா நீட்டிய பால் கொழுக்கட்டையை சுவைத்தவன் , என்னம்மா இன்று மிகவும் அருமையாக இருக்கு , சூப்பர், ஸோ கெஸ்ட் வந்தா கலக்குவீங்க போல என்றவனிடம் , அது எப்படி இல்லாமல் போகும் , நான் என்றால் வெறும் பால் கலந்து செய்வேன் , ஆனால் இன்று அதில் காதல் , அன்பு , நேசம் எல்லாம் கலந்து, வந்துஇருக்க கெஸ்ட் ரெடி செய்தாங்க , பின் இல்லாமலா போகும் சொல்லு வாசு , என்று அவள் கேலிசெய்ய , ஐயோ அத்தை நீங்கள் வேறு ப்ளீஸ் என்று கெஞ்ச , கவிதாவை காதலுடன் நோக்கினான் கீர்த்தி .
அதானே பார்த்தேன் , ஏதோ வித்தியாசம் தெரிகிறதே , என்று நினைத்தேன் , எப்படி என்றாலும் நீங்கள் செய்யும் அளவிற்கு இல்லைம்மா என்று அவன் பதில் அளிக்க , டேய் போதும்டா , வழியுது தொடைச்சுக்கோ என்று கேலி செய்தால் சாரதா . சரி சரி வந்து இருக்க கெஸ்ட் உன்னிடம் ஏதோ முக்கியமாக பேசணுமாம் , என்னவென்று கேள் , எனக்கு உள்ளே வேலை இருக்கு , என்று எழுந்திருக்க, அப்புறம்கீர்த்தி இது ஹால், நான் உள்ளே இருக்கிறேன் , அப்பா எப்பொழுது வேண்டுமானாலும் வருவார் சரிதானா அதை இருவரும் மறந்துவிடாதிர்கள், வேண்டுமானால் தோட்டத்திற்கு சென்று பேசுங்கள்.....கூறிவிட்டு கிளம்ப , ஐயோ நீங்கள் வேறு ஏன்மா இப்படி மானத்தை வாங்குறிங்க.....என்று பதில் கூறிவிட்டு கவியிடம் திரும்பியவன் என்ன என்பது போல் புருவம் உயர்த்த, அவளோ மனதில் இப்படி மாட்டி விட்டு போறாங்களே என்று யோசித்தாலும் அவளுமே அவனிடத்தில் பேசவேண்டிஇருந்தது .
அது வந்து என அவள் தடுமாறி தொடங்க , வா அங்கே பொய் பேசலாம் என்று தோட்டத்த்திருக்கு அழைத்து சென்றான், ரோஜா , செம்பருத்தி என்று தோட்டமே பூத்து குலுங்க , சொல்லு என்ன விஷயம் என்று கேட்டான் அவன், ஹ்ம்ம் வந்து , உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் இந்த திருமணம் வேண்டாம் , உங்கள் அம்மா விருப்பத்திற்காக வேண்டாம் என்று பேச , வழக்கம் போல் கீர்த்தியோ அவளது உடை ,அவளது தோடு , அவளது உதடு அசைவு என்று அவளையே பார்வையால் விழுங்கி கொண்டிருந்தான் .
அவன் பார்வையை உணர்ந்த பொழுதும் கவி அதை தடுக்கவில்லை , வேண்டும் என்றே அழுவது போல் அவள் பேசிக்கொண்டே கண்களை கையால் துடைக்க , ஐயோ இவள் இவ்வளவு நேரம் அழுது கொண்டா இருக்கிறாள் , அது தெரியாமல் நாம் அவளை ரசித்து ச்ச....என்று தன்னையே திட்டி கொண்டு, ஹே எதற்கு இப்பொழுது அழுவதை போல் நடிக்கிறாய் என்று முதலில் அழுவதை நிறுத்து என்று அவளை அதட்டும் குரலில் சொன்னான், இதை தானே அவள் டெஸ்ட் செய்து கொண்டு இருக்கிறாள் , விடுவாளா அவள் , இல்லை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு பிறகு நீங்கள் ஏன் கஷ்டப்படவேண்டும் என்று அவள் அழுகையின் தீவிரத்தை அதிகபடுத்த , அவ்வளவு தான் அவன் அவளை விட்டு வைக்கவில்லை.
ஐயோ கவி என் செல்லம்ல ப்ளீஸ் அழாதே , இந்த கீர்த்தியால் உன்னை வெறுக்கமுடியுமா நீயே சொல் , நீ இல்லாமல் என்னால் வாழதான் முடியுமா.....ப்ளீஸ்டி அழவேண்டாம் என்று அவன் கல்லுரி காலத்தில் பேசுவதை போல் அவளை சமாதானம் செய்ய , நிமிர்ந்து அவனை பார்த்தாள் அவள். அவளது பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்தவன் , நல்லா மாட்டிகிட்டோமா கீர்த்தி , கடைசியில் கண்டே பிடித்துவிட்டாலே , என்று மனதில் நினைத்தாலும் அதை வெளிகாட்டாமல் ,
இங்கே பாரு உன்னை எனக்கு பிடிக்குதா , பிடிக்கலையா என்பது விஷயம் அல்ல , நீ என்னை நம்பாமல் சென்ற அந்த நாளை இன்றும் மறக்கமுடியவில்லை போதுமா , ஸோ விருப்பமே இல்லாமல் தான் ஒத்து கொண்டேன் , இது தான் உண்மை நீ வேண்டுமானால் நன்றாக அழுது விட்டு வா ,திருமணத்தையும் நிறுத்தி விடு நான் உள்ளே செல்கிறேன், என்று அவளை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிற்குள் விரைந்தான்.
அவளுக்கு தெள்ள தெளிவாக எல்லாமே புரிந்து விட்டது , கீர்த்தி ஒருநாளும் அவனை விட்டு போகபோவதில்லை, அவளை வெறுக்கவும் போவதில்லை என்ற மிக பெரிய மன நிம்மதியுடன் முக மலர்ச்சியுடன் அவளும் வீட்டிற்குள் நுழைந்தாள்..................................................
பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருக்கும்னு நம்புறேன்....திஸ் இஸ் மை FB பேஜ் , முடிஞ்சா லைக் அண்ட் ஷேர் பண்ணுங்க

ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் சண்டே போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......
Thankyou
இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI
No comments:
Post a Comment