Saturday, 23 April 2016

காதல் கவிதைகள் நீ !


Chapter 12


..............................ஆமாம் , டி தான் , இப்பொழுது கிளம்புங்கள் மேடம் என்று ஒருவழியாக அவளை வெளியே அனுப்பிவிட்டு , தன் சீட்டில் அமந்தவனுக்கு , என்னடா கீர்த்தி , இவள் இப்படியே இன்னும் 2முறை நேரில் வந்துவிட்டு போனால் என்றால் , ஒருவாரம் கூட தாக்கு பிடிக்கமாட்டேன் போலயே என்று இறுதியில்  ஒரு முடிவிற்கு வந்தவனாக தன்னுடைய பள்ளி தோழிக்கு கால் செய்தான்.

ஹலோ பவித்ரா , நான் கீர்த்தி பேசுகிறேன், 

ஹாய் டா கீர்த்தி , வாட் அ ப்ளசன்ட் சர்ப்ர்ரைஸ் , ஹவ் ஆர் யூ மேன்  , இப்பதான் சார்க்கு எங்களுடைய நியாபகமே வருதா , கடைசியாக திருமணத்தில் பார்த்தது , எனக்கு ஒரு கால் செய்ய வேண்டும் என்று கூட உனக்கு எண்ணம் வரவில்லை பார்த்தியா என்று அவள் வழவத்து கொண்டே போக , 

ஹே டபரா செட் , என்னை பேசவே விடமாட்டியா நீ , உன்னையெல்லாம் பாவம் அந்த மனுஷன் பிரதீப் எப்படி தான் அட்ஜஸ்ட் பண்றாங்க , ஒன்றும் புரியவில்லை போ , 

டேய் , போதும் இப்பொழுது விஷயம் இல்லாமல் நீ கால் செய்து இருக்க வாய்ப்பில்லை , சரி சொல்லு என்னவென்று , 

அப்பாடா , ஒருவழியாக பேசவிட்டாள் , ரொம்பவும் நல்லது , சரி உனக்கு இன்னும் ஒரு வாரம் தான் டைம் , அதற்குள் நீ உன் மணவாளருடன் இங்கு வரவேண்டும் , நீ வந்து செய்ய வேண்டிய விசயங்கள் பல உள்ளது , ஸோ நைநை என்று பேசிகொண்டே இல்லாமல் கிளம்பும் வழியை பாரும் , புரிந்ததோ என அவன் கேலியாக கூறி முடிக்க , 

அதெல்லாம் முடியாது , நீ என்ன காரணம் என்று கூறாமல் வரமுடியாது சார் , பர்ஸ்ட் சொல்லுங்க , அப்புறம் யோசிக்கலாம் , 

அடிப்பாவி , இது என்னுடைய வாழ்வு பிரச்சினை நீ என்னவென்றால் வரமுடியாது சொல்கிறாய்  , சரி நன்றாக   கேட்டுகொள் , ஐயாவுடைய திருமணம் பற்றியது , புரிந்ததா , 

வாவ் , சூப்பர் கீர்த்தி , ஆமா லாஸ்ட் டைம் என் திருமணத்திற்கு வந்த பொழுது ஏதோ காஞ்சனாவோ   இல்லை கல்பனாவோ ,  ஏதோ சொன்னமாதிரி இருந்ததே அவள் என்ன ஆனால் , அவ்வளவு தானா , பாவம் இல்லையா அந்த பொண்ணு  என்று அகைன் தொடங்க , 

ஹே வாயாடி , அவள் பெயரினை  இப்படி கொலை செய்யுரியே , காஞ்சனாவும் இல்லை , கல்பனாவும் இல்லை , கவிதா என்னுடைய கவி செல்லகுட்டி போதுமா , 

ஐயோ , போனிலேயே வழிகிறது கீர்த்தி , கொஞ்சம் துடைத்து கொள் , சரி இப்பொழுது நான் உடனடியாக அவளிடம் பேசவேண்டுமே , எங்கே போன் நம்பர் முதலில் சொல் , என தொடங்க 

ஹ்ம்ம்க்கும் , நானே இங்க பேசுறது இல்லையாம் , இதில் இவள் வேறு , இங்க பாரு ப்ரொப்லெம்மே அங்க தான் , நீ பர்ஸ்ட் போனில் கத்தி கொண்டே இல்லாமல் இங்க கிளம்பி முதலில் வா , பிறகு நான் விவரம் சொல்றேன் , இப்பொழுது நிறைய வேலை இருக்கு , ஸோ நீ தனியே கத்தி கொண்டே இருப்பியாம் நான் கால் கட் செய்ய போறேனாம் ஓகே  , என்று அவளுக்கு பதில் கூறிவிட்டு அடுத்து ஒரு முடிவுக்கு வந்தவனாக  கவிதாவின் தந்தைக்கு கால் செய்ய நம்பர் டைப் செய்தான்.

இங்கே கவிதவிற்கோ , வேளையில் கூட கவனம் செல்லவில்லை , ச்ச எப்படி ஒரு காரியத்தை முட்டாள் தனமாக செய்து இருக்கிறேன் , கீர்த்தி கோபபடுவதில் தவறு ஒன்றுமே இல்லை , என்னை சொல்ல வேண்டும் , எல்லாம் என் விதி , இதில் யாரையும் குறை சொல்லமுடியாது என்று ஒரு வித அலுப்புடனே ஆபீஸ் வொர்க் பார்த்தவள் அதற்கு மேல் முடியாமல் போக பர்மிசன் வாங்கி கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டாள். 

அடடா வா கவி , என்னடா இன்று சீக்கிரம் வந்துவிட்டாய் போலயே என்று கேட்ட அம்மாவிடம் , அது ஒன்றும் இல்லைம்மா கொஞ்சம் லேசாக தலைவலி அதான் என்று
சமாளித்த மகளினை , என்னடா இப்பொழுதெல்லாம் அடிக்கடி தலை வலி வர மாதிரி இருக்கேடா , என்று கூறிவிட்டு அவள் சின்ன புன்னகை செய்ய , 

அம்மா , ஏன் இப்படி , பொண்ணு தலைவலி சொன்னால் விழுந்து விழுந்து கவனிப்பீர்கள் , இப்ப என்னவென்றால் சிரித்து கொண்டு நிற்கிறீர்கள் என்னம்மா , அப்பா வரட்டும் அப்பொழுது பார்த்து கொள்கிறேன் உங்களை என்று திரும்ப நடேசன்  உள்ளே வர சரியாக இருந்தது . 

அப்பா , பாருங்க அம்மா இப்படிஎன்று அவள் மூச்சு விடாமல்  முழுவிவரத்தையும் சொல்ல , அவரும் அவளை பார்த்து புன்னகைத்து வைத்தார் , என்னப்பா நீங்களுமா , போங்கள் நான் போறேன் என்று கோபித்து கொண்டு திரும்பியவளை அது இல்லைடா கண்ணு , இப்பொழுது அம்மாவை பகைத்து கொண்டால் அடுத்து நைட் சாப்பாடு என்ன செய்வது அதான் என்று மகளை சமாளித்து கொண்டே லட்சுமியை பார்த்து இருவரும் கவியை பார்த்து சிரித்தனர். 

என்னவோ இதில் இருக்கிறது என மனதில் எண்ணி கொண்டே , சரிப்பா நான் சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்க போகிறேன் , பிறகு பேசலாம் என தன் அறைக்குள்  வந்தவளுக்கு 
அப்படி என்னதான் நடந்து இருக்கும் , அவள் யோசித்து கொண்டே படுக்கையில் விழ , என்னவோ கத்திரிக்காய் மலிந்தால் கடைத்தெருவுக்கு வராமலா போய்விடும் அப்பொழுது பார்த்து கொள்ள வேண்டியது தான் , நமக்குதான் கீர்த்தியை சரி செய்ய கூட முடியாத அளவு தலைக்கு மேல் வேலை இருக்கு , இதில் இதை வேற யோசிப்பானேன்  என்று மனதினை அமைதி படுத்தி கொண்டு யோசிக்க ஆரம்பித்தாள். 

அங்கே வெளியே , என்னங்க நீங்கள் போனில் கூறிய அனைத்துமே உண்மை தானா , ஆனால் அப்பொழுதே நினைத்தேன் இந்த மாதிரி எதையாவது மனதில் வைத்து கொண்டு தான் இவள் தள்ளி போடுவாள் என்று எப்படியோ ஒரு வழியாக அந்த தம்பியே ஒத்து கொண்டதே ரொம்பவும் நல்லது என்று பேசிய மனைவியிடம் , 

இன்னும் என்ன தம்பி ,  மாப்பிள்ளை என்றே கூறலாம் , தங்கமான பிள்ளை என்னிடம் எவ்வளவு தெளிவாக பேசினான் தெரியுமா , அனைத்து விவரங்களையும் மரியாதையாக பேசிய விதத்தில் நாமே பார்த்து இருந்தால் கூட இப்படி ஒரு பையனை பார்த்து இருப்போமா என்று தெரியவில்லை லட்சுமி , என்னவோ பாவம் பிள்ளைகள் இவ்வளவு காலம் பிரிந்து இருந்ததே போதும் , உடனே பேசி முடிக்க வேண்டியது தான் 
நமது வேலை ,

என்னங்க , எதற்கும் மாப்பிளையின் வேலை , குடும்பம் ஒரு முறை விசாரிக்க வேண்டும் அல்லவா , 

இதெல்லாமா நீ கூறவேண்டும் , அதெல்லாம் அந்த தம்பி கிளம்பிய அடுத்த ஒருமணி நேரத்தில் நான் விசாரித்து விட்டாகியது , எந்த பிரச்சினையும் இல்லை , நீயாக கவியிடம் இப்பொழுது ஏதும் கூறவேண்டாம் புரிந்ததா ,

சரிங்க நான் பார்த்து கொள்கிறேன் , அவர்கள் எப்பொழுது வீட்டிற்கு வருவார்களாம் , என்று அவள் துவங்க 

நாளை அல்லது அதற்கும் மறுநாள் , நீ எதற்கும் இப்பொழுதே ஏற்பாடு வேலைகளை பார்க்க துவங்கி விடு என்று தங்கள் ஆசை மகளின் திருமணத்திற்கு வேண்டியவற்றை செய்ய ஆரம்பித்தனர். 

கீர்த்தி வீட்டிலோ  என்ன தரகரே , பையனுக்கு பொண்ணு பாருங்கள் என்று கூறி மாதகணக்கில் ஆகிவிட்டது , நீங்கள் ஒன்றும் காட்டிய பாடில்லை , 

அது  இல்லைம்மா , நல்ல வரனாக வர வேண்டாமா அதான் , இப்பொழுது பாருங்கள் எல்லாம் டாக்டர் வரன்லாம் இருக்கு , நீங்கள் பார்த்து ஓகே சொன்னால் போதும் உடனே பேசிவிட வேண்டியது தான் , என்று போட்டோக்களை காட்ட , அதில் கவிதாவின் போட்டோ இருக்க , அந்த தாய்க்கோ மிகவும் சந்தோசம் ஆகிவிட்டது , 

தரகரே , இந்த பொண்ணுதான் கண்டிப்பாக நம்ம வாசுவிற்கு சரியான ஜோடி , நீங்கள் உடனே பேசி விடுங்கள் என்றவளிடம் , ஐயோ சாரிம்மா , இந்த பொண்ணு போட்டோ இதில் எப்படி கலந்தது என்று தெரியவில்லை , இவர்கள் நம்மளுடைய ஆட்கள் இல்லை , சாரிம்மா மன்னித்து கொள்ளுங்கள் , நீங்க வேற பாருங்கள் என்றவரிடம் , 

அதெல்லாம் ஒன்றும் தேவைஇல்லை , ஜாதி என்ன பெரியதா , அனைவரும் மனித ஜாதி தான் , அந்த பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்கா , எங்கள் வீட்டுக்கு ஏற்ற மருமகள் இவளே தான் , புரிந்ததா  நீங்கள் அவர்களிடம் சம்மதம் கேட்டு விட்டு வாருங்கள் , இப்பொழுது கிளம்புங்கள் என்று முடித்து விட்டாள். 

அங்கோ,  அப்பாடா ஒருவழியாக கவிதாவின் அப்பாவிடம் பேசியது போல் , அம்மாவிடவும் சொல்லிவிட வேண்டியது தான் என ஆர்வத்துடன் உள்ளே நுழைந்தவனை தாண்டி தரகர் செல்வதை கவனித்து கொண்டே உள்ளே வந்தவனை 

வா வா கீர்த்தி , நல்ல நேரத்தில் தான் வந்திருக்கிறாய் , உனக்கு ஏற்ற மாதிரி பொண்ணு பார்த்து இருக்கிறேன் என்று அவள் துவங்க , அம்மா நான்தான் எனக்கு டைம் கொடுங்கள் என்று கூறினேனே அதற்குள் , நானாக போகவில்லை வாசு , நம் தரகர் முன்னாடி கொடுத்ததை கொண்டு வந்து இருக்கிறார் , பட் நான் உனக்கு பார்த்திருக்கும் பெண்ணை பார்த்தால் நீ வேண்டாம் என்று யோசிக்க கூட மாட்டாய் , அப்படி ஒரு அழகு , அறிவு , தைரியம் எல்லாமே....

அம்மா போதும் போதும் , அந்த பெண்ணை பற்றி எனக்கு என்ன வந்தது , விடுங்கள் இந்த பேச்சினை,

சரி, வாசு நீ வீட்டிற்குள் வந்த வேகத்தினை பார்த்தால் ஏதோ முக்கியமாக பேச வந்தது போல் இருந்ததே , சொல்லுடா என்ன அது , 

ஹ்ம்ம் , முக்கியமான விசயமே தான் , வந்து...அது வந்து....

அடடா , என் மகன் வாசுதானா இது பேசுவதற்கு யோசிக்கிறான் நம்பவே முடியவில்லை , 

அம்மா , நீங்கள் வேறு , சரி நான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று...

அப்பாடா இப்பொழுதாவது இந்த எண்ணம் வந்ததே மிகவும் சந்தோசம் , சரி அடுத்து பொண்ணு யாருன்னு சொல்றியா 

அம்மா, அது வந்து அன்று நம் வீட்டிற்கு கூட நீங்கள் அழைத்து வந்திர்களே , கவிதா...

சொல்லு கீர்த்தி , அந்த பொண்ணை தான் நானும் அவர்கள் வீட்டில் பேசிவிட்டு கூறுங்கள் என்று தரகரிடம் கூறி அனுப்பினேனே , அவளுக்கு என்ன சொல்லு...

அம்மா , ரொம்ப சந்தோசம் , ஒரு வழியாக நீங்களாகவே நல்ல முடிவு தான் கொண்டு வந்து இருக்கீங்க , ஸோ ஹாப்பி , அவளை தான் நானும் மனைவியாக இவ்வளவு நாட்களும் என் மனதில் வைத்து இருக்கிறேன் , நான் கல்லுரி தினங்களில் உங்களிடம் கூறியதும் இவளை பற்றி தான்ம்மா , 

அப்படியா ரொம்ப நல்லது  வாசு , நல்ல பெண்ணாக தான் பார்த்து இருக்கிறாய் , நீ பாட்டுக்கு கழுதை மாதிரி எதையாவது கூட்டி வந்து விடுவாயோ என பயந்து கொண்டே இருந்தேன், அது மட்டும்  இல்லாமல் , அவள் அன்று வீட்டிற்கு வந்த பொழுதே இருவரும் முதல் பார்வையிலே அதிர்ந்து நின்றதும்   , என் பெயரை நான் கூறாமல் அவளே கூறியது , இருவரும் மாற்றி மாற்றி ஏக்கமாக பார்த்து கொண்டது இதையெல்லாம் அன்றே கவனித்த பொழுது ஏதும் இருக்குமா என்று கூட நினைத்தேன் , இறுதியில் அது தான் உண்மை என்றாகிவிட்டது , நல்லது , சரி அப்பாவிடம் நான் பேசிவிட்டு அவர்கள் வீட்டிற்கு நாளைக்கே சென்று விடவேண்டியது தான். ஏதோ இப்பொழுதாவது ஒரு முடிவிற்கு வந்தியே சந்தோசம் வாசு ,சரி அவர்கள் நம்பர் சொல்லு என்று குதுகலமாக  கூறியவளிடம், 

அந்த கவலை உங்களுக்கு எதற்கும்மா , நானே அவளுடைய தந்தையிடம் அனைத்தையும் விவரமாக கூறிவிட்டேன் , நாளை நாம் சென்று நேரில் பார்த்து திருமண தேதி குறிப்பது தான் பாக்கி என்று துள்ளலுடன் கூறிய மகனை பார்த்து , சிரித்து கொண்டே இப்பொழுது தான் வாசு மனசுக்கு நிம்மதியாக இருக்கு , உன் வாழ்நாள் முழுவதும் நீ இப்படி சிரித்து கொண்டிருந்தாலே போதும் டா , சரி சரி சின்ன பையன் நீ என்ன விவரம் சொன்னியோ , நான் ஒருமுறை என் சம்பந்தியிடம் பேசிவிடுவது தான் நல்லது , நீ சென்று சாப்பிடு என்று கூறிவிட்டு தன் வேலைகளை சுறுசுறுப்பாக பார்க்க சென்ற தாயை பார்த்து, அம்மாவையும் இவ்வளவு நாள்  கஷ்டபடுத்தி இருக்கிறோமே  , என்று மனதில் நினைத்து கொண்டே சாப்பிட்டு விட்டு வந்து கட்டிலில் விழுந்தான்.

மேஜையில் கவிதா போட்டோவை பார்த்தவனுக்கு மனம் எங்கேயோ தாவியது, இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு இதே வீட்டில் இதே கட்டிலில் அவளுடன் நான்  என்று நினைத்து பார்க்கவே இன்பமாக இருந்தது , 

மணி 8.30தான் ஆகுது , சரி கவி டியர் என்ன செய்றான்னு தெரிஞ்சா நல்லா இருக்குமே, காலையில் கூட வருத்ததுடன் சென்றாலே  பாவம் சரி என்ன செய்யலாம் என்று யோசித்தவன் , ஐடியா வந்தவனாக அவளுக்கு கால் செய்தான் . 

கட்டிலில் படுத்து யோசித்துக்கொண்டு இருந்த கவிதா , போன் சத்தம் கேட்க , யாராக இருக்கும் என்று யோசித்து கொண்டே பார்த்தவளுக்கு கீர்த்தி நம்பர் வரவும் சந்தோஷத்தில் துள்ளி குதிக்காத குறையாக , ஒரு வேளை  மன்னித்து இருப்பானோ என யோசித்து கொண்டே ஹலோ சொல்ல போனவளை தடுத்தது அவனது குரல். 

ஹாய் , காவியா செல்லம் என்ன செய்ற , மார்னிங்ல இருந்து கால் செய்யவில்லை என்று கோபமாக இருக்கியா , சரி மன்னிச்சுடு குட்டிம்மா , ஸோ அதற்கு தண்டனையாக ஹ்ம்ம்ம்ம்மா , ஹ்ம்ம்ம்ம்ம்மா  இந்த முத்தத்தினை வைத்து கொள் என்று அழுத்தி முத்தமிட்டான். 

இப்போ சொல்லு டியர்  என்ன செய்ற , சாரி டா , மார்னிங் ஒரு பழைய கேஸ் அதான் சொன்னேனே கவிதா , அதான் அவளேதான் வந்து ஒரே தொல்லை , என்னை ஏற்று கொள்ளுங்கள் என்று வீணாக கெஞ்சி என் டைம்யும் சேர்த்து வேஸ்ட் பண்ணிவிட்டாள் அதான் , ஸோ சாரி என்று கூறிவிட்டு மறுபடியும் இப்ப பண்ற கிஸ் உன் லிப்ஸ்காம் ,எங்க காட்டு , ஹ்ம்ம்ம்ம்மா........... ஓகே டா நவ்  உன் லவர்  கீர்த்தியை மன்னித்து நீயும் கிஸ் பண்ணுவியாம் , எங்க பண்ணு ஐ யம் வைடிங்க் டியர் , என்று அவன் கூறி கொண்டே போக , 

அவன் பதித்த முத்தத்தினில் மெய் மறந்து நின்றவள் , ஹலோ நான் கவிதா பேசுகிறேன் என்று மெதுவாக கூறினாள் , 

என்னது , ஹலோ யாரு கவி....கவிதாவா , ஏய் உன்னைய யாரு பேச சொன்னது , நான் என் லவர் காவியாவிற்கு தானே போன் செய்தேன் ,நம்பர் மாற்றி போட்டு விட்டேன் போலயே ,  நீ எப்படி....என்று அவன் கோபத்துடன் வினவ , 

நீங்கள் தான் போன் செய்திர்கள் , நான் யாருன்னு கேட்பதற்குள்ளாகவே நீங்க பாட்டுக்கு என்னனவோ என்று அவள் சிறு வெக்கத்துடன் நிறுத்தி கொள்ள , 

சரி நான் தான் அவள் என்று நினைத்து பேசிக்கொண்டே போனேன் , அட்லீஸ்ட் நீயாவது ஸ்டாப் பண்ணுங்க சொல்லிருக்கலாம் அல்லவா , இதுல நான் செய்த கிஸ் வேற வாங்கிவிட்டு , ச்ச இப்ப நான் என் லவ்வரிடம் என்ன வென்று சொல்வேன் , இங்க பாரு ஒழுங்கா நான் செய்த கிஸ்லாம் திருப்பி கொடுத்து விடு சொல்லிவிட்டேன்....என்று அவன் பதிலுக்கு கேலியாக பேச , 

அவன் கேட்டதன் அர்த்தம் புரிந்த கவிதா , என்னது? என்று சத்தமாக மிரட்டும் தொனியில் கேட்க , அதானே இப்பொழுது மட்டும் தெளிவாக பேசுவடி,  என  மனதில் நினைத்து கொண்டே , எதற்கு இப்பொழுது கத்துகிறாய்  , நான் அகைன் என் டார்லிங் காவியா என்று நினைத்து கேட்டு விட்டேன் போதுமா, நீ பாட்டுக்கு கற்பனை செய்ய வேண்டாம் புரிந்ததா , போனை வை என்று தானும் மிரட்டும் விதமாக வேண்டும் என்றே பேசிவிட்டு கால் கட் செய்தவன் , அப்பாடா எப்படியோ இன்று  கிஸ் பண்ணியாச்சு , இப்போ நிம்மதியாக தூங்கலாமா குட்டிமா என்று அவள் போட்டோவை பார்த்து கண்ணடித்து விட்டு , நாளைய விடியலை நோக்கி உறங்கினான் கீர்த்தி.................................................................................




ஹாய் பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருந்தா கமெண்ட் பண்ணுங்க  ஆர் இந்த FB Page லைக் பண்ணுங்க 


ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் சண்டே  போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......



Thankyou 


இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI

Sunday, 17 April 2016

காதல் கவிதைகள் நீ !

Chapter 11




.................................அந்த சைடில் , கீர்த்திக்கோ ! அப்பாடா ஒரு வழியாக மேடம்க்கு இப்பொழுதாவது உண்மை  புரிந்ததே , இன்னும் ஒரு  மாதத்தில் அனைத்து ப்ரொப்லெம் க்ளியர் செய்து எப்படியாவது இவளை திருமணம் செய்து விடவேண்டும் , இவ்வளவு நாட்கள் தூரத்தில் இருந்த பொழுது கூட தெரியவில்லை , ஆனால் இந்த இரண்டு நாட்களாக அருகில் வந்து என்ன பாடுபடுத்திவிட்டால் , இனியும் இவளை பிரிந்து நம்மால் வாழ இயலாது என அவன் கட்டிலில் இருந்த அவளது புகைபடத்தினை பார்த்து கண்ணடித்து கொண்டு நிம்மதியாக உறங்க போனான் நமது ஹீரோ கீர்த்தி.

அவன் கூறிய வார்த்தைகளில் செய்வது அறியாமல் திகைத்து நின்ற கவிதாவிற்கோ , தன் வாழ்க்கையை தானே கெடுத்து கொண்டது எண்ணி கண்களில் நீர் கோர்க்க படுக்கையில் விழுந்தாள். 

மறுபடியும் போன் அலற , யாராக இருக்கும் என எடுத்தவளுக்கு பாரதி என்று தெரிய , இவளால் தானே நம் வாழ்க்கையும் இப்படி என்ற ஆத்திரம் தோன்ற , அவசரமாக கால் அட்டென் செய்தவள் நான் உனக்கு என்னடி பாவம் செய்தேன் , ஏன் என்னுடைய வாழ்வை இப்படி பழிவாங்கி விட்டாய் என்று  கோபமாக பேசிக்கொண்டே போக , அந்த சைடு பாரதி அழ துவங்கி இருந்தாள் . 

கவி! ப்ளீஸ் டி , நான் செய்தது ஏதோ நீங்கள் சிறிது நாள் பிரிந்து இருந்து  பிறகு சேர்ந்து விடுவிர்கள் என எதிர்பார்த்து தான் , ஏதோ என்னை நிராகரித்த கீர்த்திக்கு நான் தரும் தண்டனை என நினைத்துவிட்டேன் டி, பட் நீங்கள் இப்படி 3வருடமாக பிரிந்து வாழ்வீர்கள் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை , ஈவன் நீங்கள் பிரிந்து வாழ்வது கூட போன ,மாதம் என்னுடைய திருமணத்திற்காக நம் தோழி கீதாவுக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற பொழுது அவள் கூறி தான் தெரியும் , இப்பொழுது கூட என்னுடைய சுயநலத்திற்காக உன்னை பிரித்ததை எண்ணி  மிகவும் வருந்தினேன் , அதனால் தான் நீ மீண்டும் கீர்த்தியை மீட் செய்து காதல் என்று பேசினால் கண்டிப்பாக உங்களது ப்ரொப்லெம் பற்றி ஒரு  முடிவிற்கு வருவிர்கள் என்று எண்ணி தான்,  நான் அன்று உனக்கு கால் செய்து அவனிடம் சென்று என் காதலை சொல்லுமாறு வற்புறுத்தியதே  , ப்ளீஸ் நீ மட்டும் மனதார என்னை மன்னிக்கவில்லை என்றால் , கண்டிப்பாக என்னால் நிம்மதியாக வாழ முடியாது டி என்று மனதார அழுபவளை அதற்கு மேல் துன்ப படுத்த முடியவில்லை கவியினால். 

சரி டி , நீ விடு நான் பார்த்து கொள்கிறேன் , நீ சொல்லியதை அப்படியே நான் நம்பியது என்னுடைய தவறு , இதில் உன்னை குற்றம் கூறி ஒன்றும் ஆக போவதில்லை, சோ நான் தான் எப்படியாவது சரி செய்ய வேண்டும், பட் நீ திருமணத்தினை வைத்து இவ்வாறு இந்த நேரத்தில் அழுது கொண்டிருப்பது மிகவும்  தவறு , நீ சென்று துங்கு சரிதானா என்று தன் தோழியை சமாதானம் செய்தாள் . மேலும் அவளை தேற்றும் விதமாக என்ன மேடம் என்னை திருமணத்திற்கு அழைக்கும் ஐடியாவே இல்லையா என்று இயல்பாகவே பேசி கொண்டிருக்க , 

கவி , இப்பொழுது கூட என்னை இவ்வளவு எளிதாக மன்னிக்க உன்னால் மட்டுமே முடியும் டி , கண்டிப்பாக கீர்த்தி உன்னைமன்னிப்பார் , நான் வேண்டுமானால் பேசி பார்க்கவா என்றவளை தடுத்து , அதெல்லாம் வேண்டாம் டி , நானே சரி செய்கிறேன் என்று அவளை பேசி சமாதானம் செய்து விட்டு கால் கட் செய்தவளால் நிம்மதியாக உறங்க முடியவில்லை , நாளை எப்படியாவது கீர்த்தியை நேரில் பார்த்து சமாதானம் செய்ய வேண்டும் என்று அழுது கொண்டே உறங்க துவங்கினாள். 


காலையில் எழுந்தவளுக்கு சரியாக தூக்கம் இல்லாததால் தலை அதிகமாக வலித்தது , இருப்பினும் தன்னுடைய இஷ்ட பிள்ளையாரை வேண்டி கொண்டு தயாராகி கீழே வந்தவளால் , தாயின் கவலைக்கு பதில் சொல்லி சமாளிக்க முடியவில்லை. 

கவி, என்னதான் நினைத்து கொண்டிருக்கிறாய் நீ , உன் வயது பெண்கள் எல்லாம் திருமணம் செய்து பிள்ளை, குடும்பம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது நீ எங்களுடைய ஒரே பெண் , உனக்கு மணம் செய்து வைக்க எங்களுக்கு விருப்பம் இருக்காதா , நீ கேட்ட மாதிரி உன்னை தான் வேலைக்கும் அனுப்பிவிட்டோம் , இன்னும் நீ ஒத்து கொள்ள வில்லை என்றால் , நாங்கள் என்ன தான் செய்வது , எங்களை பற்றி நீ நினைத்து கூட பார்க்க மாட்டேன் என்கிறாய் , இனியும் உன்னை கேட்டு பயனில்லை என்று புலம்பி கொண்டிருந்த தாயின் வருத்தம் கவிக்கு புரியாமல் இல்லை, 

அம்மா தயவு செய்து இன்னும் 2மாதம் , அதற்கு பிறகு கண்டிப்பா நான் லேட் செய்யபோவதில்லை ப்ளீஸ்ம்மா , என்று அழகாக கெஞ்சும் மகளை அதற்கு மேல் மிரட்ட மனம் வரவில்லை அந்த தாய்க்கு ,  கவி நீ பயப்படுவது போல் திருமணம் அவ்வளவு கடினமான விஷயம் இல்லைடா  என்று தன் பெண் திருமணத்திற்கு பயப்படுவதாக எண்ணி கொண்டு அவள் பேசி கொண்டிருக்க  , கவிதாவிற்கோ மனம் முழுவதும் கீர்த்தியிடமே இருந்தது அவனை சரி செய்யும் வழியை யோசனை செய்துகொண்டு.சரிங்கம்மா நான் கிளம்புறேன் , வொர்க் டைம் ஆகிவிட்டது அப்பாவிடம் கூறிவிடுங்கள் என்று தாயினை சமாளித்து விட்டு , அவனது அலுவலகத்தினை அடைந்தாள்,

அங்கோ , கீர்த்தி எப்படியும் இன்று அவள் நேரில் வருவாள் என எதிர்பார்த்தே கிளம்பினான். அவன் அணிந்திருந்த கருப்பு நிற ஷிர்ட்டும் , நீல நிற ஜீன்சும் அவனை ஒரு மாப்பிள்ளை தோரணையில் காட்டியது. 

அம்மா நான் கிளம்புகிறேன் வொர்க் இருக்கு என்ற மகனின் குரலில் அவனை கவனித்தவள் , என்னடா வாசு , ஏதும் விஷயமா பார்க்க மாப்பிள்ளை மாதிரி இருக்கிறாய் , அப்ப சரி பொண்ணு பார்த்துவிட வேண்டியது தான் , என்னங்க நான் சொல்வது சரிதானே என்று கேசவனை இழுக்க , 

ஆமாம் வாசு ,அம்மா சொல்வதும் சரிதான் , அப்படி இல்லை ஏதும் லவ் அது இதுஎன்று இருந்தால் அப்பாவிடம் சொல் , நான் உன் அம்மாவை சரி செய்து விடுகிறேன் சரியா என்று கேசவன் கீர்த்தியிடம் போட்டு வாங்கும் விதமாக பேச , அப்பா நல்லா அம்மாவிடம் போட்டுவிட பிளான் செய்றிங்கன்னு தெரியுது, பட் நல்ல அம்மா  இல்லை ,இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்கள் கண்டிப்பாக நல்ல விஷயம் நானே சொல்கிறேன் என்று அவர்களை அப்பொழுது சமாளித்து விட்டு கவியை இன்றும் பார்க்க போகும் ஆவலுடன்  அலுவலகம் விரைந்தான். 

மே ஐ கம் இன் சார்

யா, எஸ் கம் இன் வாசவி

சார் , உங்களை பார்க்க கவிதா , அன்று கூட வந்தாங்களே , அவர்கள் உங்களை பார்க்க வந்து இருக்காங்க , ஏதோ முக்கியமான விஷயம்... என்று அவள் தொடர , மனதினில் நம்ம கெஸ்ஸிங் எப்போ தப்பு ஆனது என்று சிரித்து கொண்டு,  ஓகே வாசவி நான் சொல்றப்ப அவர்களை அனுப்புங்கள்  போதும், அது வரைக்கும் வெயிட் செய்ய சொல்லிடுங்க, வேற ஒன்றும் சொல்லவேண்டாம் ஓகே  .

ஓகே சார், 

நெக்ஸ்ட் இன்று ஏதும் முக்கியமான பைல்ஸ் பார்க்க வேண்டியது இருக்கா , 

இல்லை சார், பட் அடுத்தவாரம் கிளையன்ட் மீட்டிங் , அதற்கு ரெடி பண்ண வேண்டிய வொர்க் இருக்கு சார் , 

ஓகே , அதை நாளை பார்த்து கொள்ளலாம் , மார்னிங் நீங்களே மேனேஜ் பண்ணிடுங்க , நான் சொல்லும் போது அவர்களை அனுப்புங்கள் , ஸோ இப்ப நீங்க கிளம்பலாம் என்று அவளை அனுப்பிவிட்டு வழக்கமாக பார்க்கும் ,மெயில் வொர்க் செக் செய்து விட்டு ஆபீஸ் சிசிடிவீ  கேமரா ஸ்க்ரீன் ஆன் செய்து அதில் கவியின் அசைவுகளை கவனிக்க தொடங்கினான்.

அது எப்படி டியர் , சொல்லி வைத்த மாதிரி ப்ளாக்ல டிரஸ் பண்ணிருக்க , ஹ்ம் இந்த அளவு ஒற்றுமை இன்றும் குறையவில்லையே என மனது மிகவும் சந்தோஷபட்டது.

வாசவி , கவியின் அருகில் செல்ல அவள் உள்ளே வர  ரெடி ஆனது போல் எழுந்து நிற்பதும் தெளிவாக தெரிந்தது. சார் வொர்க்ல இருக்காங்க மேம் , நீங்க வெயிட் செய்ங்க என்று கூறிவிட்டு வாசவி சென்று விட சோர்வுடன் கவி அமர்வதும் தெரிய  , கீர்த்தியின் பார்வை முழுக்க கவியினது செயல்களில் இருந்தது. 

அவள் முகம் கலங்கிஇருந்தது கீர்த்திக்கு தெளிவாக தெரிந்தது. அவள் அடிக்கடி நேரம் பார்ப்பதுமாக கன்னத்தில் கை வைத்து அமர்ந்து இருந்தது , கவலை கொண்டிருக்கும் , புள்ளிமானை போல் காட்சி அளித்தது. 

அவளுடைய முடி காற்றில் ஆட , அவள் சூடிருந்த பூவின் வாசம் அவனது ரூம்க்குள் வருவது போல் உணர்ந்தான், கருப்பு வண்ணத்தில்  ரெட் கலரில் துப்பட்டா தோகை விரித்த மயிலினை போன்று இருந்தது. அவளது காதணிகள் காற்றில் ஆட அதில் இருந்து கூட சத்தம் வருவது போல் உணர்ந்தான் கீர்த்தி. உதட்டு சாயம் பூசபடாத அவளது ஆரஞ்ச் நிற உதடுகள் என்னவோ செய்ய அடுத்து கழுத்து என்று பார்வையை கீழே இறக்கியவன் , உள்ளுணர்வு எச்சரிக்க போதும் கீர்த்தி சென்சார் போட்டுடலாம் , இதற்கு மேல் தப்பு என்று மனதிற்குள் எண்ணி கொண்டு  , ஸ்க்ரீனில் அவளை பார்த்து மெய் மறந்து அமர்ந்திருந்தான் அவன். 

நேரம் ஆக ஆக , அவள் பதற்றம் அடைவது நன்றாகவே தெரிய , அவளை அழைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தவனுக்கு போன் கால் வர அதை அட்டென் செய்து பேசி கொண்டே கவனித்து கொண்டிருந்தான் இவளை'. 

இங்கோ , கவிதாவிற்கோ ஒரு வேலை நம்மை பார்க்க விருப்பம் இல்லாமல் தான் இப்படி வெயிட் செய்ய சொல்லிருக்கானோ , நம்மை பார்க்காமலே அனுப்பி விடுவனோ என்று சந்தேகம் தோன்ற , அவளது கண்கள் கலங்க தொடங்கின , ச்ச வெளியிடத்தில் என்ன இது அழுகை என்று தன்னையே நொந்து கொண்டு அவள் அவசரமாக கைக்குட்டை கொண்டு துடைப்பதும் தெரிய , உடனே பதறியவன் , போனில் பேசியவரிடம் முக்கியமான வொர்க் இருக்கு நான் கூப்பிடுகிறேன் என்று கட் செய்து விட்டு , வாசவியிடம் அவர்களை உள்ளே அனுப்பும்படி கட்டளை இட்டான். 

உள்ளே வந்தவள் , கீர்த்தி என்று துவங்க , திஸ் இஸ் மிஸ்டர் கீர்த்தி வாசன் , என்ன வேண்டும் சொல்லுங்கள் என்று  அவன் பேச , 

கீர்த்தி ப்ளீஸ் , நான் செய்தது மிக பெரிய தப்பு தான் , ஆனால் அதற்காக இனியும் உங்களை பார்க்காமல் என்னால் பிரிந்து வாழமுடியாது , என்று அவள் பேசிக்கொண்டே போக, 

என்னது , சரியாக கேட்க வில்லை என அவன் அழுத்தம் கொடுத்து பேசினான். 

இல்லை , அதுவந்து , இனியும் உங்களை பார்க்காமல்....

ஸ்டாப் செய்ரீங்களா மேடம்  , இந்த 3வருடம் எங்க இருந்த நீ , நான் எப்படி இருக்கேன் என்றாவது கொஞ்சம் யோசித்து பார்த்து இருப்பியா ,அப்படியே  பேச வந்துவிட்டாள் என்று அவன் அலட்சியமாக பதில் கூற, 

ஹ்ம்ம் உங்களை பார்க்க நேரில் வரவில்லை தான் , ஆனால் தினமும் உங்களது போட்டோ முன்பு பேசி கொண்டு தானே இருந்தேன். 

 ஓ , அப்படிங்களா  மேடம் , பேசாம அந்த போட்டோவையே திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டியது தானே , இங்க வந்து ஏன் என்னுடைய நேரத்தையும் வேஸ்ட் செய்ற, 

கீர்த்தி , ப்ளீஸ் நான் செய்தது மிக பெரிய தவறு தான் , பாரதி கூறியதை அப்படியே கேட்டது என் தப்பு தான் , ஆனால் அதற்காக என்ன தண்டனை என்றாலும் ஏற்று கொள்ள தயாராக இருக்கிறேன் , ப்ளீஸ் என்று அவள் கண் கலங்க , 

நம்ம கீர்த்திக்கு தான் , அவங்க லவர் அழுதா பொறுக்கமுடியாதே , ஸோ அதை உடனே தடுக்கும் விதமாக , இங்க பாரு , முதலில் இப்படி அழுது சாதிக்கலாம் என்று நினைப்பதை ஸ்டாப் செய்றியா என அவன் மிரட்டும் குரலில் பேச , 

அவனை அதிர்ந்து நோக்கினாள் கவிதா, இல்லை நான் ஒன்றும் நடிக்கவில்லை , என்று அந்த நேரத்திலும் அவனுக்கு பதிலடி கொடுக்க அவள் தயங்கவில்லை. 

அவள் அப்படி கோபமாக  பேசிய விதத்தில் மயங்கியவன், அடுத்த நிமிடமே இவள் முன்னால் மயங்காதே மனமே அமைதி கொள் என்று உடனே தன்னை கட்டுபடுத்தி கொண்டு , சரி நீ நடிக்கவில்லை , பட் அதற்காக உன்னை மன்னிக்கவும் முடியாது , கிளம்புறியா இப்பொழுது  என்று அவளிடம் பதில் கொடுத்தான் அவன். 

கீர்த்தி , கொஞ்சம் கன்சிடர் பண்ணகூடாதா , ப்ளீஸ் என்று தொடரபோனவளை, 

கிளம்புடீன்னு சொன்னேன் , என்று அதிரடி பதில் கொடுத்தான். 

அவன் , டி சொல்லிய விதம் அவளுக்கு ஏதோ உணர்த்த ,  என்னது டி யா என்று நிமிர்ந்து அவன் முகத்தினை பார்க்க, 

ஆமாம் , டி தான் , இப்பொழுது கிளம்புங்கள் மேடம் என்று ஒருவழியாக அவளை வெளியே அனுப்பிவிட்டு , தன் சீட்டில் அமந்தவனுக்கு , என்னடா கீர்த்தி , இவள் இப்படியே இன்னும் 2முறை நேரில் வந்துவிட்டு போனால் என்றால் , ஒருவாரம் கூட தாக்கு பிடிக்கமாட்டேன் போலயே என்று இறுதியில்  ஒரு முடிவிற்கு வந்தவனாக தன்னுடைய பள்ளி தோழிக்கு கால் செய்தான்.................................................




ஹாய் பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருந்தா கமெண்ட் பண்ணுங்க  ஆர் இந்த FB Page லைக் பண்ணுங்க 


ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் சண்டே  போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......



Thankyou 


இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI

Sunday, 10 April 2016

காதல் கவிதைகள் நீ !



ஹாய் பிரெண்ட்ஸ் இறுதியாக  என்னோட பேஜ்வியுஸ் 1100 வந்ததற்கு நீங்கள் மட்டும் தான் காரணம் , ஸோ தேங்க்ஸ் பார் யுவர் சப்போர்ட்.....தாங்க் யூ ஒன்ஸ் அகைன் பிரெண்ட்ஸ், ......


Chapter 10


...........................................நம் கல்லூரி கடைசி வருடம் அன்று கீர்த்தி பற்றி நான் கூறிய அனைத்துமே பொய் டி , ப்ளீஸ் அவ்வாறு செய்ததற்கு நீ முதலில் என்னை மன்னிக்க வேண்டும்  , பட் அது எல்லாமே பொய் மட்டும்தான் என்று கூற கவிதாவிற்கோ தலையே சுற்றியது மனதினில் கீர்த்தியின் முகம் நியாபகம் வர , என்னது பொய்யா என்னத்தை டி சொல்லி தொலைக்குற முதலில் தெளிவாக சொல்லு  பாரதி .


இல்லை கவி , நான் உன்னிடம் மன்னிப்பு கேட்பதற்காக தான் இப்பொழுது ஃபோன் பண்ணிருக்கேன் டி, முதலில் என்னை மன்னித்து விடு , என வருத்தமான குரலில் பாரதி பேசி கொண்டே போக கவிதாவிற்கோ மூச்சடைத்து போனது .


உன்னிடம் கீர்த்தி பற்றி தவறாக வேண்டும் என்றே கூறியது நான்தான் டி, ஏன் என்றால் கீர்த்தியை நானும் தான் அப்பொழுது காதலித்தேன் , ஆனால் அவனுக்கு என்னமோ பார்வை முழுவதும் உன்னிடம் தான் , பட் என் மனசுக்கு அப்போ அது புரியவில்லை , அதான் அவனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று எண்ணிவிட்டேன் , அதான் அன்று அவ்வளவு தவறாக அவரை பற்றி கூறினேன் , அப்பொழுது நான் பொறாமையில் செய்த செயலால் இன்று வரை நீ தனியே வாழ்வதற்கு நான் காரணம் ஆகிவிட்டேன் , என்னை மன்னிக்க முடியும் என்றால் தயவு செய்து மன்னித்து விடு ப்ளீஸ் டி,  அவள் பேசிக்கொண்டே போக அதிர்ச்சியில் தொலைபேசியினை நழுவ விட்டு கட்டிலில் விழுந்தவளுக்கு  அன்றைய நாட்கள் மனதிற்குள் வந்தன

அன்று , ஹாய் கீர்த்தி நான் கவி பேசுறேன் , 

சொல்லுங்கள் மேடம் , என்ன காலேஜ் வர ஐடியாவில் மேடம் இல்லையோ, டைம் பார்த்திங்களா இல்லையா , 

இல்லை கீர்த்தி , இன்று நாங்கள் அனைவரும் எங்கள்  குலதெய்வ கோவிலுக்கு போறோம்  , சோ நானும் ப்ரியாவும் வரமாட்டோம்  , அதான் அதை உன்னிடம் சொல்லிவிடலாமே என்று தான் ஃபோன்செய்தேன் , எப்படியும் நான் எப்பொழுது வருவேன் என்றுதானே காத்துகொண்டு இருப்பாய் அதான் , 

அடடா , உனக்காக வெயிட் செய்றேன்னு யார் சொன்னது , எப்படியோ இன்று நீ காலேஜ் வரவில்லை சோ நான் நிம்மதியாக மற்ற பெண்களை சைட் அடிக்கமுடியும் அப்பாடா !, தாங்க் காட் என்று அவன் கேலி செய்ய , 

ஓ அப்படிங்களா சார், நீங்க அப்படியே அங்க பாருங்க , நானும் இங்கே என்னுடைய அத்தை பையனுக்கு ஓகே சொல்லிவிட்டு வந்து விடுகிறேன் , சரிதானா மிஸ்டர்கீர்த்தி , என்று அவள்  பதிலுக்கு கேலி செய்ய , ஆளை விடுமா தாயே!, நீ செய்தாலும் செய்வ டி , உன்னையெல்லாம் ஒரு நாள் வரும் அப்ப இழுத்து வைத்து ..... ஹ்ம்ம் என இழுக்க , 

டேய் , நான் போக போவது கோவில் , ஸோ கொஞ்சம் உன்னுடைய இந்த எண்ணங்களை ஒதுக்கிவைத்து விட்டு போய் நல்லா படிக்குறீங்களா சார்  , என்று அவனுக்கு பதில் கூறினாலும் , அவன் கூறியதன் அர்த்தம் அவளை முகம் சிவக்க செய்தது. 

கவி , உன் பின்னாடியே , ஒருத்தன் சுற்றுவது உனக்கு புரியவில்லையா, என அவன் ஏக்கமாக கேட்பது கவிக்கோ புரியாமல் இல்லை, கீர்த்தி , இன்னும் 6 மாதம் தானே  , காலேஜ் முடித்து விட்டு , அடுத்து ஒரு வேலைக்கு சென்றதும், அம்மா, அப்பாவிடம் பெர்மிசன் பெற்று பிறகு  திருமணம் தான் , அதன் பின்....... என்று கூறிக்கொண்டே போனவள் நாக்கை கடித்து கொண்டு அமைதியாகிவிட ,சொல்லு கவி அப்புறம் ஹ்ம்ம்........ என கூற , சார் நான் ஃபோன் வைக்குறேன் இப்பொழுது  பை , என்று அவசரமாக காலை கட் செய்தவள் தன் மனதினை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தவித்து கொண்டு நிற்க  , என்னடி பண்ற இன்னும் ரெடி ஆகாமல் , என்ற தாயின் கேள்வியில் விழித்தவள்  இதோ 5மினிட்ஸ்ம்மா வந்து விட்டேன். என்று தன் வேலைகளை பார்க்க துவங்கினாள். 

விடுமுறையில் இருந்த நாளில் நடந்ததாக பாரதி சொன்ன விசயங்களே இன்றைய  பிரிவிற்கு காரணம் என்பது புரியவர , கண் கலங்க படுத்திருந்தவளுக்கு அடுத்த நாள் நினைவுகள் நினைவிற்கு வந்தன. 

அடுத்த நாள் , என்ன இந்த கீர்த்தி , நேற்று இரவு கால் கூட செய்யவில்லை , என்னதான் செய்வானோ , இன்று வகுப்புக்கு வரட்டும் இவனுக்கு இருக்கு என்று மனதினில் சிரித்து கொண்டே அவனுக்காக காத்திருந்த பொழுது  , அங்கு வந்த பாரதி இது' தான் சரியான நேரம் என அவளிடம் தன் முழு பொய் கதையை கூற தொடங்கினாள். 

கவி, நம் கீர்த்தியா இப்படி என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை டி , ச்ச அந்த பொண்ணு நம்ம கீர்த்தியை அவ்வளவு இறுக்கமாக பிடித்து கொண்டு போவதும் , அவளை கீர்த்தி தாங்கி பிடித்து அழைத்து செல்வதும் , நேற்று காலேஜ்கே இவர்கள் செயல் தான் பெரிய என்டேர்டைன்மன்ட் போ , இதெல்லாம் நீ கண்டு கொள்வதே கிடையாதா , என்று பாரதி ஏற்றிவிட , கவிதாவிற்கோ முகம் சிறிதாகி கொண்டே போனது , 

ஹே லூசு மாதிரி பேசாத டி , கண்டிப்பாக அந்த பெண்ணுக்கு எதாவது ப்ரொப்லெம் இருந்து இருக்கும் அதான் ஹெல்ப் செய்ய போயிருப்பாங்க  என்று பாரதிக்கு பதில் கூறினாலும் , மனதிற்குள் கலக்கமாக இருந்தது. 

ஹ்ம்ம்கும் அந்த பொண்ணு யாரோ என்றால் நீ சொல்ற மாதிரி இருக்கலாம் , அவள் வேற யாரும் இல்லை , நம்ம கிளாஸ்மேட் வசந்த் சிஸ்டர் தான் , அவனுக்கு இல்லாத அக்கறை அப்படி என்ன கீர்த்திக்கு சொல்லு , என்று பாரதி பேசிக்கொண்டே போக , கவிதாவிற்கோ தலை வலி அதிகமாகி கொண்டே போனது. அதிலும் அந்த பெண்ணை கூட்டி கொண்டு வண்டியில் ஏறும்பொழுது கூட வசந்த் கோபமாக தான் கீர்த்தியிடம் பேசினாங்க  , எனகென்னவோ இதில் கீர்த்தி ஏதும் அந்த பெண்ணிடம் தப்பாக அப்படி இப்படி என்று கூறிக்கொண்டே போக , பாரதி ப்ளீஸ் , இதுக்கு மேல கீர்த்தி பற்றி ஒரு வார்த்தை பேசினாலும் நான் அமைதியாக இருக்கமாட்டேன் பார்த்து கொள், தயவு செய்து இங்கிருந்து கிளம்புறியா , என்னை தனியாக விடு என்று அவ்விடம் விட்டு கவிதா நகர பாரதிக்கோ எதையோ சாதித்து விட்ட திருப்தி தோன்றியதை கவி பார்த்திருக்க வாய்ப்பில்லை. 

இந்த கீர்த்தி , போன் கூட எடுக்கவில்லை , என்னவாக இருக்கும் , ப்ரொப்லெம் என்றால் என்னிடம் சொல்லிருப்பானே, பட் இந்த பாரதி சொல்ற மாதிரி ஏதும் இருக்க கண்டிப்பாக வாய்ப்பு இல்லை , வரட்டும் கேட்டுவிடவேண்டியதுதான் என வகுப்பில் கூட கவனம் இல்லாது இருந்தவளை கலைத்தது , பக்கத்துக்கு வகுப்பினர் பேச்சு, 

ஹே!, நேற்று பார்த்தியா மச்சி , அந்த வானதி , அதான்டா நம்ம பக்கத்து கிளாஸ் வசந்த் சிஸ்டர் , அவளை இந்த கீர்த்தி எப்படிதான் கரெக்ட் செய்தான்னு ஒண்ணும் புரியவில்லை , ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நேற்று இருவரும் போனதை பார்த்தால் இவன் ஏதோ , கண்டிப்பாக எல்லை மீறி இருக்கவேண்டும் , அதான் அவள் மயங்கி விழ , இந்த கீர்த்தி தூக்கி செல்லாத குறை தான் போ, அது எப்படி டா இவனுக்கு மட்டும் இவ்வளவு எளிதாக மடங்குதுங்க ஏற்கனவே கவிதா இப்போ வானதி ஹ்ம்ம்   , நாமளும் தானே ட்ரை செய்தோம் என அவர்கள் அரட்டை அடித்து கொண்டிருப்பது தெளிவாக கவிதாவின் காதில் விழ, ஆக பாரதி கூறிய அனைத்தும் உண்மை தான் , கீர்த்தி துரோகம் செய்தானா என யோசித்தவளால் அதற்கு மேல் வகுப்பில் அழுகையை அடக்க இயலாமல் , ப்ரியாவிடம் பொய் கூறி கொண்டு வெளியில் வந்து பார்க்கில் அமர்ந்தவளுக்கு அழுகையை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. 

அவள் அழுது கொண்டிருக்க , அப்பொழுது தான் கல்லூரிக்குள் வந்த கீர்த்தி , இவளை பார்த்து  அதிர்ச்சியில் இங்க என்ன செய்கிறாய் என்பது போன்ற அர்த்தமான  பார்வை பார்த்துவிட்டு , வெயிட் பண்ணுடா என்று சைகையுடன்  வேற பில்டிங் நோக்கி நகர்வது தெரிய , கோபம் தலைக்கேற  அவன் அருகினில் விரைந்தாள். 

கீர்த்தி , உன்னிடம் முக்கியமாக நான் பேசவேண்டும் , என்று பேசிக்கொண்டே போக அவளிடம் நிற்ககூட நேரம் இல்லாமல் கவி ப்ளீஸ் இப்பொழுது இம்பார்டன்ட் வொர்க் இருக்கு , நீ கிளாஸ்க்கு போ நான் வந்து உன்னிடம் பேசுகிறேன் என்று அவன் கூறிய  பதிலை கூட கவனிக்காமல் , கவிதாவோ ஏன் உங்களுடைய புதிய லவர் வானதி மேடம் பார்க்க போகனுமா! என்று அவள் சந்தேக குரலில் கேட்க , அவளை அதிர்ச்சி கலந்த பார்வை பார்த்தான் கீர்த்தி. 

என்ன லவர்ரா , என அவன் கேட்க , ஏன் எப்படி தெரிந்தது என்று ஷாக் ஆகிவிட்டாய் போல ,அதான் நீங்க செய்த காரியம் நேற்று காலேஜ் முழுவதும் பரவியதே , இன்னும் என்னிடம் மறைக்க என்ன இருக்கு, சோ கிளாஸ் டைம்ல நான் , அப்புறம் மற்ற நேரங்களில் அவளா குட் கீர்த்தி , நேற்று நீங்கள் இருவரும் கல்லூரி என்று கூட பார்க்காமல் ச்ச  ,அதான்  பாரதி தான் தெளிவாக கூறிவிட்டாலே , என்று கவிதா பொறுமை இல்லாமல் வார்த்தை அளவு மீறி பேசிக்கொண்டே போக   ,

 சோ என்னை பற்றி நீ இவ்வளவு தானே புரிந்துவைத்து  இருக்கிறாய் அல்லவா , மிகவும் நல்லது , உன் பாரதி கூறிய அனைத்துமே உண்மைதான் , இப்பொழுது வழியை விடுகிறாயா நான் செல்லவேண்டும் , பட் சத்தியமாக உன்னிடம் இதை நான் எதிர்பார்க்க வில்லைடி , இனி உனக்கு   புரியவைத்தும்  பயனில்லை  , ச்ச என அவளை  அலட்சிய பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான். அவன் அவளிடம் பேசிய கடைசி நாள் கூட அதுதான், அவனுடைய பதிலில் அதிர்ந்து நின்றாலும் , விளக்கம் கூட கூற முடியவில்லை என்றால் இதில் பொய் என்பதே இருக்க வாய்ப்பில்லை என்று தனக்குள்ளே எண்ணிகொண்டு அவனை பிரிந்த அந்த நாட்கள் நியாபகத்திற்கு வந்தன. 

யாரோ ஒருவர் கூறியதை வைத்து , அவனிடம் அன்று அப்படி பேசினேனே அவன் என்னை மன்னிக்க கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லைதான் , இருந்தாலும் அவனிடம் பேசவேண்டுமே என்று மற்றதெல்லாம் மறந்து  அவசர அவசரமாக அவனுக்கு கால் செய்தாள். 

கவிதாவின் எண்கள் ஒளித்திரையில் தெரிய , இந்த நேரத்தில் போன் செய்கிறாள் ஏதும் ப்ரொப்லெம் இருக்குமோ என்று அவசரமாக அட்டென் செய்தவன் வேண்டும் என்றே யார் என்று கேட்க ,  

ஹலோ கீர்த்தி,

ஹ்ம்ம் , எஸ் கீர்த்தி ஹியர்....

நான் கவி..கவிதா பேசுகிறேன்...

ஓகே சொல்லுங்க , என்ன விஷயம் , 

கீர்த்தி ப்ளீஸ் , தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் , நான் இதுவரை பாரதி கூறிய அனைத்துமே உண்மை என்று நம்பி உங்களிடம்  , என அவள் இன்று இரவு வரை நடந்த அனைத்து விவரங்களையும் ஒன்று விடாமல் மூச்சு வாங்க  கூற , அதுவரை அமைதி காத்தவன் , ஓகே ஸோ வாட் என ஒரே வார்த்தையில் வினவ , 

மூச்சடைத்து நின்றாள் கவிதா, கீர்த்தி ப்ளீஸ் நீங்கள் தயவு செய்து என்னை மன்னித்து ஏற்றுகொள்ளவேண்டும் என்று கவி கூறுவதை கூட கண்டுகொள்ளாமல் , அவள் கூறினால் என்று இவள் நம்பினாலாம் , அவள் கூட வாழ்ந்தேனே , இல்லை உன்னுடன் வாழ்ந்தேனா , சின்ன நம்பிக்கை கூட இல்லாமல் , இப்போ பேசவந்துவிட்டாள் , ஃபோனை வைடி , என்று அவன் கோபமாக பேசி விட்டு கால் கட் செய்ய , கவிதாவிற்கோ என்ன செய்து இவனை சரி செய்ய முடியும்  என தெரியாமல் சிலையாகி நின்றாள்.

அந்த சைடில் , கீர்த்திக்கோ ! அப்பாடா ஒரு வழியாக மேடம்க்கு இப்பொழுதாவது உண்மை  புரிந்ததே , இன்னும் ஒரு  மாதத்தில் அனைத்து ப்ரொப்லெம் க்ளியர் செய்து எப்படியாவது இவளை திருமணம் செய்து விடவேண்டும் , இவ்வளவு நாட்கள் தூரத்தில் இருந்த பொழுது கூட தெரியவில்லை , ஆனால் இந்த இரண்டு நாட்களாக அருகில் வந்து என்ன பாடுபடுத்திவிட்டால் , இனியும் இவளை பிரிந்து நம்மால் வாழ இயலாது என அவன் கட்டிலில் இருந்த அவளது புகைபடத்தினை பார்த்து கண்ணடித்து கொண்டு நிம்மதியாக உறங்க போனான் நமது ஹீரோ கீர்த்தி...........................................



ஹாய் பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருந்தா கமெண்ட் பண்ணுங்க  ஆர் இந்த FB Page லைக் பண்ணுங்க 


ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் சண்டே  போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......



Thankyou 


இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI

Sunday, 3 April 2016

காதல் கவிதைகள் நீ !


Chapter 9


.......................இதோ வந்துவிட்டேன்ம்மா , நீங்க ஏன் வரிங்க என்று கூறி கொண்டே எலுமிச்சை சாருடன் நிமிர்ந்தவள் எதிரில் நின்றவனை பார்த்து ஆச்சர்யத்தில் விழி விரித்து , நீங்க இங்க என்ன செய்றீங்க என திணற, 

இந்த கேள்வி நான் உங்களை பார்த்து கேட்க வேண்டும் , ஏன் என்றால் இது என்னுடைய வீடு, என்று அவன் முடிக்க, ஒ....!, அம்மா ஏதோ வாசு என்றல்லவா கூறினார்கள் என்று அவள் குழப்பமாக வினவ , எஸ் வாசு...வாசன்..கீர்த்திவாசன்.. நான் தான் , அதற்கு என்ன இப்பொழுது, நீ எப்படி இங்கே வந்தாய் என்று நான் கேட்டதாக நியாபகம் என அவன் திமிராக பேச பேச , அவளுக்கு அப்படியே பூமிக்குள் சென்று விடமாட்டோமா என்று இருந்தது.

என்னம்மா கவிதா சத்தமாக உள்ளதே என கேட்டுகொண்டே சமையல் அறைக்குள் அவனது தாயார் வர , அடடே வாசு நீ எப்படா வந்தாய் , உன்னை நான் கவனிக்கவே இல்லை பாரு , என்னடா இவ்வளவு அதிசயமாக பார்க்கிறாய் , இது கவிதா என்று அவனுக்கு அறிமுக படுத்த , கவிதாவிற்கோ அப்பாடா , இவனது கேள்வியில் இருந்து தப்பித்தோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டவள்  , எலுமிச்சை சாருடன் ,  அவனை தாண்டி சென்று சாரதாவின்  பின்னே நின்று கொண்டாள் .

ஹால்க்குள் வந்தவர்கள் , இவன் தான்மா வாசு என்கிற கீர்த்திவாசன்  என்று அவனையும் அவளுக்கு அறிமுக படுத்தினாள். ஹ்ம்ம்கும் இந்த பெயரினை கோவிலிலே முழுதாக சொல்லிருந்தால் இன்று இவன் முன்னே நிற்கும் நிலைமை வந்து இருக்காது என மனதிற்க்குள் நினைத்து கொண்டுஇருக்கும் பொழுதே , அப்புறம் என் பெயர் சொல்லவே இல்லை பாரேன் , என்று அவள் தொடங்க , 

சாரதா அம்மா , சரிதானே என்று கீர்த்தியினை பார்த்து கொண்டே கவிதா  கூற , உனக்கு எப்படி தெரியும் , நான் உன்னிடம் கூறவே இல்லையேமா என்று அந்த தாய் பொருள் பொதிந்த பார்வையுடன் இருவரையும் நோக்க , தன் நாக்கினை கடித்து கொண்டவள் , இல்லையே நீங்கள் தான் கோவிலில் கூறினிர்கள்ம்மா  , என்று நிலைமையை சமாளித்து அவளை ஜூஸ் பருக வைத்தாள் .

சரிங்கமா , குடிக்க நீர் கொடுக்க கூட ஆள் இல்லாமல் , படுத்து இருந்திர்கள் என்றுதான் கிச்சன் வரை வந்ததே , நீங்கள் பேசுங்கள் , நான் மாடிக்கு செல்கிறேன் என்று அந்த இடத்தை   விட்டு விலக போனவனை தடுத்து, என்ன கீர்த்தி , வீட்டிற்கு விருந்தாளி வந்தால்  , இப்படிதான் செல்வதா , என்று மகனையே கடிந்து கொண்டவள், கவிதாவை எங்கு பார்த்தேன் கூட கேட்கமாட்டியா நீ  என்று அவனையும் அங்கேயே அமர்த்தினாள் சாரதா . 

எப்படியும் சொல்லாமல் விடபோவதில்லை , சரி கூறிவிடுங்கள் என்று தாயை பார்த்து புன்னகை புரிந்தவனை , கண் அசராமல் பார்த்து கொண்டிருந்தாள் கவிதா , ச்ச , இவனை இப்படி சிரித்த முகமாக பார்க்கும் பொழுது எவ்வளவு அழகாக உள்ளது என்ற மனதார ரசித்து கொண்டு இருந்தாள்.

வழக்கம் போல , உனக்காக பெருமாளிடம் , வேண்டி கொண்டிருந்தேனா , அப்பொழுது மயக்கம் வருவது போல் இருக்க , இவள் தான் நீர் கொண்டு வந்து எனக்கு உதவி , வீடு வரை கூடவும் வந்தாள் , நீயானால் அவளுக்கு ஒரு நன்றி கூட சொல்லமாட்டேன் என்கிறாய் , போ கீர்த்தி  

ஐயோ அம்மா , எவ்வளவு முறை தான் , உங்களுக்கு கூறுவது தனியே செல்லவேண்டாம் என்று , என் பேச்சை மட்டும் கேட்காதீர்கள் என்று தாயினை பாசமாக மிரட்டி கொண்டே , நன்றி கூற கவிதாவினை நோக்கியவன் , அவள் பார்வை இதுவரை தன் மேல்தான் இருந்ததா என்று புருவம் உயர்த்த, அவன் இப்படி திடிரென கவனிப்பான் என்று எதிர்பாராத கவியோ , அவசரமாக தன் பார்வையினை விலக்கிகொண்டவளுக்கு முகம் வெட்கத்தால் சிவந்துஇருந்தது. 

கீர்த்தி வாசன் மனதுக்குள் சிரித்து கொண்டே , கவிதாவோ , காவியாவோ அம்மாவை பத்திரமாக கூட்டி வந்ததற்கு மிகவும் நன்றி என அவன் கேலியாக கூற, அவளோ அவனை பார்த்து முறைத்து கொண்டு , என் பெயர் கவிதா , ஓகே என்று பதில் கொடுத்தாள். இவ்வளவு பேசுபவர் ஒன்று தனியே விடகூடாது , அப்படி இல்லை என்றால் , அவர்கள் கேட்பதை செய்வது தானே , என வேண்டும் என்றே சாரதாவிற்கு பரிந்து பேசினாள். 

சும்மா, அவர்கள் கேட்பது என்னவென்று தெரியாமல் உளற வேண்டாம் , என கீர்த்தி பதிலுக்கு உரைக்க  

ஏன், திருமணம் தானே , செய்வதற்கு என்ன , இல்லை யாரையாவது நினைத்து கொண்டு என்று கவி துவங்க , அப்படி கேள் நன்றாக என்று அவளுக்கு ஒத்து பாடினாள் சாரதா. 

அவ்வாறு , நான் நினைத்து கொண்டு , காத்திருக்கும் அளவுக்கு எனக்கு எந்த பெண்கள் மேலும் ஏதும் தோன்றவும் இல்லை, அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை போதுமா என்று தன் பதிலை சற்று அழுத்தமாகவே கவிதாவினை பார்த்து  கூறினான் கீர்த்தி .

இதில் நம்பிக்கை கெடும் அளவுக்கு என்னப்பா இருக்கு , இதோ இந்த கவிதா மாதிரி ஒரு பெண்ணை கூட்டி கொண்டு வந்து , இவளை தான் திருமணம் செய்யபோகிறேன் என்று கூறினாள் நான் என்ன வேண்டாம் என்றா கூறபோகிறேன் என சாரதா இயல்பாக கூற , இருவருக்கும் வியர்கவே தொடங்கி விட்டது. 

அம்மா , நீங்கள் வேற இதெல்லாம் கூற போக , அந்த பொண்ணு ஏன்டா ஹெல்ப் செய்தோம்னு அழபோகிறார்கள் பாருங்கள் , என தன் தாய்க்கு பதில் கூறிவிட்டு , நான் கிளம்புகிறேன்ம்மா நீங்கள் பேசுங்கள் என்று அந்த இடத்தை விட்டு மறுபடியும் விலக ஆரம்பித்தவனை  ,வாசு ரொம்பவே நேரம் ஆகிவிட்டது , நீ சென்று கவிதாவினை வீட்டுக்கு கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடு சரியா என கூறினாள் அந்த தாய். 

ஐயோ ! அம்மா அதெல்லாம் வேண்டாம் என்று இருவரும் ஒரே நேரத்தில் ஒன்றாக கூற , சாரதாவிற்கே ஆச்சரியம் அதிகமானது. என்ன 2பேருக்கும் நல்ல பொருத்தம் இருக்கும் போல என்று அவள் சிரித்து கொண்டே இயல்பாக கூற , இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர். 

வாசு , நீ இப்பொழுது கொண்டு சென்று விட்டு விட்டால் வந்தால்  தானே , அவளுக்கு மறுபடியும் எனக்கு உதவி என்றால் செய்ய தோன்றும் , சொன்னதை செய் என்று கூறிவிட்டு , கவிதா ஒரு நிமிடம் இரும்மா இதோ வந்து விட்டேன் என உள்ளே சென்றாள்  சாரதா. 

தனித்து விடப்பட்ட இருவரும் ஒருவரை பார்த்து கொள்ள கூடாது என்று வேண்டும் என்றே திரும்பி நின்று கொண்டிருக்க  , ஒரு தட்டில் மஞ்சள்  நிற புடவை , மற்றும் குங்குமம் உடன் வந்து  கவிதாவிடம் நீட்ட , அம்மா இதெல்லாம் எதற்கு என்று தர்மசங்கடம் ஆனால் கவிதா. 

வீட்டிற்கு வருபவர்களுக்கு கொடுப்பது நம் குடும்ப வழக்கம் தான்டா பெற்று கொள், வாசு கொஞ்சம் சொல்லேண்டா  என்று கூறபோக  , அதற்கு மேல் தாமதிக்காமல் ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா , என்று காலில் விழுந்து வணங்கி , பெற்றுகொண்டாள் கவிதா .
உங்கள் அம்மா , மிகவும் மரியாதையாக வளர்த்துஇருகிறார்கள் , சீக்கிரமே உனக்கு திருமணம் , நீ நினைத்த மாதிரி நடக்கும் என்று கூற , நிமிர்ந்து கீர்த்தியினை அவள் பார்க்க , இம்முறை அவன் அவளையே இவ்வளவு நேரம் பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்து முகசிவப்பினை மறைத்து  அவ்விடத்தை விட்டு கிளம்பினாள். 

அடிக்கடி , வந்து போம்மா , வாசு கூட்டிட்டு போ , நான் சென்று மேலே படுக்க போகிறேன் என்றவளிடம் , சரிங்கமா என கூறிவிட்டு வெளியே வந்தான். 

கவி , பின் சீட்டில் அமர போக , நான் ஒன்றும் உனது டிரைவர் இல்லை புரிகிறதா , முன்னே வந்து உட்கார் என்று கதவினை திறந்து விட்டான் அவன். அவள் ஒரு வித படபடப்புடன் , அமர , வண்டியினை ஸ்டார்ட் செய்து , சாங் ப்ளையர் ஆன் செய்தான். 

அதில் , அன்பே , என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் , கனவே கனவே கண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன்.......என்றே பாடி கொண்டே போக, கவிதா கீர்த்தியினை பார்த்து முறைத்து வைக்க , நல்ல நேரம் பார்த்து தான் இந்த சாங்  ப்ளே ஆகனுமா என்று செட்டினை ஆப் செய்து விட்டு அமைதியாக ஓட்டினான் கீர்த்தி. 

அப்புறம் , என்னை நம்பவைத்து ஏமாற்றியதை போல் , இப்பொழுது என் அம்மாவிடம் எதும் செய்ய துவங்கி விட்டயா , அப்படி ஏதாவது என்றால் அதற்கு நான் அனுமதிக்க போவதில்லை ஓகே , என வேண்டும் என்றே அவளை வம்புக்கு இழுத்தான் அவன் 

என்ன , நான் உங்களை ஏமாற்றியனா , நல்ல கதையாக இருக்குதே, 

ஹ்ம்ம் , 2வருடம் காதலிக்குறேன்னு சொல்வீங்க , ஆனால் அவங்க மேல் நம்பிக்கை கூடவா இருக்காது , ச்ச , இந்த பொண்ணுங்களே இப்படிதான் என்று பொதுவாக கூற , அது என்ன அப்படி சொல்றிங்க , உங்கள் மேல் சந்தேகம் என்றால் விளக்கம் இல்லாமலா போகும், அதை சொல்லி புரியவைக்க முடியாமல் இது தான் நேரம் என்று விட்டு விட்டு போகும் ஆண்களை விட பெண்கள் ஒன்று தப்பு இல்லை புரியுதா என்று அவள் பதிலடி கூறினாள் கவிதா.

சரி ஒரு மனுஷன் யாரை லவ் செய்தான் என்பது தெரிந்தும் கூட தெரியாத மாதிரி காலையில்  வந்து அவ்வளவு பேசிவிட்டு சென்றாய் , இது மட்டும் ரொம்ப நியாயமான விஷயமா உங்களுக்கு, என்று பதிலுக்கு உரைக்க , ஆமாம் நீங்கள் விளக்கம் கூட தராமல் போனதை பார்த்தால் அன்று பாரதி கூறிய அனைத்துமே உண்மை தான் போலயே , அந்த சந்தேகத்தினால் தான் காலையில் அப்படி கேட்டேன் போதுமா !, வேண்டும் என்றே அவளும் நோகடிக்க , 

சோ இந்த மூன்று வருட பிரிவில் கூட நீ எது உண்மை என்று புரிந்து கொள்ளவில்லை அதானே , மிகவும் பெருமை படுத்தி விட்டாய் நீ தான்க் யூ மிஸ் கவிதா, என்ன கூறினாய் நான் பாரதியை கழட்டி விட்டேனா , கிடையாது உண்மையில் உன்னை தான் ஏமாற்ற வேண்டும் நினைத்தேன் , ஆனால் அதற்குள் நீ புரிந்து கொண்டு விலகி விட்டாய் , போதுமா ,சோ இன்னும் 2மினிட்ஸ்ல  நீ மட்டும் வண்டியை விட்டு இறங்கவில்லை , உன்னை என்ன என்ன செய்வேன்னு நான் உனக்கு புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை புரிஞ்சுதா என்று அவன் கோபமாக கூற , அதில் பயந்தவள், எங்கு இறங்கி எங்கு போக போகிறோமோ தெரியவில்லையே என்று மனதில் நினைத்து கொண்டே  கண்ணாடியின் வெளியே பார்த்தால் அவள் வீடு வந்து இருந்தது. 

கவிதாவிற்கோ அப்பாடா என்று இருந்தது. உங்கள் கூட வந்ததே பெரிய தப்பு , ச்ச என்று அவனை பார்த்து முறைத்து விட்டு வீட்டிற்குள் சென்று கதவினை வேண்டும் என்றே ஓங்கி அறைந்து விட்டு உள்ளே சென்றாள். ஒருவாராக தாய் , தந்தையிடம் நார்மலாக பேசிவிட்டு உள்ளே சென்று தன் படுக்கையில் விழுந்தவள் , போன் அழைக்க யார் என்று எடுத்து பார்த்தால் பாரதி என காட்டியது , இவளால் தானே இவ்வளவும் , உன்னை இருடி என்று மனதினி நினைத்து கொண்டே , 

ஹலோ பாரதி சொல்லுடி , 

ஹ்ம்ம் கவி , என்ன ஆனது , கீர்த்தியை பார்த்தாயா , எல்லாம் கூறிவிட்டியா என்று கேட்டு கொண்டே போக , 

பாரதி தயவு செய்து இனி கீர்த்தி பற்றி என்னிடம் பேசாதே , ப்ளீஸ் அப்படி பேசுற மாதிரி என்றால் எனக்கு நீ கால் பண்ணவே வேண்டாம் புரிஞ்சுதா , இப்போ வைத்து விடு என்று கோபமாக உரைக்க , அந்த சைடு பாரதி , கவி ப்ளீஸ் ஒரு 5மினிட்ஸ் நான் சொல்வதை மட்டும் கேள் , எனக்காக டி என்று கெஞ்ச , சரி சொல்லு என்று அமைதி ஆனால் கவிதா. 

நம் கல்லூரி கடைசி வருடம் அன்று கீர்த்தி பற்றி நான் கூறிய அனைத்துமே பொய் டி , ப்ளீஸ் அவ்வாறு செய்ததற்கு நீ முதலில் என்னை மன்னிக்க வேண்டும்  , பட் அது எல்லாமே பொய் மட்டும்தான் என்று கூற கவிதாவிற்கோ தலையே சுற்றியது மனதினில் கீர்த்தியின் முகம் நியாபகம் வர , என்னது பொய்யா என்னத்தை டி சொல்லி தொலைக்குற முதலில் தெளிவாக சொல்லு  பாரதி ..............................................................





ஹாய் பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருந்தா கமெண்ட் பண்ணுங்க  ஆர் இந்த FB Page லைக் பண்ணுங்க 


ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் சண்டே  போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......



Thankyou 




இப்படிக்கு

உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI