காதல் கவிதைகள் நீ !
ஹாய் மை நாவல் ரீடர்ஸ் , சாரி லாஸ்ட் வீக் என்னோட ஹெல்த் கண்டிசன் சரி இல்லாதததுனால என்னால் எழுத முடியவில்லை , இந்த வீக் அதற்கும் சேர்த்து எழுதிருக்கேன் , ஸோ படித்து விட்டு கமெண்ட் பண்ணுங்க பிரண்ட்ஸ்.....தாங்க் யூ...
Chapter 8
.....................ஹே , வாலு நீ மட்டும் இப்ப வழக்கமாக கேக்குற மாதிரி மன்னிப்பு கேட்கவில்லை , இப்படியே தள்ளி விட்டு நான் பாட்டுக்கு போய் கொண்டே இருப்பேன் , அப்புறம் உன் இஷ்டம் என்று விளையாட்டாக மிரட்ட ஐயோ , நீ செய்தாலும் செய்வ டி , மன்னியுங்கள் தாயே!, மன்னியுங்கள் தாயே! என்று கூறி கைகூப்ப , ஹ்ம் அந்த பயம் இருக்கணும் என்று சிரித்து கொண்டே கல்லூரிக்கு விரைந்தனர்.
கல்லூரிக்கு வந்தளுக்கு கீர்த்திவாசனை காணவில்லையே என்று யோசனையாக இருந்தது . இன்று வெள்ளையில் மஞ்சள் நிற பூக்கள் பூக்கள் பூத்தது போன்ற உடை அணிந்து , அதற்கு தகுந்த மஞ்சள் நிற துப்பட்டாவினில் ஒரு தேவதையை போல் காட்சி அளித்தாள் . இவனுக்காக நாம் பார்த்து பார்த்து அலங்கரித்தால் இவன் இன்னும் வரவில்லை ,வரட்டும் இன்று பேசவே கூடாது என்று அலுத்து கொண்டாள் மனதினில். லேஃ ப் வகுப்பு என்பதால் அனைவரும் அங்கு சென்றிருக்க , கீர்த்தி காணவில்லையே என்ற பதற்றம் இவளுக்குள் அதிகமாகவே இருந்து கொண்டிருந்தது .
ஹே டி, உனக்கு ப்ரோக்ராம் ரன் ஆகுதா , எனக்கு பாரு எரர் லிஸ்ட் ஷோ பண்ணுது , டேட்டா பேஸ் கணக்டிவிட்டி யும் வரவில்லை, பட் எதுவோ சச்செஸ்புலி ரெட்ரைவ் என வருது டி , கொஞ்சம் செக் பண்றியா ப்ளீஸ் என்ற ப்ரியாவின் பேச்சினை கூட கவனிக்காமல் கவிதா வாசலையே பார்த்து கொண்டிருந்தாள். என்னதான் டி உனக்கு ப்ரொப்லெம் கொஞ்சம் நேரம் அமைதியாக இருப்பியா , நானே அவனை இன்னும் காணவில்லையே என்று கவலையாக இருக்கிறேன் நீ வேற , என்று பேசி கொண்டிருக்கும் பொழுது , திடிரென்று மேனேஜ்மென்ட் கூட்டம் லேஃப்க்குள் வர , அனைவரும் பதற்றமாகினர் .அவர்கள் என்னவென்று யோசித்து கொண்டிருக்கும் பொழுதே ,
சிஸ்டம் நம்பர் 109 யார் வொர்க் செய்றாங்க , என்று லேஃப் இன்சார்ஜ் நிர்மல் அதிகாரமாக மிரட்ட , 109ஆ நா....நான் தான் சார் என்று பேச்சு திணறி கொண்டே ப்ரியா முன்வர , என்னவாக இருக்கும் என தெரியாமல் அனைவரும் பயத்தில் விளித்து கொண்டிருந்தனர்
உங்கள் சிஸ்டம்ஸ்ல இருந்து மெயின் சர்வர் கனெக்ட் ஆகி , கொஸ்டின் பேப்பர் போல்டெர் ஷேர் ஆகிருக்கு , என்ன இந்த'வொர்க் செய்றதுக்கு யாரிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்குனீங்க , என அவர் மிரட்டி கொண்டே போக , ஒன்றும் புரியாமல் ப்ரியா விளித்து கொண்டு நின்றாள்,
ஹெட் சிஸ்டம்ஸ் இன்சார்ஜ் , இங்க வேண்டாம் நிர்மல் , அவங்களை தனியாக கூட்டிட்டு மீட்டிங் ஹால் வாங்க , மற்ற ஸ்டுடென்ட்ஸ் யாரும் சிஸ்டம்ஸ் டச் பண்ண வேண்டாம் , அப்படியேவைத்து விட்டு கிளாஸ்க்கு கிளம்புங்க என்று கூறிவிட்டு , ப்ரியாவினை கோபமாக பார்த்து , நீங்க ஹால்க்கு வாங்க என்று அவர் முன்னேறி செல்ல, என்ன நடக்கிறது என்றே புரியாமல் அழுது கொண்டே ப்ரியா அவர்களை தொடர்ந்து சென்றாள் , கவிதாவிற்கு என்ன ஏது என்று ஒண்ணும் விளங்கவில்லை.
ச்ச, காலேஜ்க்கு வேற டைம் ஆகிவிட்டது , இந்த பைக் நேரம் பார்த்து தான் ப்ரொப்லெம் செய்யணுமா என்று மனதினில் புலம்பி கொண்டே அவசரஅவசரமாக கீர்த்தி வகுப்பிற்குள் வர , கிளாஸ் இன்சார்ஜ் கோபமாக பேசுகிற சத்தம் நன்றாகவே கேட்டது, மே ஐ கம் இன் மேம் என்று அவன் உள்ளே நுழைய , கவிதாவின் முகம் கலங்கி இருப்பதனை பார்த்து கொண்டே கண்ணனின் பக்கத்தில் வந்து அமர்ந்தவன் , மச்சி என்ன நடந்தது என்று புரியாமல் கேட்டு கொண்டிருந்தான் ,
வர வர , கேர்ள்ஸ் கூடவா இதெல்லாம் பண்றீங்க , பணம் வருது என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா , என்று அவர் திட்டி கொண்டிருந்தார் . என்னவோ இந்த மாதிரி பண்றவங்களை காலேஜ்ல இருந்து டிஸ்மிஸ் தான் செய்ய போறாங்க , உங்களோட சேர்த்து எனக்கும் என்குயரி போட போறாங்க என்று அவர் கூறி கொண்டே கோபமாக வெளியேற , ப்ரியாவின் நிலையை நினைத்து கவிதா அழவே தொடங்கிருந்தாள் ,
டேய் என்னதான் நடந்தது என்று கீர்த்தி பொறுமை இழந்து கேட்க , கண்ணன் நடந்தவற்றை விளக்கமாக கூறினான், பாவம்டா அந்த ப்ரியாவுக்கு ஒன்றும் புரியாமல் அழுது கொண்டே போனாங்க, என்று அவன் விவரம் கூற , கவியின் அருகினில் வந்தவன் , ஹே முதலில் அழுவதை ஸ்டாப் பண்ணு என்று அவள் கைகளை பிடித்து ஆறுதல் கூறியவன் , இப்பொழுது என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் , வா மீட்டிங் ஹால் போக வேண்டும் என்று என அவளை கூட்டி கொண்டு விரைந்தான்.
அங்கு , ப்ரியா தனக்கு ஒன்றுமே தெரியாது என பதில் கூறி கொண்டு இருக்க, அது எப்படி நீங்க தான் அந்த கோட்ஸ் ரன் பண்ணிருகிங்க , எப்படி உங்களுக்கு தெரியாமல் போகும் , கேர்ள்ஸ் கூட இதெல்லாம் செய்ய தைரியமாக ஒத்துகொள்றிங்க இல்ல , ஓகே ஒழுங்கா உண்மையை ஒத்து கொண்டு யார் யார்க்கு இதில் தொடர்பிருக்கு என்று கூறினால் அட்லீஸ்ட் நீ வேற காலேஜ்லயாவது படிக்க முடியும், அப்படி இல்லை என்றால் உன் லைப் ஸ்பாயில் ஆயிடும் பார்த்து கொள்ளுங்கள் என மிரட்டி கொண்டிருந்தார் ஹெட் சிஸ்டம்ஸ். உங்களுக்கு இப்பொழுது டைம் தருகிறோம் யோசிச்சு சொல்லிடுங்க ,என்று அவளை அந்த அறையினை விட்டு வெளியேற அனுமதித்தனர்.
வீங்கிய முகத்துடன் வந்த தோழியினை , எப்படி ஆறுதல் படுத்த முடியும் என்று தெரியாமல் அழுது கொண்டிருந்தாள் கவிதா. கவிதாவின் அழுகை கீர்த்தியினை என்னவோ அதிகமாக கஷ்டபடுத்த , அந்த நொடியில் ப்ரியா, நீங்க சிஸ்டம்ல என்ன செய்தீர்கள் என்று தெளிவாக கூறினால் மட்டுமே என்னால் கண்டு பிடிக்க முடியும் , ஸோ , ப்ளீஸ் 2பேரும் அழுவதை நிறுத்தி விட்டு சொல்லுங்க என்று கவியின் கண்ணீரை கட்டு படுத்த முயன்றான். அவள் நடந்தவற்றை கூற , ஓகே நான் பார்த்து கொள்கிறேன், பட் ப்ளீஸ் 2பேரும் தைரியமாக இருங்கள் என ஆறுதல் கூறிவிட்டு நிர்மலை சந்திக்க சென்றான்.
சார் , கண்டிப்பாக அந்த பொண்ணு இப்படி செய்து இருக்கமாட்டாங்க, ஸோ , ப்ளீஸ் சார் நீங்க கொஞ்சம் ஹெல்ப் செய்தால் கண்டிப்பாக யார் என்று சுலபமாக கண்டுபுடிக்க முடியும் என ஒருவாராக அவரை சமாதனம் செய்து , ப்ரியா ரன் செய்த கோட்ஸ் முழுவதுமாக செக் செய்த பொழுது தான் , அது ஒன் வீக் முன்னதாக செய்யப்பட்ட வேலை , மற்றும் சரியாக ஒரு வார டைம் இன்டர்வெல் பிறகு அது ஆட்டோமாடிக் ரன் ஆகும்படி டெவலப் செய்துள்ளனர் என்று கண்டறிய முடிந்தது, அதனுடன் ஒன் வீக் முன்னாடி யார் இதை செய்து இருப்பார்கள் என்ற விவரங்களை சிசிடிவீ கேமிரா மூலம் பார்க்க அது அவர்களுடைய சீனியர்ஸ் ஒரு டீம் செய்த வேலை என்று புரிந்தது.
இறுதியில் அனைத்தையும் கீர்த்தி மேனேஜ்மென்ட் டீமிற்கு புரிய வைக்க , அவர்கள் ஒரு வழியாக ப்ரியாவினை சிறு சாரி சொன்னதுடன் விடுவித்தனர் மற்றும் ,அந்த சீனியர்ஸ் குரூப்பிற்கு டிஸ்மிஸ் ஆர்டர் கூட வழங்கப்பட்டது
இறுதியாக அன்றைய ப்ரொப்லெம் முடிவிற்கு வர பிர்யா நிம்மதி பெருமூச்சுடன் கவியை கட்டி கொண்டாள் , கவிதாவிற்கோ நம்பவே முடியவில்லை , மதியம் வரை சாப்பாடு கூட இல்லாமல் அழுது கொண்டிருந்தவள், இப்பொழுது சந்தோசமாக இருக்க முடிந்ததே என்று மனதில் கீர்த்திக்கு தன் ஆசை படி நன்றி தெரிவித்து கொண்டவள் , பட் நேரில் இப்படி நன்றி சொல்ல முடியாதே என்று மனதிலே சிரித்தும் கொண்டாள் , ப்ரியா ஹச்.ஓ.டி அழைக்கிறார்கள் என்று செல்ல , கவிதா , கீர்த்தியினை நோக்கி விரைந்தாள் .
தாங்க் யூ , சோ மச் கீர்த்தி , ரியல்லி இவள் இதிலிருந்து எப்படி வெளியே வரமுடியும் என்று தெரியாமல் இருந்தோம் , பட் நீங்க எனக்காக கஷ்டப்பட்டு கண்டு புடிச்சதுக்கு ரொம்பவும் தேங்க்ஸ், உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்று கூட தெரியவில்லை என்று தொடர்ந்து கொண்டே போக ,
ஹலோ மேடம் , உங்களுக்காக செய்தேன் என்று யார் கூறியது, ஏதோ ப்ரியா மாதிரி ஒரு அழகான பொண்ணு அழுதா தாங்குமா என்று வருத்தப்பட்டு செய்த ஹெல்ப் என்று அவன் , அவளை கேலிபடுத்த , ஓ அப்படிங்களா சார் , சரி அப்ப அப்படியே கிளம்பி சென்றால் இன்னும் நிறைய பேர் அழகாக கிடைப்பார்கள் , அப்படியேஅவர்களிடம் போய்டுங்க இங்கே வரவேண்டாம்என்று அவள் கோபமாக திரும்ப ,
ஏய் அப்புறம் என்னடி , ஏதோ நம்ம லவ் பண்ற பொண்ணு இவ்வளோ அழுதேன்னு அவனவன் மூச்ச போட்டு கண்டுபுடிச்சா , அதுக்காக அவனுக்கு என்னவெல்லாம் புடிக்கும் என்று கேட்டு ஒரு லவ்வரா அதை எல்லாம் செய்வாளா அதை விட்டுவிட்டு , உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியவில்லைன்னு இப்படி தள்ளி நின்றா பேசுவாங்க , ஆளைபாரு என்று மறுபடியும் கேலி கூற ,
ஒ சாரி சார் மன்னிச்சுடுங்க , தங்களுக்கு என்ன வேண்டும் என்று கூறினால் அதை செய்வது என் கடமை அன்றோ என்று அவள் பழைய-பாணியில் கூற ,
ஹ்ம்ம், அப்படி வா வழிக்கு, ஓகே பர்ஸ்ட் கட்டி பிடிப்பியாம் , அடுத்து இந்த ஆர்ஞ்ச்நிற இதழ்களால ஒரு முத்தம் கொடுப்பியாம் என்று அவன் நெருங்கி வர , இருங்க சார் முதலில் காலையில் அவ்வளவு லேட்டாக ஏன் வந்திர்கள் , அப்புறம் ஏன் எனக்கு போன் கூட செய்து சொல்லவில்லை , ஸோ அதுக்கு இன்று உங்களுக்கு பனிஷ்மெண்ட் என்னவென்றால் , உங்களுடைய லவ்வர் இன்னும் ரெண்டு நாளைக்கு உங்களிடம் பேசமாட்டா , ஸோ நீங்க அப்படியே வீட்டிற்கு சென்று உங்களுடைய தலையனையை கட்டி பிடித்து கொண்டு உறங்குவீர்களாம் என்று கூறி அவள் சிரிக்க ,
அடி பாவி , மனசாட்சி இல்லாத அழகான ராட்சசி டி நீ, உனக்காக இவ்வளவு செய்தால் , நீ பனிஷ்மெண்ட்டா தருவ என்று அவன் முகத்தினை சோகமாக வைக்க , யாரும் அறியா வண்ணம் அவனுடைய கன்னங்களில் முதல் முறையாக இதழ் பதித்தவள் , அடுத்த நிமிடமே ப்ரியா தேடுவாள், பட் மிகவும் நன்றிடா கீர்த்தி என்று அவனை தாண்டி புள்ளி மானை போல் துள்ளி ஓடினாள் வேகமாக.
அவ்வளவு அழகாக சென்ற வாழ்க்கையா இன்று இப்படி மாறிவிட்டது என நொந்து போய் படுத்திருந்தாள், மறுபடியும் அவனை பார்க்கமாட்டோமா என்று மனது ஏங்கி தவித்தது. தந்தை வந்து விட்டால் சமாளிப்பது கடினம் என்று தெரிந்து மனநிம்மதிக்காக முகம் கழுவி தயாராகி அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு புறப்பட்டாள்.
அம்மா, உங்களுடைய சுக்கு காபி குடிச்சதும் தலைவலி போயே போச்சு , அப்பா வருவதற்குள் நான் கோவிலுக்கு போய்விட்டு வருகிறேன் , என்று தாயினை சமாளித்து விட்டு கிளம்பினாள். சன்னதியில் அமர்ந்து பெருமாளை தரிசிக்கும் பொழுது கிடைக்கும் இன்பத்திற்கு அளவே இல்லை என்று கிளம்பியவள் , அங்கு கோவிலில் தன் கீர்த்தியின் அம்மாவினை சந்திக்க போகிறோம் என்று தெரியவில்லை அவளுக்கு. பெருமாளுக்கு மாலை வாங்கி கும்பிட்டுவிட்டு அமந்தவளுக்கு மனது ஒருவழியாக நிம்மதியாக தோன்றியது.
பெருமாளே!, என் மகன் இந்த வருடமாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பிரகாரத்தில் அமர்ந்து புலம்பி கொண்டிருந்தவளை பார்த்த கவிக்கோ , பார்க்க செல்வ செழிப்பாக இருகிறார்கள் , ஆனால் பாவம் என்ன கஷ்டமோ என்று யார் என்றே தெரியதவளுக்காக மனதில் வேண்டிக்கொண்டாள்.
புலம்பி களைத்தவள் , தன் கைப்பையினில் இருந்த வாட்டர் கேனில் தண்ணிர் இல்லாதது போக , குழாய் எங்கேனும் இருக்கிறதா என்று விழிகளால் ஆராய்ந்து கொண்டிருப்பதை கவனித்தவள் , கொடுங்கள் அம்மா !, நான் வேண்டும் என்றால் நீர் பிடித்து வருகிறேன் என்று அந்த தாய்க்கு சிறு உதவியை செய்ய முன்வந்தாள் கவிதா.
ஒரு வழியாக , நீர் கொண்டு வந்து கொடுத்து அவள் அருகினில் அமர்ந்தவள் , ஏன்மா வயதான காலத்தில் துணைக்கு யாரையாவது அழைத்து வரலாமே என்று பாசமாக கேட்க , எங்கே அவனுக்கு நாள் முழுதும் வேலை , வேலை தான் , அவருக்கோ தன் கம்பெனியை கவனிக்க வேண்டும் , இதில் நான் எங்கு கண்ணனுக்கு தெரிய போகிறேன், இந்த வாசுவாவது இதெல்லாம் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொண்டாள்,போதுமே ஆனால் அதற்கும் வழி இல்லாமல் இப்பொழுது வேண்டாம் என்று சுற்றுகிறான் , ஏதோ இந்த பெருமாள் மனது வைத்தால் மட்டுமே முடியும் என்று மனதார கவலைகளை கவிதாவிடம் கூறி கொண்டிருந்தாள் அந்த தாய் ,
கவலை படாதிங்கம்மா , கண்டிப்பாக இந்த வருடம் திருமணம் நடக்கும் என்று கவிதா கூற , மகாலக்ஷிமி மாதிரி இருக்க கண்ணு , ஏதோ நீ சொன்னது நடந்தால் சந்தோசம் , என்று கூறிவிட்டு ஆமா உன் பெயர் கூட நான் கேட்கவில்லையே என தொடங்க , கவி..கவிதாம்மா என்று புன்னகையுடன் கூறியவளை பார்த்து , ஓகே கண்ணு நான் கிளம்புகிறேன்மா , டைம் ஆகுது , என்று எழுந்திருக்க சென்றவள் முடியாது தடுமாற ,அம்மா பார்த்து வாங்க , நான் வேண்டும் என்றால் ஆட்டோ அழைக்கிறேன் ,
அதெல்லாம் வேண்டாம் கவிதா , அதோ அந்த சிகப்பு நிற வண்டி நம்மளுடையது தான் , அங்கு வரை கூட்டி சென்றால் போதும் ,
சரிங்கம்மா வாங்க , என வண்டி வரை சென்றவளை , அந்த தாய் கொஞ்சம் மயக்கமாக தான் வருது கவி , கூட வீடு வரைக்கும் வரமுடியுமா என்று பாவமாக வினவ அதற்கு மேல் கவிதா தாமதிக்கவில்லை.
அவர்களுடைய வீடு மிகவும் நேர்த்தியாக கட்டபட்டிந்தது, வண்டியை விட்டு அந்த தாயினை கவனமாக அழைத்து வந்து உள்ளே அமர வைத்தவள் , இருங்கள்ம்மா எலுமிச்சை சாறு குடித்தால் கொஞ்சம் தெளிவாக இருக்கும் , இங்கே கிச்சன் எந்த பக்கம் என்று கூறினால் நான் சென்று தயார் செய்து கொண்டு வருவேன் என்று பாசமாக கேட்டவளை பார்த்து , அதெல்லாம் வேண்டாம் கண்ணு , நீ ஏன் கஷ்டபடுற , வேலைக்காரி இருப்பாளே என்று தேட , அப்படி இல்லை எலுமிச்சை சாறில் உப்பும், சர்க்கரையும் சரி அளவு கலந்து குடித்தால் மயக்கம் உடனடியாக தெளியும் , இதில் ஒன்றும் எனக்கு கஷ்டம் இல்லைம்மா, நீங்க இருங்க இதோ 5நிமிடத்தில் வந்து விட்டேன் என்று கிச்சனை நோக்கி விரைந்தாள் கவிதா.
அந்த நேரம் பார்த்து , அலுவலகம் முடிந்து அசதியாக வந்தவன் , தன் அம்மா சோபாவினில் களைப்பாக படுத்திருப்பதை பார்த்து , என்ன இந்த வேலைகாரவங்க எங்கே போனாங்க, அம்மாவுக்கு தண்ணி கொடுக்க கூட பக்கத்தில் யாரும் இல்லையே என்று ஜாடியை எடுத்து கொண்டு கிச்சனில் நுழைந்தவனுக்கு உள்ளே இருந்தவளை பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சி கலந்த சந்தோஷம் ஏற்பட்டது.
இதோ வந்துவிட்டேன்ம்மா , நீங்க ஏன் வரிங்க என்று கூறி கொண்டே எலுமிச்சை சாருடன் நிமிர்ந்தவள் எதிரில் நின்றவனை பார்த்து ஆச்சர்யத்தில் விழி விரித்து , நீங்க இங்க என்ன செய்றீங்க என திணற,
இந்த கேள்வி நான் உங்களை பார்த்து கேட்க வேண்டும் , ஏன் என்றால் இது என்னுடைய வீடு, என்று அவன் முடிக்க,
ஒ....!, அம்மா ஏதோ வாசு என்றல்லவா கூறினார்கள் என்று அவள் குழப்பமாக வினவ , எஸ் வாசு...வாசன்..கீர்த்திவாசன்.. நான் தான் , அதற்கு என்ன இப்பொழுது, நீ எப்படி இங்கே வந்தாய் என்று நான் கேட்டதாக நியாபகம் என அவன் திமிராக பேச பேச , அவளுக்கு அப்படியே பூமிக்குள் சென்று விடமாட்டோமா என்று இருந்தது..........................
ஹாய் பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருந்தா கமெண்ட் பண்ணுங்க ஆர் இந்த FB Page லைக் பண்ணுங்க
ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் சண்டே போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......
Thankyou
இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI