காதல் கவிதைகள் நீ !
........................அவனை மோதிய அந்த நொடியில் தன் மனது அதிகமாக படபடத்தது நியாபகம் வந்தது. இது வரையில் தன் வாழ்நாளில் இப்படி ஒரு படபடப்பு வந்ததிலேயே , ஆனாலும் அவள் படித்தது இருபாலர் பள்ளி என்பதால் ஆண் நண்பர்கள் இருந்தாலும் , இன்று கீர்த்தி வாசனை இடித்த பொழுது ஏற்பட்ட உணர்வு தனக்கே புதிதாக இருந்தது.
எது எப்படியோ காலை அவனுக்கு நன்றி கூறவேண்டும் என்று தன் மனதினை கட்டுக்குள் கொண்டு வந்து உறங்கிவிட்டாள் அவள்.
நாட்கள் கடந்திருந்தது, இந்த இடைப்பட்ட தினங்களில் இருவரும் நல்ல நண்பர்களாக பழகிஇருந்தனர் . என்னதான் அவளுடன் இயல்பாக பேசினாலும் கூட , மற்ற பெண்களிடம் பேசும் பொழுது இல்லாத தவிப்பு , நெருக்கம் கவியிடம் தோன்றியதை அவன் மனது ஏற்று கொள்ளதான் செய்தது.
கவிதாவிற்கோ , நண்பனாக அவனிடம் பேசினாலும் , ஏனோ அவன் தனக்கு உரியவன் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது . நாம் பாட்டுக்கு அவனை இப்படிஎல்லாம் நினைக்கின்றோமே , அவன் மனதில் நாம் இருக்கிறோமா , இல்லையா என்று கூட தெரியவில்லை . பட் அவன் மற்றவர்களிடம் பேசும் விதமும் தன்னிடம் பேசும் விதமும் அவன் மனதிலும் அவள் இருக்கிறாள் என்ற நம்பிக்கையை அவளுக்கு அளித்தது.
இயல்பாக பேசிகொண்டிருக்கையில் , அவன் கைகளை தொட நேரிடும் பொழுது மிகவும் தவித்து போவாள் கவிதா , அவனுக்கும் கூட அப்படிதான் இருந்தது. பட் இருவருக்கும் அவர்களுடைய உணர்வுகள் நாளுக்கு நாள் மற்றவரை பற்றி நினைப்பதிலையே அதிகம் இருந்தன .
அன்று ஒருநாள் கூட இயல்பாக பேசிகொண்டிருக்கும் பொழுது , கவிதா அவனிடம் கூறிய விசயத்திற்கு அவன் கூறிய பதில் அவளது சிவந்த முகத்தினை மேலும் சிவக்க வைத்தது .
அது இல்லப்பா ,லாஸ்ட் வீக் நம்ம சீனியர்ஸ் 2பேர் யாரோ, லவ் பண்ணுகிறார்களாம் , ஏதோ கிளாஸ்ல கிஸ் அப்படி இப்படின்னு பேசிகிறாங்க ஒன்றும் தெரியவில்லை , பட் அது எப்படி கிளாஸ்ல ஒரு ஜெனரல் மேனர்ஸ் கூடவா இருக்காது கீர்த்தி.
அப்படி சொல்லமுடியாது கவி , லவ் பண்றவங்க கிஸ் பண்றது இயல்புதான் , அவங்க விருப்பத்துல நாம தலையிட முடியாது , பட் அவங்க கிளாஸ்ல செய்தது ,மிகவும் தப்பு அவ்வளவு தான் . ஏன் நீ வெச்சுஇருக்க மல்லி பூவுக்கும், உன் காதோரம் காற்றில் பறக்கும் இந்த முடிக்கும் , இந்த ரம்மியமான மாலை நேரத்திற்கும் எனக்கே கூட தான் உன்னை கிஸ் பண்ணா என்னனு தோணுது, அவர்கள் லவ் வேற பண்றாங்க சொன்ன , இதுல ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லையே கவி ,
ஹ்ம்ம் என்ன சொன்னிங்க , தோணும் நல்லா தோணும் , கன்னத்துல 4அறை கொடுத்தா எல்லாம் தானா போய்விடும் , என்று அவனை இயல்பாகவே சமாளித்தாலும் , அவன் கூறிய வார்த்தைகளில் அவள் செங்கொலுந்தாகி போயிருந்தாள் .
அவள் கூறியதை கேட்டு , ஐயோ பயமாதான் இருக்கு , சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்மா , நீ பாட்டுக்கு இதான் நேரம்னு அறைஞ்சுடாதிங்க , சோ நாம இப்பவே கிளம்புறது நல்லது என்று சிரிப்புடன் கூறிவிட்டு கிளம்பிவிட்டனர் அவர்கள் .
இரவு அவன் கூறிய வார்த்தைகளை நினைத்து பார்த்தவளுக்கு , என்ன ஒரு தைரியம் , எப்படிஎல்லாம் பேசுகிறான் , என்று மனதில் திட்டினாலும் அவனுடன் அவன் காதலியாக அவன் மனைவியாக வாழ மிகவும் ஆசைப்பட்டது , இருப்பினும் படிக்குற நேரத்தில் இது தேவை தானா, பொறுமையாக யோசிப்போம் , என்று தன் மனதினை கட்டுக்குள் கொண்டு வந்து படிப்பினில் கவனத்தை செலுத்தினாள்.
அங்கோ கீர்த்திக்கு அவள் முன்னிலையில் தன்னையே கட்டுபடுத்த முடியாமல் அவன் பேசியதை நினைத்து , எப்படி ஒரு பெண்ணிடம் இவ்வளவு இயல்பாக பேசினோம், நம்மளை பற்றி என்னதான் நினைத்து இருப்பாளோ , என்னடா கீர்த்தி இப்படி ஆகிவிட்டோம் என்று தன்னையே திட்டி கொண்டான். பட் அவள் இல்லாமல் வாழமுடியாது, அண்ட் நாம் கூறியதை கேட்டு அவள் வெட்கப்பட்ட விதம் கண்டிப்பாக அவள் மனத்திலும் அவன் இருக்கிறான் என்று தெள்ள தெளிவாக காட்டியது . எது எப்படி இருந்தாலும் முதலில் படித்து நாம் நினைத்தமாதிரி ஒரு கம்பெனியை நிர்வாகம் செய்யவேண்டும், அதன் பிறகு தான் திருமணம் பற்றி யோசிக்க முடியும் என்று தன் மனதினை ஒரு நிலைக்குள் கொண்டு வந்தான்.
முதல் செமெஸ்டர் எக்ஸாம்ஸ் முடிந்து விடுமுறை தினங்களும் முடிந்து அன்று முதல் நாள் வகுப்பிற்கு வந்தவனுக்கு இன்று எப்படியாவது அவளிடம் தன் காதலை சொல்லியே ஆகவேண்டும் என்று தோன்றியது . இந்த முடிவு அவன் விடுமுறை நாட்களில் அவளை பார்க்கமுடியாமல் , அவளையே நினைத்து கொண்டிருந்த பொழுது எடுத்தது. லாஸ்ட் எக்ஸாம் அப்ப கூட பார்க்காமல் போய்விட்டாள் , அப்படி என்னதான் வொர்க், இருக்கட்டும் இன்று பேசியே ஆகவேண்டும் என தீர்மானித்து இருந்தான் .
கவிதாவிற்கும் இன்று அவனிடம் தன் மனதினை தெளிவு படுத்த வேண்டும், என்று விரைவாக வகுப்பிற்கு வந்து அவனை காணாது போக , அவர்கள் வழக்கமாக பேசும் இடத்திருக்கு விரைந்தாள் . அங்கு அவனுடன் நெருக்கமாக ஒரு பெண்ணை காணவும் மனம் நொந்து போனது அவளுக்கு , ச்ச , நாம் தான் இவனையே நினைகின்றோம் , இவன் பாரு , என்று வந்த கண்ணீரை கட்டுபடுத்தி கொண்டு கிளம்பிவிட்டாள் அவள் .
வழக்கமாக அவளை பார்க்க காத்திருந்தவனை கலைத்தது சோனியாவின் குரல், ஹாய் கீர்த்தி மாமா , என்ன இங்க தவம் பண்ணி கொண்டிருக்கிங்க,
ஹாய் சோனியா நீ எப்படி இங்க, வாட் எ ப்ளசன்ட் சர்ப்ரைஸ் , எப்படிருக்க நீ!
நான் நல்லா இருக்கேன் மாமா , உங்களைதான் மீட் பண்ணவே முடியவில்லை, அவ்வளவு பிஸி இல்ல மாமா என கேலி செய்தாள் .
ஹே அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, சும்மா தான் , அப்புறம் அம்மா அப்பா எப்படிருக்காங்க , கேட்டதாக சொல்லு ஓகே வா ,
மாமா அதை விடுங்க , நம்ம திருமணம் பற்றி அம்மா , அப்பா பேசுனாங்க , அதை பற்றி ஒன்றுமே தெரியாதவர் போல் இருக்கீங்க , போங்க நீங்க ,
ஏய் என்ன சொல்ற நீ,யாரும் இதைப்பற்றி என்னிடம் கூறவே இல்லையே , அண்ட் வெரி சாரி சோனியா , நான் இது வரைக்கும் உன்னை பற்றி அப்படி நினைத்து கூட பார்த்ததில்லை, அண்ட் நான் என் கூட படிக்குற ஒரு பொண்ணை மனதார விரும்புகிறேன், இன்பாக்க்ட் இன்று தான் என் காதலையே அவளிடம் சொல்ல போகிறேன் , பட் நீ இப்படி , ஐ யம் ரியல்லி சாரி சோனியா , மன்னிச்சுடு
ஒ ஓகே மாமா , அம்மா , அப்பா தான் பேசி கொண்டிருந்தாங்க , அவ்வளவு தான் , நான் வருத்தப்படவில்லை , ஸோ விடுங்க என்று சமாளித்தவள் , ஓகே மாமா அவர்களை எப்ப இன்ட்ரோ தர போறீங்க , என்று பேச்சினை மாற்றினாள் அவள்
கண்டிப்பாக ஒரு நாள் கூட்டிட்டு வரேன் , இப்ப மேடம்க்காக தான் வெயிட் செய்றேன் , பட் ஆளையே காணோம் , சரி வகுப்பிற்கு டைம் ஆகிவிட்டது , நாம் இன்னொரு நாள் மீட் பண்ணலாம் சோனியா ,
ஓகே மாமா சி யு லேட்டர் , என்று கிளம்பிவிட்டாள் அவள் .
எங்க தான் போய் இருப்பா இவ , ஆளையே காணோம் , கிளாஸ் சென்று பார்க்கலாம் என்று விரைந்தவன் , வகுப்பறையில் அமைதியான முகத்துடன் கவிதா வினை கண்டவனுக்கு அப்பாடா என்று இருந்தது. வகுப்பு துவங்கி இருக்க மே ஐ கம் இன் மேம் என்று கேட்டு விட்டு தன்னிடத்தில் அமர்ந்த பொழுதும் கூட கவிதா தன்னை மட்டும் அல்ல , கிளாஸ் கூட கவனிக்காமல் இருந்தது ஆச்சர்யமாக இருந்தது , அப்படி என்னதான் ஆகிருக்கும் இவளுக்கு என்று பிரேக் வரும் வரையில் காத்திருந்தான்.
வகுப்பு முடிந்து அனைவரும் கிளம்ப , ஹே கவி ப்ளீஸ் நில்லு என்று ஒரு வழியாக அவளை தடுத்து நிறுத்தினான் அவன் கீர்த்திவாசன் .
என்ன வேண்டும் உங்களுக்கு இப்ப
நான் கேட்குற எல்லாத்தையும் உன்னால இப்ப தரமுடியாது என்று அவள் உதட்டினை பார்த்து அவன் பேச , ப்பச் என்ன வேணும்னு சீரியஸ்சா கேட்கிறேன் , சொல்றதுன்னா சொல்லுங்க , இல்லை என்றால் எனக்கு நிறைய வொர்க் இருக்கு என்று கிளம்ப போனவளை கையினை பிடித்து நிறுத்தினான் கீர்த்தி .
என்ன இது , ப்ளீஸ் கையை விடுங்க , யாரவது பார்த்தால் என்ன நினைப்பாங்க ,
என்ன வேணாலும் நினைக்கட்டும் , எனக்கு பிடித்த பொண்ணு கூட நான் நிற்கிறேன் இதுல உங்களுக்கு என்ன ப்ரோப்ளம்னு கேட்கிறேன்.
ஒ!, இங்க கிளாஸ்ல பேச நான் , அப்புறம் பார்க்ல பேச இன்னொரு பொண்ணா , ரொம்ப நல்லா இருக்கு கீர்த்தி விடுங்க ப்ளீஸ்
என்னது இன்னொரு பொண்ணா , யார் அது என்று யோசித்தவனுக்கு , ஓ சோனியாவை பார்த்துட்டு பேசறா போல , ஏய் கவி லூசு அவள் என்னோட அத்தை பொண்ணுடி, அதான் மேடம்க்கு கோபமா என்று முதல் முறையாக டி போட்டு உரிமையாக அழைத்தான் அவன்.
என்னது டீயா , இங்க பாருங்க இப்படிலாம் பேசாதிங்க , யாரவது கேட்டா தப்பாக பேசுவாங்க ,
ஏன் யார் என்ன பேசுவா , என் லவ்வரை நான் கூப்பிடுறேன் , இதுல யார்க்கு என்ன ப்ரோப்லம் சொல்லு ,
அவள் என்னது லவ்வரா என்று கேட்டு கொண்டிருக்கும் பொழுதே, பட் கோபப்படும் பொழுது ரொம்பவும் அழகா இருக்க நீ! ப்ராமிஸ் என்னால கண்ட்ரோல் பண்ண முடியவில்லை கவி என்று , அவளை பிடித்து ஒரு நிமிடம் இறுக அணைத்து , ஐ லவ் யு கவி , லவ் யு சோ மச் டி , என்று தன் காதலை அவளுக்கு தெரிவித்தான்.
அவனுடைய அணைப்பில் மெய் மறந்தவளை , ஒரு நிமிடத்திற்கு பிறகு விடுவித்தான் அவன், இப்போ நீ சொல்லு நீயும் என்னை காதலிக்குற தானே , என்று அவள் முகத்தினை தன் கைகளில் ஏந்தி கொண்டு வினவினான் அவன் கீர்த்திவாசன், அவள் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது................
ஹாய் பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருந்தா கமெண்ட் பண்ணுங்க ஆர் இந்த FB Page லைக் பண்ணுங்க
ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் சண்டே போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......
,
இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI
,
இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI