Sunday, 22 May 2016

காதல் கவிதைகள் நீ !

 Chapter 16


.......................................சரி நான் உன்னிடம் பேசவேண்டுமே இதைப்பற்றி என்று அவனருகில் இருந்த கட்டிலில் அவளை அமர்த்தியவன் , அவனது அணைப்பினிலே , அன்று நடந்தது என்னவென்றால் என்று தொடங்க ஆரம்பிக்க , வேண்டாம் கீர்த்தி உங்களை நான் முழுவதும் நம்புகிறேன் , ஸோ விளக்கம் கூட தேவையே  இல்லை என்று அதை  தடுக்க , அப்படி இல்லை கவி , இது என்னோட திருப்திக்காக நான் கூற நினைக்குறேன் ப்ளீஸ் என்று அவளை அமைதியாக்கி தன் விளக்கங்களை கொடுத்தான்.

அன்று அந்தப்பெண் வானதி அவளை நான் அணைக்காத குறையாக கூட்டி சென்றது உண்மை தான் கவி , ஆனால் அவள் அப்பொழுது ட்ரக்ஸ் சாப்பிட்டு முழு போதையில் இருந்தாள் , அதோடு நிற்க கூட முடியாமல் தள்ளாடும் நிலைமை , அண்ட் வசந்த் அவனுக்கு நம்ம தங்கை இப்படி செய்துவிட்டால் என்று கடும் கோபத்தில் அவளை அறைந்தே விட்டான் , தங்கை என்று கூட பாராமல் அவளை அப்படியே விட்டுவிட்டு வா கீர்த்தி என என்னை வேறு தடுத்தான் , நான் தான் விடுடா இதை பற்றி பிறகு விசாரிப்போம் என அவனிடம் சண்டை போட்டு அவளை அழைத்து சென்றது

அன்று அவள் மட்டும் ட்ரக்ஸ் யூஸ் செய்த விஷயம் மட்டும் கல்லூரியில் தெரிந்து இருந்தால் பாவம் படிப்பும் இழக்க வேண்டி வந்து இருக்கும் பின் அவள் வாழ்கையே வீணாகி இருக்கும் அல்லவா ,அது தான் யார்க்கும் தெரியாதவாறு அப்படி அணைத்து சென்றதே , ஆனால் இதை பற்றி  அடுத்த நாள் கண்டிப்பாக உன்னிடம் தெளிவாக கூறிவிட வேண்டும் என்றுதான் நினைத்து இருந்தேன் குட்டிமா, 

ஆனால் அன்று வானதியின் டிபார்ட்மெண்ட் எக்ஸாம் வேறு , நான் சென்று பெர்சனலாக ஹெச்ஓடி பார்த்து பேசி சரி செய்யவேண்டும்  , மற்றும் அந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டுமே என்ற எண்ணம் வேறு , ஸோ அன்று அந்த மன நிலையில் உன்னுடன் நின்று கூட பேச தோன்றவில்லை கவி, பட்   நீ சந்தேகிப்பதை போல்  பேசியது உண்மையில் என்ன இவள் என்று உன் மேல் அதிக கோபத்தை வரவழைத்தது , 

பிறகு அடுத்த இரண்டு நாட்கள் வானதியின் பெற்றவர்களை சரிசெய்து அவள் ட்ரீட்மென்ட்க்கு ஏற்பாடு செய்தோம் கவி , ஒருவழியாக அனைத்து ப்ரோப்லெமும் முடிவிற்கு வர பிறகு தான் நம் பிரிவு நினைவிற்கு வந்தது கவி ,ச்ச இப்படி பேசிவிட்டோமே என்று வருந்தினால் கூட , இன்னொரு மனது இவள் எப்படி என்னை நம்பாமல் யாரோ பேசுவதை கேட்டு வந்து இன்று இப்படி பேசுகிறாள் , இவ்வளவு தான் நாம் கொண்டிருந்த அன்பின் அளவா என ஒரே வெறுப்பாக இருந்தது கவி , நம்பிக்கை இல்லாமல் வாழும் வாழ்வானது நரகத்திற்கு சமம் , ஸோ அதை புரிந்து கொண்டு நீயாக வரவேண்டும் என்றுதான் நான் விலகி இருந்ததே குட்டிமா ,பட் அதற்காக இவ்வளவு காலம் உன்னை பிரிந்து வாழ்ந்தற்கு என்னை மன்னிக்க வேண்டும் டி நீ , ப்ளீஸ் என அவள் கைகளை இறுக பற்றி கொண்டான். 

இல்லை இல்லை கீர்த்தி , நீங்கள் அந்த பெண்ணுக்கு எவ்வளவு பெரிய உதவியை செய்து இருக்கீர்கள் , அது தெரியாமல் நான் வானதி உங்களுடைய லவர் அது இது என்று கோபப்படுதியது என்னுடைய தவறு கீர்த்தி , ஸோ ப்ளீஸ் சாரி  எல்லாம் கேட்கவேண்டாம்  என்று தொடரபோனவளை நிறுத்தி , 

சரி இப்பொழுது பவியிடம்  பேசும்பொழுது  ஏதோ  அவனை  தப்பாக நினைக்கவில்லை என்றாலும் ,விளக்கம் கூட கேட்காமல்  
சந்தேகப்பட்டு , இந்த 3வருடங்களாக அவனை விட்டு தள்ளி இருக்கிறேன் என்று கூறினாயே , அப்படி என்றால் அன்றுமே நீ என்னை சந்தேகப்படவில்லையா கவி என அவன் அதிர்ச்சியாக வினவ , ஹ்ம்ம் என்று ஒப்பு கொண்டு தலையைஆட்டினாள்  அவள். 

ஐயோ கவி ,என்ன  ஏது என்று கூட வினவாமல்  அவசரப்பட்டு இந்த 3வருடங்களாக உன்னை பிரிந்து இருந்து மிகவும் கஷ்ட படுத்தி விட்டேனே , எவ்வளவு மெச்சுரிட்டி இல்லாமல் நடந்து கொண்டு இருந்தோம் பாரேன் கவி , என்னை மன்னித்து விடு ப்ளீஸ் என அவன் அதையே மறுபடியும் கூற , போதும் கீர்த்தி என்று அவன் வாயினை தன் கைகளால் மூடினாள் அவள்.

நானும் தானே , பாரதி கூறினால் , யார் யாரோ பேசிகொண்டார்கள் என்று எதையோ நினைத்து கொண்டு உங்களிடம் கோபமாக பேசியது , அப்படி பார்த்தால் நானும் மன்னிப்பு கேட்க வேண்டும் , ஆகையால் இதை விட்டு விடலாமே  ப்ளீஸ் என்று கூற ,சரி   சரிடா என் குட்டிமா சொல்லி நான் கேட்காமல் போவேனா ,அதை விடவும் இனி வேறு வேலைகள் நிறைய இருக்கிறது கவி சரிதானே  என்று அவளை பார்த்து கண் சிமிட்ட அவள் முகம்வெட்கத்தால் சிவந்து போனது. 

அப்பாடா என் மனைவி வெட்கப்படும் பொழுது எவ்வளவு அழகாக இருக்கிறது பார் , அப்படியே இழுத்து வைத்து என்னவோ செய்யணும் கூட தோன்றுகிறதே , கவி ஒன்று மட்டும் நிச்சயம் , ஒவ்வொரு முறை நீ அழும்பொழுது உன்னை இப்படி தான் சமாதானம் படுத்த வேண்டும் என்று நினைத்து கஷ்டப்பட்டு கட்டு படுத்தி கொண்டு நிற்பேன் தெரியுமா என்று கூற , 

ஹ்ம்ம் எஸ் எஸ் கீர்த்தி , இன்பாக்ட் இதை எனக்கு புரிய வைத்ததே அத்தை தான் , என்று கூறி புன்னகைக்க , என்னது அம்மாவா என்று அவன் ஆச்சர்யம் காட்டினான் , 

ஆமாம் பின் சார் பாட்டுக்கு அன்று வீட்டிற்க்கு பெண் வந்துவிட்டு எனக்கு விருப்பம் இல்லை , அம்மாவிற்காக தான் என்று கூறினால் பிறகு நான் என்னதான் செய்வது , அதோடு இல்லாமல் அன்று கட்டிபிடித்து முத்தம் வேறு , என்னடா இது இரண்டும் கான்ட்ராடிக்சனா இருக்குதே என்று யோசித்தேன்   , பின் தான் அத்தையிடம் இது பற்றி கேட்கலாம் என்று வந்தேன்  , அப்பொழுது அவர்கள் தான் இதை தெளிவு படித்தினார்கள் கீர்த்தி , அதன் பின் நாம் பழகிய எல்லாமும் நினைத்து பார்த்தேன் அப்பொழுது தான் எனக்கே அது விளங்கியது , அதோடு அன்று மாலை உங்கள் தோட்டத்தில் நாம் பேசிக்கொண்டு இருந்த பொழுது உங்களை டெஸ்ட் செய்யதான் தீவிரமாக அழுவதை போல் நடித்தேன் நீங்களும் உடனே , கவி அழாதே செல்லம் அப்படி இப்படி என்று என்னுடைய அதே கீர்த்தியாக பேசினீர்களா , அன்று தான் அப்பாடா என்று நிம்மதியாக  இருந்தது கீர்த்தி. 

ஹ்ம்ம் பார்த்தேன் பார்த்தேன் , நான் அப்படி அணைத்து சமாதானம் செய்த பொழுது நீ என்னை நிமிர்ந்து உன்னுடைய இந்த அழகான கண்களை விரித்து பார்த்தாயே , அப்பொழுதே புரிந்து கொண்டேன் நீ கண்டுபிடித்து விட்டாய் என அவனும் பதிலுக்கு உரைத்தான். 

சரி கீர்த்தி ஒரு டவுட் , 3வருடங்களுக்கு பிறகு ஒருவேளை நான் பாரதி பற்றி பேசவேண்டும் என்று நேரில் வராமல் இருந்து இருந்தால் நீங்களும் பேசிருக்க மாட்டிர்களோ என்ற கேள்விக்கு அவளது மூக்கின் நுனியை பிடித்து ஆட்டியவன் , அது தான் இல்லைடா , மெச்சுரிட்டி இல்லாமல் பிரிந்தது போதும் , அட்லீஸ்ட் நாம் மீண்டும் இணைவதற்கு முன் நமது வருங்காலம் சேப்டியாக இருக்குமாறு பார்த்து விட்டு அதன்பின் உன் முன்னால் வரவேண்டும் என்று பிளான் செய்தேன் டியர் , அப்பொழுதுதானே நாம் இணைந்த பிறகு முழுநேரமும் உன்னை மட்டுமே பார்த்து கொண்டு உன்னுடன் இப்படி கொஞ்சி கொண்டே நேரத்தை போக்க முடியும் எப்படி உன் கணவன் என்று சொல்வதை கேட்க கேட்க கவிக்கு வெட்கத்தில் முகம் சிவந்து இருவரும் காற்றில் பறப்பது போல் உணர்ந்தாள் அவள்  ,

மீண்டும் அவனே தொடர்ந்து இன்பாக்ட் அடுத்த ஒரு மாதத்திற்குள் நானே உன்னை எப்படியாவது நேரில் வந்து சந்தித்து எதாவது பேசி தொடங்க வேண்டும் என்று தான் காத்திருந்ததே , நல்லவேளை நீயே வந்து என் வேலையை சுலபமாக்கிவிட்டாய் டியர் ,எப்படியோ நம் பிரிவுக்கு காரணமாக இருந்த பாரதியே நாம் மீண்டும் சேரவும் வழி செய்தாலே அது வரை நல்லது இல்லையா என்று  ஒருவாராக அனைத்தையும் பற்றி இருவரும் ஒரு தெளிவிற்கு வந்து கொண்டு இருக்க , 

ஹ்ம்ம்கும்...இங்கே நாங்களும் இருக்கிறோம் என்று தொண்டையை செருமினால் பவித்ரா , அவள் அருகில் அவள் கணவனும் , வந்துட்டாங்கடா என கீர்த்தி நினைக்க , இவர்கள் முன்னாடி இப்படி கட்டி கொண்டு நிற்கிறோமே என்று அவசரமாக விலகினாள் கவிதா . 

டேய் போதும் இப்பொழுதே அனைத்தையும் பேசிவிட்டால்  பின் திருமணத்திற்கு பிறகு பேச ஒன்றுமே இல்லையே என வருத்தப்பட வேண்டி வரும் கீர்த்தி என்று பவித்ரா கேலி செய்ய, 

இந்த பவித்ராவிற்கு ஒன்றுமே தெரியவில்லை , திருமணத்திற்கு பின் பேசுவதற்கு எங்கே நேரம் இருக்க போகிறது என்று கீர்த்தி கவிதாவின் காதில் சத்தமில்லாமல் கூற , அதை கேட்டு ஐயோ கீர்த்தி ப்ளீஸ்  என்று வெட்கத்தை கட்டு படுத்தமுடியாமல்  முகம் சிவக்க நின்றாள்  கவிதா. 

கவிதாவின் முக சிவப்பினை கண்டு பவித்ரா  , டேய் நீ எதற்கும் தள்ளியே இரு என்று இருவரையும் விலக்கி நிறுத்தி விட்டு  ஹீ ஹீ என சிரிக்க , அங்கு சந்தோசம் மட்டுமே நிறைந்து இருந்தது. 

அதிகாலை 6மணி..... வேண்டுதலின் படி வயலூர் முருகன் கோவிலில் முகுர்த்தம் , சொந்த பந்தங்கள் நிறைந்து நிற்க , கவிதா மெரூன் கலர்  புடைவையில் கற்கள் கோல்டன் கலரில் பதித்திருக்க தோகை விரித்த மயிலினை போல்  பெண்மைக்கே உரிய நாணத்துடன் மணப்பெண்ணாக வர , அவளை பார்த்த பார்வையில் இமைகளை கூட அசைக்க தோன்றாமல் தன் பார்வையாலே விழுங்கி கொண்டிருந்தான் மணமகன் கீர்த்தி, இவள் என் மனைவி என்ற பெருமிதத்துடன்.

கெட்டிமேளம் முழங்க , கவிதாவின் கழுத்தில் திருமாங்கல்யத்தை கீர்த்தி  பூட்ட , அவர்களது திருமணம் அனைவரது ஆசியுடனும் நடந்தேறியது,  அவளது நெற்றி வகிட்டில் குங்குமத்தை இட , தன் காதல் நிறைவேறிய திருப்தியில் கவிதாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் வர , அதை கவனித்த அவளது கணவன் ஸ்ஸ்... கவி , என்று அடக்கி , அவளது கையை இறுக பற்றிக்கொண்டு அக்னியை வலம் வந்தனர் அந்த மணமக்கள். 

இவர்களது ஜோடி பொறுத்ததிணை பார்த்து வந்த கூட்டம் புகழ்ந்து தள்ள , பெற்றவர்கள் மனதிருப்தியுடன் அவர்களை வாழ்த்தினர். பிரியா , கண்ணன் ,அருள், பாரதி , வானதி , வசந்த், பவித்ரா , பிரபா,   என்று அவர்களது நண்பர்கள் வட்டாரம் சூழ்ந்து நின்று அவர்களை கேலி செய்து கொண்டே மனதார  வாழ்த்தியது.

அனைத்து பார்மாலிட்டிசும் முடிந்து அன்று இரவு கீர்த்தியின் அறைக்குள் கையில் பால் சொம்புடன்  நுழைந்த கவிதாவை , அப்பாடா இனி யாரும் என்னை தடுக்க மாட்டார்கள் என்று அவளை பின்னிலிருந்து  இறுக பற்றி கொண்டான் அவளது கணவன்.

கீர்த்தி அதுக்குள்ளவா, உன்னிடம் ஒன்று முக்கியமான சந்தேகம் கேட்க வேண்டும்   என்ற மனைவியின் வார்த்தையில், என்னத்தை டி இப்போழுது  கேட்க போகிறாய் என்று முகத்தினை பாவமாக வைத்து கொண்டு கீர்த்தி வினவ , அதுவா அது வந்து...வந்து   என்று வேண்டும் என்றே அவனை தவிக்க விட்டாள் கவிதா . 

அதான் வந்து விட்டாயே சொல்லேன் டி , என்ன வேண்டும் சொல்லு  என்று கேட்க , ஹ்ம்ம் வந்து முதலில் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று அப்பாவியாக கேட்க , ஏண்டி மனுசனை வெறுப்பேத்துற அதான் கையில் பால் இருக்கே , அதை குடிக்க வேண்டியது தானே என்று கூற , அட ஆமாம் இல்லை , என்று தானும் குடித்துவிட்டு அவனிடம் நீட்டினாள் கவிதா , அவளை விழுங்கும் பார்வை பார்த்து கொண்டே அதை குடித்தவன் ,

ஹ்ம்ம் இப்போதாவது சொல்லேன் டி என்று கூற , அது வந்து நம்மளோட பிள்ளைகளை எந்த ஸ்கூலில் சேர்ப்பது கீர்த்தி, அதை தான் யோசித்து கொண்டு இருக்கிறேன்  என்று அவள் சீரியசாக வினவ , ஹ்ம்ம்  ஏன்டி கேட்கமாட்ட , நாம இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் பிள்ளைகள் வானத்தில் இருந்து தான் குதிக்கவேண்டும் என்று அவன் கூறிய பதிலை கேட்டு சிரித்து கொண்டு நின்றவளை பார்த்து , உன்னைலாம் பேசவிட்டதே தப்பு டி  என்று அவளது இதழ்களை தனது இதழ்களால் மூடி தன்னுடைய முத்தத்தினை பதிக்க ,அதில் மெய் மறந்து  கொஞ்சம் கொஞ்சமாக கவிதா அவனுள் கலந்து கொண்டிருந்தாள்.இருவரும் அவர்களது  வாழ்கையை வண்ண கோலமாய்  வரைந்து கொண்டிருந்தனர். அவர்களை வாழ்த்தி தென்றல் காற்று காதல் கவிதைகளாக வீச , நாமும் அவர்களை வாழ்த்தலாமே.....


                                                    ................முற்றும்................




ஹாய் பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி கண்டிப்பாக உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருந்து இருக்கும் என்று நம்புறேன் , தேங்க்ஸ் பார் யுவர் சப்போர்ட் பிரண்ட்ஸ்...................தேங்க்ஸ் ஒன்ஸ் அகைன்............ 


ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் ஸ்டோரியில்  மீட் பண்ணலாம் bye ......



Thankyou 


இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI




Sunday, 15 May 2016

காதல் கவிதைகள் நீ !

 Chapter 15


.........................................இங்கே பாரு உன்னை எனக்கு பிடிக்குதா , பிடிக்கலையா என்பது விஷயம் அல்ல , நீ என்னை நம்பாமல் சென்ற அந்த நாளை இன்றும் மறக்கமுடியவில்லை போதுமா , ஸோ விருப்பமே இல்லாமல் தான் ஒத்து கொண்டேன் , இது தான் உண்மை நீ வேண்டுமானால் நன்றாக  அழுது விட்டு வா ,திருமணத்தையும் நிறுத்தி விடு  நான் உள்ளே செல்கிறேன், என்று அவளை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிற்குள் விரைந்தான். 

அவளுக்கு தெள்ள தெளிவாக எல்லாமே புரிந்து விட்டது , கீர்த்தி ஒருநாளும் அவனை விட்டு போகபோவதில்லை, அவளை வெறுக்கவும் போவதில்லை  என்ற மிக பெரிய மன  நிம்மதியுடன் முக மலர்ச்சியுடன் அவளும் வீட்டிற்குள் நுழைந்தாள்.

கீர்த்தி , நேரம் ஆகிவிட்டது , இந்த நேரத்தில் கவி வண்டியில் தனியே செல்வது நல்லதல்ல , நீ சென்று காரில் விட்டு வா , என்ற தாய் சொல்லை எதிர்த்து பேசமுடியாமல் , காரில் சென்று கொண்டிருந்தனர் இருவரும். 
அமைதியா காரின் ஜன்னல் வழியே  நுழைந்த காற்று இதயத்தை தீண்டி செல்ல ,அதில் மூழ்கிபோய் அமைதியாக இருந்தாள்  கவிதா ,அவளது தனிமையை கலைக்காமல் இயற்கையை  ரசிக்க விட்டு அவளை ரசித்து கொண்டே வண்டியை ஓட்டினான் கீர்த்தி. ஒருவழியாக வீடு வரவும் அவனை உள்ளே வருமாறு பார்வை பார்த்து விட்டு கதவினை நோக்கி செல்ல , அது பூட்டி இருப்பது தெரிய , அவனிடம் ஒரு நிமிடம் என கூறிவிட்டு , தன் பர்சில் இருந்த சாவியை கொண்டு கதவை திறந்து உள்ளே அழைத்து சென்றாள். 

அம்மா , எங்கே போய்டீங்க , வீடு பூட்டிஇருக்கு , என்னிடம் ஏதும் சொல்லவே இல்லையே , 

இல்லைம்மா  நானும் அப்பாவும் இங்கே கீர்த்தி வீட்டிற்க்கு தான் வந்து இருக்கோம் , அது வந்து கல்யாண வேலைகள் இருக்கு , அதை பற்றி பேசதான் , இப்போதான் வந்தோம் , நீ இருடா நாங்கள் ஒரு ஒருமணி நேரத்தில் வந்து விடுவோம் சரியா என கட் செய்ய போனவளை , 

அம்மா இருங்க , இங்கே என்னுடன் அவரும் வந்து இருக்காங்கம்மா , என்ன செய்வது என கேட்பவளை , 

அவருன்னா யார் டி , தெளிவாக சொல்லேன் கவி என்ற தாயிடம் , 

அம்மா அவருன்னா , அதான்ம்மா உங்கள் மாப்பிள்ளை , என இழுக்க, 

சம்பந்தி கூட சொன்னார்கள் , சரி நீ காபி , சாப்பாடு எதாவது  ரெடி செய்து கொடு , நாங்கள் வந்து விடுகிறோம் என வைத்து விட, முழித்து கொண்டு நின்றாள் கவிதா. 

என்ன என்பது போல் அவன் நோக்க , இல்லை இரண்டு பேரும் உங்கள் வீட்டில் தான் இருக்காங்க , ஏதோ திருமண வேலைகள்னு சொன்னாங்க, சரி 5மினிட்ஸ் இருங்க  , நான் காபி போட்டுவரேன் என்றவளை  ,இல்லை அதெல்லாம் வேண்டாம் நான் கிளம்புறேன் என்று கூறுபவனை தடுத்து இல்லை இருங்க , வந்துவிட்டேன் என்று கிச்சனுக்குள் சென்று , அடுத்த 10மினிட்ஸ்சில் காபியுடன் வந்து அவனிடம் குனிந்து நீட்டினாள் , 

இயல்பாக அவள் சூடிய மல்லிபூ  முன்னே வந்து விழ , தன்னிடம் காபி என்று நீட்டுபவளை உற்று நோக்கினான் அவன் , காரில் இருந்தே அவளை ரசித்து கொண்டு வந்தவன் , இப்பொழுது மிக அருகில் அழகே உருவாக அவனுடைய வருங்கால மனைவி நிற்பதை கண் இமைக்காமல் பார்த்தவன் எழுந்து அவளை அணைப்பது போல் எழுந்து வர  , 

ஐயோ காபி , சூடு வேற என்று அவள் நியாபகபடுத்தவே நிகழ் காலத்திற்கு வந்தவன் , தன்னை கட்டுபடுத்த இயலாமல் சாரி.........என்று கூறி  அவளை விட்டு விலகி , நிகழ்வினை இயல்பாக எடுத்து செல்ல  முயன்றான். அவனது செய்கை புரிந்து வந்த சிரிப்பினை அடக்கமுடியாமல் நின்றாள் கவிதா. ஹ்ம்ம் இப்பொழுது நான் கிளம்புறேன் , அப்படி இல்லை என்றால் அதற்கு பின் எது நடந்தாலும் நான் பொறுப்பில்லை வரவா என கூறிவிட்டு விலகுபவனை , பெறுமையுடன் பார்த்தாள் கவிதா , இதான் என் கீர்த்தி வாய்ப்பு கிடைத்தாலும் தப்பு செய்ய நினைக்காதவனை எண்ணி சந்தோசத்துடன் , கடவுளே எப்படியாவது என் கீர்த்தியை என்னிடம் கொடுத்துவிடு என்று மனதார வேண்டி கொண்டு தன் திருமண நாளுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள். 

பின் வந்த நாட்களில் ஒவ்வொரு நாளும் தான் கீர்த்திக்காக ஏங்குவது எண்ணி தன்னையே  திட்டி கொண்டாள். ஒருவழியாக கல்யாண நாளும் நெருங்கி வர அலுவலகத்தில் இருந்து வேலையை விட்டு நின்று இருந்தாள் , ஏதேதோ எண்ணங்களில் மூழ்கி இருந்தவளை கலைத்தது அந்த ஃபோன் கால். 

அம்மா கொஞ்சம் வேலை இருக்கு , நான் வெளியே சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு அந்த அபார்ட்மென்ட்க்குள் நுழைந்து ரூம் நம்பர் 205க்கு சென்றவள் காலிங் பெல் அழுத்தி நின்றவளை கதவினை திறந்து வரவேற்றாள் ஒரு நவ நாகரிக பெண். அவள் அணிந்து இருந்த  உடை அவளை ஒருமாதிரியாக காட்டியது.

நான்தான் கவிதா , ஐ திங்கக் நீங்கள் தான்  கால் செய்த மேனகாவா என்று வினவுபவளை பார்த்து , எஸ் எஸ் ப்ளீஸ் 2மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க மேடம் வந்து விடுகிறேன் என்று ஒரு அறைக்குள் நுழைந்து கொண்டால் அந்த புதியவள். 

கையில் ஜூஸ்உடன் அவன் சிறிது நேரத்தில் வர ,இங்கே பாருங்கள் மேடம் , நீங்கள் ஏதோ கீர்த்திவாசன் பற்றி  முக்கியமான விஷயம் என்று கூறவும் தான் நான் இவ்வளவு தூரம் வந்ததே கொஞ்சம் பாஸ்ட்டா கூறினிர்கள் என்றால் நான் செல்ல வசதியாக இருக்கும் என்று அவசரமாக கிளம்ப துடிப்பவளை பார்த்து சிறு கேலி புன்னகையுடன் , என்ன அவசரமாக போய் கீர்த்தியுடன் உன் திருமணத்தை பற்றி கனவு காண போகிறாயா , இங்கே பார் நான் செல்வதை தெளிவாக கேட்டு கொள் , அந்த கீர்த்தி அவ்வளவு நல்லவன் இல்லை , அதற்கு நானே சாட்சி , தயவு செய்து உன் திருமணத்தினை இதோடு நிறுத்தி விட்டு வேறு நல்ல மாப்பிள்ளை பார்த்து கட்டிகொண்டு வாழ கற்றுகொள் , என்னை போல் ஏமார்ந்து நிற்காதே , ஏதோ என்னை மாதிரி ஒரு பெண் வாழ்க்கையும் முடிய வேண்டாம் என்று தான் இவ்வளவு தூரம் நான் பேசுவதே என்று கூறுபவளை இப்பொழுது பார்த்து சிரித்து கொண்டு இருந்தது கவிதா. 

என்ன மேடம் , விளையாட்டா நீங்கள் யாரு என்ன கூட தெரியாது , இதில் நீங்கள் சொல்வதை நம்பி நான் திருமணத்தினை வேறு நிறுத்த வேண்டுமா , எனக்கு நிறைய வேலைகள் இருக்கு , நான் கிளம்புகிறேன் என்று எழுந்திருக்க போனவளை , நீ இப்படிதான் பேசுவாய் என்று எதிர்பார்த்தேன் , சரி இந்த போட்டோ அனைத்தும் பார்த்துவிட்டு பின் படித்த பெண்ணாக தெளிவாக பேசு சரியா என்று கேலி புன்னகையுடன்  அவள் நீட்ட , அதை வாங்கி பார்த்தவளது முகம் மாற ஆரம்பித்தது. சிறு யோசனையுடன் 

சரி கீர்த்தியை எப்படி உங்களுக்கு தெரியும் என்று வினவ , அவள் அந்த மேனகா அனைத்து விவரங்களையும் கூறி முடித்தாள். கீர்த்தி யுடன் கடந்த இரண்டு வருடமாக காதலியாக வாழ்ந்தாளாம் , இப்பொழுது பிள்ளை வேறு இருக்கின்றதாம் , திருமணம் என்று கூறி அவளை ஏமாற்றியதாக அந்த புதியவள் கூறினாள். 

ஒரு நிமிடம் கண் மூடி யோசித்து விட்டு அவளை நோக்கியவள் , சரி நீங்கள் எந்த ஊர் என்று சொல்லமுடியுமா , கீர்த்தியை எங்கு எப்பொழுது பார்த்திர்கள் என அனைத்து விவரங்களையும் தெளிவாக கேட்டு கொண்டாள் கவிதா, 

அந்த புதியவளோ , கவிதாவின் கேள்விகளை உள்வாங்கி கொண்டு ஒரு வழியாக எல்லாவற்றையும் சொல்லிமுடித்தாள். 

இறுதியில் நிம்மதி புன்னகயுடன்  ,சரி மேடம் , இப்பொழுது நான் கிளம்பலாமா என்று கேட்பவளை பார்த்து திகைத்து நின்றாள் அந்த புதியவள் , 
என்ன நான் பாட்டுக்கு இவ்வளவு சொல்கிறேன் நீ பாட்டுக்கு போறேன்னு சொல்ற , உனக்கு உன் வாழ்வை பற்றி கவலையே இல்லை போல் தெரிகிறது என்று கேலியாக பேச, 

ஓ , என் வாழ்வில் நீங்கள் ஏன் இவ்வளவு அக்கறையாக இருக்கிரிற்கள் என்று தான் புரியவில்லை , அதான் ஏன் என யோசித்து கொண்டு இருந்தேன் , என்று புன்னைகை செய்து விட்டு , நீங்கள் சொல்லும் ஏதும் உண்மை இல்லாதபொழுது நான் ஏன் அதை நினைத்து கவலைபடவேண்டும் என்று பேசுபவளை அதிசயமாக பார்த்தாள் புதியவள், 

என்னது பொய்யா , நான் எவ்வளவு தெளிவாக சொல்றேன் , நீ என்னவென்றால் ..... என்று அவள் இழுக்க 

 இங்கே பாருங்கள் மேடம் , நீங்கள் சொன்ன இரண்டு வருடத்திற்கு முன் உங்கள் காதல் பின் குழந்தை  என்றால் உங்கள் மகனுக்கு இப்பொழுது 5வயது ஆகிருக்க வாய்ப்பே இல்லை , அது மட்டுமில்லாமல் நீங்கள் கூறிய அந்த நேரத்தில் கீர்த்தி இந்தியாவிலே இல்லை , அவனுடைய மேல் படிப்பிற்காக யூ எஸ்ல இருந்தார் , ஸோ மேபீ உங்களது லவ் ஸ்டோரி அங்கே நடந்தது என்று சொல்லிருந்தால் நான் யோசித்து கூட இருப்பேன் , அதோடு  நீங்கள் கூறுவதை போல் உங்களது நேடிவ் பிளேஸ் திருநெல்வேலி என்றால் நீங்கள் பேசும் லாங்குவேஜ் முறையே மாறுகிறதே , அண்ட் இறுதியாக இந்த மேக்அப் கூட எனகென்னவோ இன்று தான் நீங்கள் முதல் முறை ட்ரை செய்த மாதிரி இருக்கு , அண்ட் உங்களுடைய டிரஸ் கூட அப்படிதான் தோன்றுகிறது , ஏதோ என்னை நம்ப வைக்க  நீங்கள் தயாராக உள்ளது போல் தெரிகிறது ,

கடைசியில் 5வருடங்களாக லவ் செய்யும் என்னிடமே  இது வரைக்கும் தப்பாக நடக்க வேண்டும் என்று ஒருநாளும்  கீர்த்தி நினைக்கவில்லை  , இரண்டு வருடம் காதலிப்பதாக கூறும் உங்களிடம் இப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று கூறுபவளை ஆச்சர்யமாக நோக்கினாள் அந்த புதியவள் . 

ஸோ ப்ளீஸ் நீங்கள் ஏன் என்னிடம் இப்படி பொய் சொல்லவேண்டும் என்று புரியவில்லை ஆனால் ஒருமுறை அவனை தப்பாக நினைக்கவில்லை என்றாலும் ,விளக்கம் கூட கேட்காமல்  சந்தேகப்பட்டு , இந்த 3வருடங்களாக அவனை விட்டு தள்ளி இருக்கிறேன் , இனி என்ன செய்து என்னை புரிய வைப்பது என்று கூட புரியாமல் தனியாக அழுது கொண்டு வாழ்கிறேன் , இனிமேலும் என் கீர்த்தியை பற்றி தவறாக நீங்கள் இல்லை , கீர்த்தியே வந்து கூறினாலும் கூட நான் நம்பபோவதில்லை என்று அவள் சிறு கண்ணிருடன் முடிக்கையில் அவளை அவளுடைய கீர்த்தி வாசன் அணைத்து கொண்டு   இருந்தான்.

திடிரென்று யார் தன்னை அணைத்தது என்ற யோசனையில் நிமிர்ந்து முகம் நோக்கியவள் அவனது முகம் பார்த்து கீர்த்தி.............என்று விசும்ப , கவி ப்ளீஸ் அழாதே வேண்டாம் என்று தன் பிடியினை இறுக்கினான் அவன் அவளது கீர்த்தி வாசன். 

டேய் , நான் தான் சொன்னேன்ல , எனக்கு நடிக்க வராதுன்னு இப்பொழுது பார், அவள் கண்டேபிடித்து விட்டாள் , ஆனாலும் உன் லவர் இவ்வளவு யோசிக்க கூடாதுப்பா  என்று சிரிக்க , 

ஹே பவித்ரா வாலு  ,நாங்கள் தனியாக பேசவேண்டும் , ஸோ இப்பொழுது உன்னை கவனிக்க முடியாது , கொஞ்சம் கிளம்புறியா , அங்கே உன் பிரபா வெயிட்டிங் என்று அவளை கிளப்ப , டேய் டேய் நீ தனியாக கொஞ்சனும் சொல்லு , அதை விட்டு ஏன்டா அவரை கூப்பிடுற, சரி பார்த்து சார் பக்கத்து ரூம்ல தான் நாங்கள் இருப்போம் , அதை மறக்க வேண்டாம் என்று அங்கிருந்து இங்கிதமாக விலகினாள் பவித்ரா . 

அவளது அழுகை குறைய , கவி உன்னை டெஸ்ட் செய்ய நான்தான் என்னுடைய ப்ரண்ட் வெச்சு இப்படி பேச செய்தேன்னு கோபமாடா என்று வினவ , 

ப்ராமிஸா இல்லை கீர்த்தி , இன்பாக்ட் நானே எப்படி உன்னிடம் ப்ரூவ் செய்றதுன்னு யோசித்து கொண்டுதான் இருந்தேன் , நல்லவேளை நீயாக அதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்தற்கு நன்றி என்று அவள் அழ , 

இங்கே பார் , நார்மலா நாம் பிரிந்து இருந்த பொழுது அழுதாலே உன்னை கண்ட்ரோல் செய்ய ஹக் பண்ணுவேன் , இப்போ நீ என்னை முழுசாக நம்புகிறாய் என்று தெரிஞ்சும் நீ என்னுடைய கைகளுக்குள் இருக்குற இந்த நிலைமையில் என்ன செய்வேன்னு நீ யோசிக்க வேண்டியது இல்லை என்று நம்புறேன் புரிஞ்சுதா டியர் என அவன் இழுக்க....

ஐயோ கீர்த்தி நீ வேற என்று  ஆரம்பிக்க , ஏன்! யாரோ என்னுடைய அறைக்குள் வந்து , நான் வரைந்த போட்டோ அடியில் , யார் உங்களை தடுத்தது செய்யவேண்டியது தானே என்று தைரியமாக எழுதி வெச்சுட்டு போய்ட்டாங்க , இப்போ எதுக்கோ பயம் என்று கூறினால் என்ன அர்த்தம் என்று அவன் நியாபக படுத்த , ஐயோ பார்த்துடீங்களா அதை என்று சிணுங்கினாள் அவள். அது திருமணத்திற்கு பிறகு என்று மீனிங் செய்து எழுதியது என்று பதிலளித்தாள்  கவிதா.

கவி நீ என் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கிறாய் என்று கேட்கும் பொலுதுஇ எவ்வளவு  ஹாப்பியாக இருக்கு தெரியுமா, நிஜமாக நான் எதிர்பார்கவே இல்லை , தாங்க்   யூ ஸோ மச் டியர் , குட்டிம்மா என்று அவன் தன் அணைப்பினை வலுபடித்தினான். 

கீர்த்தி எப்பயுமே , நான் உன்னை தப்பாக நினைத்தது இல்லை , அன்று ஏதோ கேட்க நினைத்து எதையோ கேட்டு உன்னை  பிரிந்து இவ்வளவு நாட்களும் நரக வேதனையும் அனுபவித்து விட்டேன் , இதுவே ஏன் வாழ்விற்கு போதும் என்று கருதுகிறேன், என்னை மன்னித்து நீ ஏற்று கொள்வாயா ப்ளீஸ் என்று அவள் சந்தேகமாக வினவ , 

அப்படி இல்லை கவி , அன்று தவறு உன்னிடம் மட்டும் இல்லை , நீ தான் எதையோ கேட்டு கொண்டு என்னிடம் கோபம் கொள்கிறாய் என்றால் நானாவது உனக்கு விளக்கி இருக்க வேண்டாமா , நீயாக வரவேண்டும் என்று இவ்வளவு நாட்கள் விலகி இருந்ததும் எவ்வளவு தப்பு அல்லவா , அதற்கு நீதான் முதலில் என்னை மன்னிக்க வேண்டும் என்று அவளிடம் பதில் பேசியவன் , அதோடு இல்லாமல் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று வேற கூறி உன்னை அழவேறு வைத்து விட்டேன் , என்னை மன்னிப்பாயா கவி ப்ளீஸ் , என்று  பேச பேச , அப்பாடா ஒருவழியாக அனைத்து ப்ரொப்லெமும் ஒரு முடிவிற்கு வந்ததே என்று இருவருக்கும் சந்தோசமே அதிகமாகியது. அதோடு இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டாம் என்ற முடிவிற்கு வந்தனர்.

சரி நான் உன்னிடம் பேசவேண்டுமே இதைப்பற்றி என்று அவனருகில் இருந்த கட்டிலில் அவளை அமர்த்தியவன் , அவனது அணைப்பினிலே , அன்று நடந்தது என்னவென்றால் என்று தொடங்க ஆரம்பிக்க , வேண்டாம் கீர்த்தி உங்களை நான் முழுவதும் நம்புகிறேன் , ஸோ விளக்கம் கூட தேவையே  இல்லை என்று அதை  தடுக்க , அப்படி இல்லை கவி , இது என்னோட திருப்திக்காக நான் கூற நினைக்குறேன் ப்ளீஸ் என்று அவளை அமைதியாக்கி தன் விளக்கங்களை கொடுத்தான்.......................................




 
பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருக்கும்னு நம்புறேன்....திஸ் இஸ் மை FB பேஜ் , முடிஞ்சா லைக் அண்ட் ஷேர் பண்ணுங்க 


ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் போஸ்ட்ல கிளைமாக்ஸ்ல  மீட் பண்ணலாம் bye ......


Thankyou 


இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI

Sunday, 8 May 2016

காதல் கவிதைகள் நீ !

Chapter 14


..................................அவன் செய்கையின் அர்த்தம் புரியாமல் யோசித்த கவிதா , இது பற்றி யாரிடம் கேட்பது, பட் இதில் ஏதோ இருக்கிறது , அவன் என்னை அணைத்த நிமிடங்களோ கல்லுரி தினங்களில் அவன் கொண்டிருந்த காதலில் சிறிதும் குறையாமல் இருக்கிறது என்று தெளிவாக காட்டியது, என்னதான் இருக்கும் என யோசித்து கொண்டே , தன் மன எண்ணங்களை அடக்கிவிட்டு அவர்களை வழியனுப்பும் வேலையை கவனித்தாள்.

இதை பற்றி யாரிடம் கேட்பது என யோசித்து ஒரு முடிவிற்கு வந்தவளாக, காலையிலே பரபரப்புடன் கிளம்பி அலுவலகம் சென்றவள் மதிய வேலையையும் சேர்த்து முடித்து விட்டு கொஞ்சம் பார்த்து கொள்ப்பா என்று அலுவலக தோழியிடம் கூறிவிட்டு , அறை நாள் விடுமுறையுடன் கீர்த்தியின் வீட்டிற்கு விரைந்தாள். 

அடடே வா வா கவிதா , நேற்று தானே வந்துவிட்டு வந்தோம் , அதற்குள் கீர்த்தி நியாபகமா என்று சாரதா கேலி செய்ய , ஐயோ அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைம்மா , உங்களை தான் பார்க்க வந்தேன் என்று பதில் கூறிய தன் வருங்கால மருமகளை பார்த்து கேலி புன்னையுடன்  , சரி சரி வா , முதலில் சாப்பிட்டுவிட்டு பிறகு பேசலாம் என்று வேண்டாம் என கூறியவளை வலுகட்டாயமாக சாப்பிட செய்தாள் சாரதா. 

மாமா எங்கே அத்தை ,என்றவளை பார்த்து புன்னகை செய்தவள் , உங்கள் மாமா இன்னும் சிறிது நேரத்தில் மதிய சாப்பாடிற்கு வருவார் , இரு இரு , நீ கேட்கவில்லை என்றாலும் நானே சொல்லிவிடுகிறேன் , உன் வாசு  மதியம் வருவதில்லை , இவினிங் 6மணிக்கு வந்து விடுவான் போதுமா தகவல் என்று அவள் கூற கவிதாவிற்கோ வெட்கமாகி போனாலும் , எப்படியோ நாம் பேசும்பொழுது அவன் இல்லாமல் இருப்பதும் நல்லது என தோன்றியது. 

சரிம்மா சொல்லு , என்ன விஷயம் என்று தொடங்கியவளிடம்  யோசித்து கொண்டே அது இல்லை அத்தை என கவிதா இழுக்க , இங்க பாரு கவிதா ,என்னை உன் அம்மாவென்றே நினைத்து கொள், தைரியமாக சொல் புரியுதா என உரிமையாக கேட்க  அதற்கு மேல் தயக்கம் காட்டவில்லை கவி. 

எனகென்னவோ இந்த திருமணத்தில் கீர்த்திக்கு அவ்வளவு விருப்பம் இல்லை என்று தோன்றுகிறது , ஆகையால் இது வேண்டாம் என்று நினைக்கிறன் , சாரிம்மா என்னை மன்னித்துவிடுங்கள், இந்த பேச்சை இதோடு நிறுத்திவிடலாம்  என்று கண் கலங்க பேசியவளை பார்த்து சிரிப்பு தான் வந்தது சாரதாவிற்கு. 

தான் கூறியதை கேட்டு , தன் முன் சிரித்து  கொண்டிருப்பவளை கலக்கத்துடன்கவிதா  பார்க்க, பின்னே என்னம்மா , திருமணதேதி அடுத்த மாதம் என்று பேசியதற்கே , ஏன்ம்மா ஒருமாத இடைவெளி அதற்கு முன்னாடி ஏதும் நாட்கள் இல்லையா என்று  என்னை தொல்லை செய்கிறான் , இதில் நீ அவனுக்கு விருப்பம் இல்லை என்று கூறினால் நான் சிரிக்காமல் வேறு என்னதான் செய்வது சொல்லு என்ற பதிலை கேட்டு மனதில் ஒரு குளிர்ச்சி பரவியது. இருப்பினும் விடாமல்  இல்லைம்மா உங்கள் விருப்பத்திற்காக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது என்றவளிடம் , 

இங்கே பாரு கவிதா , கீர்த்தி சிறுவயதிலேயே எது செய்தாலும் பொறுப்பாக பார்த்து பார்த்து செய்வான் , ஆகையால் அவன் எடுக்கும் எந்த முடிவிற்கும் நானும் அவனது அப்பாவும் தடை செய்தது இல்லை, அவ்வாறு இருக்கையில் எனக்கு தெரிந்து அப்பொழுது கல்லுரி இரண்டாம் வருடம் என்று நினைக்கிறேன் ஒருநாள் என்னிடம் வந்து அம்மா நான் எனது மனைவியை தேர்ந்தெடுத்து விட்டேன் , இந்த வீட்டிற்கு மருமகள் என்றால் அவள் ஒருத்தியால் மட்டும்தான் வரமுடியும் என்று தெளிவாக கூறினான். 

ஆனால் அதன் பின் உங்களுக்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை கல்லுரி முடிந்தும் கூட அவன் எதுமே கூறவில்லை , அதன்பின் அடுத்த இரண்டு வருடங்களில் நாங்களும் எப்பொழுது அவளை கூட்டிவருவாய் அல்லது வேறு பெண் பார்க்கலாமா என்று கூட கேட்டுபார்த்தும் அம்மா டைம் வேண்டும் என்று மட்டும் தான் கூறினான், ஆனால் கடந்த வாரம் என்னிடம் வந்து திருமணதிற்கு சம்மதம் , பெண் நீங்கள் வீட்டிற்கு கூட்டிவந்த கவிதாதான் , என்று கூறிய பொழுது தான்  அப்பாடா ஒரு வழியாக ஒத்துகொண்டானே என்று தோன்றியது. 

இவனாக வந்து கூறினான் என்றால் கண்டிப்பாக நீ தான் கல்லுரி படிக்கும்பொழுது கூறிய பெண் என்று அவன் கூறி எனக்கு புரியவேண்டியது இல்லை . நீயும் அப்படிதான் என்று பெண் பார்க்க வந்த பொழுது உன் அம்மா கூறினார்கள் , அப்படிருக்க நீங்கள் இப்பொழுதாவது சேரும் முடிவெடுத்ததை எண்ணி நாங்கள் சந்தோசமாக இருந்தால் , நீ வந்து கண் கலங்க திருமணத்தை நிறுத்த சொல்லும் காரணம் தான் புரியவில்லை கவிதா , சொல்லு அப்படி என்னதான் நடந்தது என்று கவிதாவின் மனதிற்கு தெம்பளிக்கும் விதமாக பேசினாள் அவள். 

அது வந்து என்று கவிதா இவ்வளவு நாட்கள் தங்களுக்குள் நடந்த அனைத்தையும் விவரமாக கூற, சாராதாவிடம் இருந்து நிம்மதி புன்னகை தான் தோன்றியது, ஸோ நீ கூறியதை வைத்து பொழுது இரண்டு  விஷயம் தெளிவாக தெரிகிறது , ஒன்று நீங்கள் இருவருமே ஒருவரை விட்டு ஒருவர் பிரியும் முடிவில் சிறிதும் இல்லை, அது மட்டுமில்லாமல் என் மருமகளுக்கு தன் தவறை  புரியவைக்க நினைத்தவன் , அவள் அழும் ஒரு நிமிடங்களை கூட அவன் தொடரவிடவில்லை என்று தெளிவாக புரிகிறது என்று சாரதா பேசுவதை கேட்க கேட்க கவிதாவிற்கு ஏதோ தெளிவானதை போன்று தோன்றியது. 

பார்க்கபோனால்  அவன் முன் அவள் அழதொடங்கிய நேரங்களில் ஒன்று அவளை மிரட்டியோ அல்லது பேச்சினை மாற்றியோ அதை தடை செய்து இருந்தான் கீர்த்தி, கல்லுரி காலத்தில் அவன் சொன்ன வார்த்தைகள் இன்றும் அவன் மறக்கவில்லை , கவி நீ விளையாட்டாக அழுவதை கூட நான் அனுமதிக்கமாட்டேன், நீ அழுவதை பார்க்கும்பொழுது எனக்கு உயிர் போகும் வேதனை கண்ணில் தெரிகிறது  ,ஸோ  உன்னை கண் கலங்காமல் பார்த்து கொள்வான் இந்த கணவன் என்று அவன் கேலியாக சொன்னாலும் கூட இதை இன்று வரை பின்பற்றியும் இருக்கிறான் என்று நினைக்கும் பொழுது இது வரையுளும் அவன் காதலில் குறைவே இல்லையே என்ற எண்ணமே அவளுக்கு மிக பெரிய  சந்தோசத்தை அளித்தது.

என்னடா வாசுவுடன் கனவா என்ற சாரதாவின் குரலில் நிகழ் காலத்திற்கு வந்தவள் , நீங்கள் சொல்லும் பொழுதுதான் எனக்கே இது புரிகிறது மிகவும் நன்றிம்மா என்று என அவள் சிறு குழந்தை போல் பேசுவதை பார்த்து அப்பாடா ஒருவழியாக என் மருமகளுக்கு புரிந்ததே ரொம்ப சந்தோசம் என்று அவர்கள் பேசிகொண்டிருக்கும் பொழுதே கேசவன் உள்ளே வர , அட வா கவிதா வா,வா , ஹ்ம்ம் நான் கூட கீர்த்தி மட்டும் தான் உன் நினைவால் திரிகிறான் என்று நினைத்தால் இங்கும் அப்படிதான் போலேயே என முறுவலிக்க , மாமா நான் அவரை பார்க்க வரவில்லை , அத்தையை தான் என்று கூறினாலும் வெக்கத்தில் முகம் சிவந்தது. 

ஆசிர்வதியுங்கள் மாமா என்று அவர் காலை தொட்டு வணங்க , நல்லா இருடா , என்று தன் வாழ்த்துகளை கூறிவிட்டு சாப்பிட நகர்ந்தார். அத்தை நான் வேண்டுமானால் பரிமாறவா என்றவளிடம் அதெல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் , நீ சென்று வீடு சுற்றி பார்த்துவிட்டு வா, அதோ மாடியில் அந்த இரண்டாவது ரூம்தான் வாசுவினது என்று விவரம் கூறி  அனுப்பிவைத்தார் . 

வீடினை சுற்றி பார்த்து கொண்டே படியேறவளுக்கு அவனது அறையினை பார்க்கும் ஆவல் அதிகமானது, உள்ளே சென்று லைட் போட்டவள்  ஒரு கணம் அதிர்ச்சியில் நின்றுவிட்டாள் , வீடு முழுவதும் மஞ்சளும் வெள்ளையும் கலந்து இருந்தாலும் அவன் அறை மட்டும் அவளுக்கு பிடித்த ப்ளூ மற்றும் ஒய்ட் கலவையில் மிக ரம்மியமாக காட்சி அளித்தது. அது மட்டும் இல்லாமல் அறை முழுதும் அவளது புகைப்படமே நிறைந்து இருந்தது. ஒவொன்றாக கவனிக்க ஆரம்பித்தாள் கவிதா . 

அவனது பெட்ரூம் அருகில் இருந்த டேபிளில் அவர்கள் இருவரும் ஜோடியாக சிரித்து கொண்டிருக்கும் போட்டோ , இதன் காப்பி அவளிடமுமே இருந்தது , சொல்லப்போனால் இதனுடன் தானே அவள் இவ்வளவு நாட்களை கழித்தது. 

திரும்பி சுவற்றினை பார்த்தவள் அதில் இருந்த பெயிண்ட்டிங் பார்த்து அசந்துவிட்டால், இது நம்மளுடைய என யோசித்தவளுக்கு அந்த போட்டோவின்  அடியில்  இருந்த எழுத்து தெளிவாக நியாபகபடுத்தியது , என் தேவதையை நான் முதன்முதலாய் பார்த்து மயங்கி இவளை போன்று ஒரு அமைதியான  பெண் மட்டுமே என் வாழ்கை துணைவியாக வரமுடியும் என்று ஏங்கிய நாள் என்று அவளது பக்கவாட்டு தோற்றம் காட்சிஅளித்தது , அதில் அவள் மெருன் கலரில் சுடியும் , வெள்ளை கலரில் துப்பட்டாவுடன் லூஸ் ஹேர் ஸ்டைலில் மல்லிகை பூவுடன்  இடது கன்னத்தில் மச்சதுடன் வகுப்பு டேபிளில் கை வைத்து ஏதோ  யோசித்து கொண்டிருப்பதை போன்ற தோற்றம் , ஒரு கணத்தில் அவளுக்கு கண்ணிரே வந்து விட்டது , எனக்கு கூட இது நியாபகம் இல்லையே இதில் எப்படி இவ்வளவு தத்ரூபமாக வரைந்து இருக்கிறான் என்று அசந்து பார்த்தவள் , 

அதன் அடியில் பின்குறிப்பு என்று ஏதோ மீண்டும் எழுதிஇருக்க என்னவென்று கவனித்தாள் , அதில் ஒன்றை தப்பாக நினைத்துவிட்டேன் அன்று மட்டும் தான் அவள் அமைதி , பழகியதில் ஐயோ சரியான வாயாடி பொண்டாட்டி என்று அவன் எழுதிஇருக்க அவளை மீறி சிரிப்பு தோன்றியது, இது அவனே கூறி அவள் நிறையமுறை கேட்டிருக்கிறாள், உன்னை போய் அமைதி என்று நினைத்தேனே , ஆனால் சரியான வாய் உனக்கு , பட் அதையும் திருமணத்திற்கு பிறகு எப்படி சமாளிப்பது என்று நன்றாகவே தெரியும் என அவன் கூறி அவள் இதழ்களை பார்ப்பதும் அதன் அர்த்தம் புரிந்து அவள் முகம் சிவப்பதும் நியாபகத்திற்கு வந்தது. 

அடுத்த போட்டோ அவர்கள் லவ் ப்ரொபோஸ் செய்த டே , அடுத்து அவளை முதன்முதலில் கல்லூரியில் கிஸ் செய்த டே என்று வரிசையாக இருந்தது, இறுதியாக அவர்கள் பிரிந்த அன்று அவள் சந்தேகமாக அவனிடம் பேசிய போட்டோ இருக்க , அதன் அடியில் என் உயிர் என்னை விட்டு பிரிந்த டே , என்று அவன் கண்ணிருடன் எழுதியதை போன்று இருந்தது அதன் அடியிலும் பின்குறிப்பு என எழுதிருந்தது, அவள் அப்படி பிரியும் அன்றே அவளை இழுத்து அணைத்து ஒரு முத்தம் கொடுத்து , விளக்கம் கூறி இருந்தால் இந்த பிரிவு வந்தே இருக்காது, தப்பு என் மேலும் தான்  என எழுதி இருந்தான் , செய்யவேண்டியது தானே , யார் உன்னை தடுத்தது என்று மனதில் நினைத்து கொண்டதோடு இல்லாமல் இருக்கட்டும் என்று அருகில் இருந்த மார்கரால் அதை அடியில் எழுதியும் வைத்தாள், 

அடுத்து பெயிண்ட்டிங் அல்லாது போட்டோவாக இருந்தது , அது ஒரு மாததிருக்கு ,முன் அவள் அவளை சந்தித்த தினம்,  அதில் அவள் கோபமாக அவன் முன் கோபமாக கையை நீட்டி பேசிகொண்டிருப்பதை போன்று இருந்தது , அதிலும் அடியில் என் தேவதையை  2வருட பிரிவுக்கு பிறகு நான் சந்தித்த டே என இருக்க , அதிலும் பின்குறிப்பாக அவள் பேசுவதை கவனிக்காமல் அவள் அழகில் நான் மயங்கி அவளை ஒன்றுமே செய்ய முடியாமல் என் கையை கட்டி கொண்டு இருந்த டே என இருந்தது. 

அசந்து போய் கட்டிலில் அமர்ந்து விட்டவள் வந்த அழுகையை கண்ட்ரோல் செய்ய முடியாமல்அழுது தீர்த்து விட்டாள் , ச்ச , கீர்த்தி அளவுக்கு நான் கூட காதலிக்கவில்லை போலயே , என்ன மாதிரி அவனை கஷ்டபடுத்திஇருக்கிறோம் என்று தன்னையே நொந்து கொண்டவள்  இவனிடம் எப்படி தன் மேல் உண்டான நம்பிக்கையை நிரூபிப்பது, எப்பொழுது சேர்ந்து வாழ்வது  என்று  யோசித்தவளை  சாரதாவின் குரல் கலைக்க ,ஏக்கத்துடன் அனைத்தையும் பார்த்து விட்டு , கதவினை பூட்டிவிட்டு கிழிறங்கிவந்தாள்.

என்னடா வாசு ரூம்லேயே இருந்து விட்டாய் போல் , வீடை பார்த்தது போன்று இல்லையே என்பவளிடம் சமாளித்து மாமா எங்கே என கேட்க , அவர் சாபிட்டுமுடித்து அலுவலகம் சென்று திரும்பியும் வந்துவிடுவார் இன்னும் சிறிது நேரத்தில், அங்கே பார் மணியை என்று காட்ட , அதில்5.30என இருக்க இவ்வளவு நேரமா அங்கு இருந்தோம் என யோசித்து விட்டு ,  ஐயோ கீர்த்தி வரும் நேரமல்லவா நாம் கிளம்பிடனும் என்று அவசரமாக திரும்ப ,என்ன அவசரம் அவனை பார்க்கவந்துவீட்டு பின் பார்காமலே சென்றால் என்ன அர்த்தம் , நீ சென்று முகம் கழுவி ரெடியாக இரு , அவன் வந்து விடுவான் , நாம்அவனுக்கு பிடித்த பால் கொழுக்கட்டை செய்யலாம் புரிகிறதா போ என்று அனுப்புகையில் அதை தடுக்க முடியாமல் அவளுடைய அவனுக்காக காத்திருக்க துவங்கினாள்.

கீர்த்தியின் வண்டி சத்தம் கேட்க , ஒருவித பதற்றத்துடன் அவன் அம்மாவுடன் வேலையை பார்த்து கொண்டிருந்தாள் அவள் , என்னம்மா வாசனை எல்லாம் கமகமக்குது , யாரும் கெஸ்ட் வந்து இருகிறார்களா என வினவ  , ஆமாம் ஆமாம் எல்லாம் நம் வீட்டிற்கு வரபோகிறவர் தான் இரு தண்ணிர் கொண்டு வருகிறேன் என்ற தாயின் குரலில் யாராக இருக்கும் என யோசித்து கொண்டே  ஹாலில் இருந்த தொலைகாட்சியை ஆன் செய்ய , அதில்

 "இதழ் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் , இதழோரம்......இதயம் இடம் மாறும் இளமை வழிந்தோடும்"....................என பாடல் ஒலித்து கொண்டிருக்க , கண் மூடி அதை ரசித்தவன் எஸ் எஸ் என் கவியின் இதழ் பட்டால் எனக்கு கூடதான் இதயம் இடம் மாறுகிறது என்று கனவில் ஆழ்ந்தவனை கவிதாவின் தண்ணீர் என்ற சத்தம் கலைக்க , என்னடா இது இவளை பற்றி நினைத்தால் , அம்மாவின் குரல் கூட கவிதாவினை போல் ஆகிவிடுமா என்ன! என்று மனதில் சிரித்து கொண்டே விழி திறந்தவனுக்கு எதிரில் கவிதா நீர் சொம்புடன் , வழக்கம் போல் அவளுக்கே உரித்தான வெட்கம் கலந்த பார்வையுடன்  நிற்க அசந்து போய் இது கனவா என நினைத்து கொண்டிருக்க , 

மேகம் ஒன்று  நேரில் இன்று வாழ்த்த வந்ததடி ,தாபம்  கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்து கொண்டதடி....இனி  கனவும்  நினைவும்  உன்னையே....தினம் தினம்  தொடரந்திடும்.......காதல் கவிதைகள் படித்திடும் நேரம்.......இதழோரம் என ஒலித்து கொண்டிருக்க , இருவரும் அதில் லயித்து போய் நிற்க , வலிஞ்சது போதும் வாசு இங்க அம்மாவும் இருக்கேன்டா மறந்துடாத என்ற குரலில் இருவரும் நிகழ் காலத்திற்கு வர , அம்மா அதெல்லாம் ஒன்றும் இல்லைம்மா நீங்கள் வேற என்று சமாளித்தவன் , கவியிடம் இருந்து நீரை வாங்கி பருகி கொண்டே இவள் எப்படி இங்கு இப்பொழுது வந்தால் என யோசித்து கொண்டு அமர , கவிதாவோ அமைதியாக அவனது அம்மாவிடம் போய் அமர்ந்து கொண்டாள். 

அம்மா நீட்டிய பால் கொழுக்கட்டையை சுவைத்தவன் , என்னம்மா இன்று மிகவும் அருமையாக இருக்கு , சூப்பர், ஸோ கெஸ்ட் வந்தா கலக்குவீங்க போல என்றவனிடம் , அது எப்படி இல்லாமல் போகும் , நான் என்றால்  வெறும் பால் கலந்து செய்வேன் , ஆனால் இன்று அதில் காதல் , அன்பு , நேசம் எல்லாம் கலந்து,  வந்துஇருக்க  கெஸ்ட் ரெடி செய்தாங்க , பின் இல்லாமலா போகும் சொல்லு வாசு , என்று அவள் கேலிசெய்ய , ஐயோ அத்தை நீங்கள்  வேறு ப்ளீஸ் என்று கெஞ்ச , கவிதாவை காதலுடன்  நோக்கினான் கீர்த்தி . 

அதானே பார்த்தேன் , ஏதோ வித்தியாசம் தெரிகிறதே , என்று நினைத்தேன் , எப்படி என்றாலும் நீங்கள் செய்யும் அளவிற்கு இல்லைம்மா என்று அவன் பதில் அளிக்க , டேய் போதும்டா , வழியுது தொடைச்சுக்கோ என்று கேலி செய்தால் சாரதா .  சரி சரி வந்து இருக்க கெஸ்ட் உன்னிடம் ஏதோ   முக்கியமாக பேசணுமாம் , என்னவென்று கேள் , எனக்கு உள்ளே வேலை இருக்கு , என்று எழுந்திருக்க, அப்புறம்கீர்த்தி இது ஹால், நான் உள்ளே இருக்கிறேன் , அப்பா எப்பொழுது வேண்டுமானாலும் வருவார் சரிதானா  அதை இருவரும் மறந்துவிடாதிர்கள், வேண்டுமானால் தோட்டத்திற்கு சென்று பேசுங்கள்.....கூறிவிட்டு கிளம்ப , ஐயோ நீங்கள் வேறு ஏன்மா இப்படி மானத்தை வாங்குறிங்க.....என்று பதில் கூறிவிட்டு கவியிடம் திரும்பியவன் என்ன என்பது போல் புருவம் உயர்த்த,  அவளோ மனதில் இப்படி மாட்டி விட்டு போறாங்களே என்று யோசித்தாலும் அவளுமே அவனிடத்தில் பேசவேண்டிஇருந்தது . 

அது வந்து என அவள் தடுமாறி தொடங்க , வா அங்கே பொய் பேசலாம் என்று தோட்டத்த்திருக்கு அழைத்து சென்றான், ரோஜா , செம்பருத்தி என்று தோட்டமே பூத்து குலுங்க , சொல்லு என்ன விஷயம் என்று கேட்டான் அவன், ஹ்ம்ம் வந்து , உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் இந்த திருமணம் வேண்டாம் , உங்கள் அம்மா விருப்பத்திற்காக வேண்டாம் என்று பேச , வழக்கம் போல் கீர்த்தியோ அவளது உடை ,அவளது தோடு ,  அவளது உதடு அசைவு என்று அவளையே பார்வையால் விழுங்கி கொண்டிருந்தான் . 

அவன் பார்வையை உணர்ந்த பொழுதும் கவி அதை தடுக்கவில்லை , வேண்டும் என்றே அழுவது போல் அவள் பேசிக்கொண்டே கண்களை கையால் துடைக்க , ஐயோ இவள் இவ்வளவு நேரம் அழுது கொண்டா இருக்கிறாள் , அது தெரியாமல் நாம் அவளை ரசித்து ச்ச....என்று தன்னையே திட்டி கொண்டு, ஹே எதற்கு இப்பொழுது அழுவதை போல் நடிக்கிறாய் என்று முதலில் அழுவதை நிறுத்து என்று அவளை அதட்டும் குரலில் சொன்னான், இதை தானே அவள் டெஸ்ட் செய்து கொண்டு இருக்கிறாள் , விடுவாளா அவள் , இல்லை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு பிறகு நீங்கள் ஏன் கஷ்டப்படவேண்டும் என்று அவள் அழுகையின் தீவிரத்தை அதிகபடுத்த , அவ்வளவு தான் அவன் அவளை விட்டு வைக்கவில்லை. 

ஐயோ கவி என் செல்லம்ல ப்ளீஸ் அழாதே , இந்த கீர்த்தியால் உன்னை வெறுக்கமுடியுமா நீயே சொல் , நீ இல்லாமல் என்னால் வாழதான் முடியுமா.....ப்ளீஸ்டி அழவேண்டாம் என்று  அவன்  கல்லுரி காலத்தில் பேசுவதை போல் அவளை சமாதானம் செய்ய , நிமிர்ந்து அவனை பார்த்தாள் அவள். அவளது பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்தவன் , நல்லா மாட்டிகிட்டோமா கீர்த்தி , கடைசியில் கண்டே பிடித்துவிட்டாலே , என்று மனதில் நினைத்தாலும் அதை வெளிகாட்டாமல் , 

இங்கே பாரு உன்னை எனக்கு பிடிக்குதா , பிடிக்கலையா என்பது விஷயம் அல்ல , நீ என்னை நம்பாமல் சென்ற அந்த நாளை இன்றும் மறக்கமுடியவில்லை போதுமா , ஸோ விருப்பமே இல்லாமல் தான் ஒத்து கொண்டேன் , இது தான் உண்மை நீ வேண்டுமானால் நன்றாக  அழுது விட்டு வா ,திருமணத்தையும் நிறுத்தி விடு  நான் உள்ளே செல்கிறேன், என்று அவளை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிற்குள் விரைந்தான். 

அவளுக்கு தெள்ள தெளிவாக எல்லாமே புரிந்து விட்டது , கீர்த்தி ஒருநாளும் அவனை விட்டு போகபோவதில்லை, அவளை வெறுக்கவும் போவதில்லை  என்ற மிக பெரிய மன  நிம்மதியுடன் முக மலர்ச்சியுடன் அவளும் வீட்டிற்குள் நுழைந்தாள்..................................................



பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருக்கும்னு நம்புறேன்....திஸ் இஸ் மை FB பேஜ் , முடிஞ்சா லைக் அண்ட் ஷேர் பண்ணுங்க 


ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் சண்டே  போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......



Thankyou 


இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI