Saturday, 3 November 2018

என் காதல் நிலா !


 அத்தியாயம் 2



...........இருவரும் ஒவ்வொரு மனநிலைமையில் எண்ணி கொண்டு உறங்க துவங்க , அடுத்த நாள் மிக அழகாக விடிந்தது.

அஜூ நேரம் ஆகிவிட்டது , இப்பொழுது கிளம்பினால் தான்  அப்பாவை சமாளிக்கும் நிலைமை வராது என அவனுடைய  திவி  கெஞ்சி கொண்டிருக்க , இது எதுவும் காதில் கேட்காமல் அவன் அவளை பார்ப்பது ஒன்றே மிக முக்கியமான வேலை என்பது போல் அதனை தொடர , சரி  நீங்கள் இப்படியே பார்த்து கொண்டிருங்கள் , நான் இப்பொழுது கிளம்புகிறேன்  என்று எழ போனவளை , கை பிடித்து நிறுத்தினான்  அர்ஜுன். 

திவி , நீயே ஏதோ ஒரு நாள்  தான்  வெளியே , அதுவும் கோவிலுக்கு வர சம்மதம்  சொல்லுகிறாய் , இதில் வந்ததும் செல்ல வேண்டும் என்றால் எப்படி , என்னை பார்த்தால் உனக்கு பாவமாக இல்லையா என  அவன் தன்  முகத்தினை சுருக்க , 

இருக்கும் சார் , நன்றாகவே இருக்கும் , இப்பொழுதே பார்த்து பார்த்து பேசிவிட்டால் திருமணத்திற்கு பிறகு என்ன தான் செய்வது  , என்றவளை நோக்கி  , என்ன திவி  உன்னை யார்  அதன் பின்  இப்படி தனியாக  பேச விட போவது ,  நம்மளுடைய  தேனிநிலவு  முடியவே  எப்படியும் ஒரு மாதம்  தேவைப்படும் , அப்புறம் அப்படி இப்படி என்று அவன் இழுக்க , 

என்னது ஒரு மாதமா ,என தன்  கண்களை விரித்து அவள் பார்க்க ,நீ இப்படி எல்லாம்  கோவில் என்று யோசிக்காமல் என்னை  பார்த்தால் , பின் உன் தந்தை யிடம்  நம் திருமணத்திற்கு இன்றே பேச கிளம்பிவிடுவேன் , சரி தானா  என கேட்க , 

ஐயோ , அஜூ நீங்கள் வேற , நான்  ஒருவழியாக முதலில் தெரிவித்து , பின் உங்களை  வரவைப்பது  தான்  நல்லது  என்பவளை நோக்கி , மிகவும் அதிக நாட்கள் எடுக்காதே   திவி  என்னால் பொறுக்க முடியாது , அப்புறம் தப்பாக ஏதும் நடந்தால்  நான் பொறுப்பில்லை பார்த்து கொள்  என கண் சிமிட்ட , தன் வெக்கத்தினை மறைக்க , கிளம்புவோம்  வாருங்கள் என அவள்  நகர  , திவி  .........உனக்கு ஒரு மாதம்  தான்  நேரம் , அதற்குள்  பேசி விடு ...... இல்லையென்றால்  நானே  என அவன்  பாட்டில்  பேசி கொண்டிருக்க ,

ஹலோ  சார் , கீழே  நாம் இருவருக்காக  அனைவரும் காத்து கொண்டிருக்கிறார்கள் , நீங்கள்  யாரிடம் என்ன  பேச வேண்டும்  என்று  யாரோ தன்னை  உலுக்க , கஷ்டப்பட்டு  தன்  கண்களை திறக்க  , அவனுக்கு நேர் எதிரே  மெரூன்  கலர்  சில்க் காட்டன்  புடவையில்  தன்  மனைவி  நிற்க , அட  கடவுளே  இது எல்லாம்  கனவு  தானா , சத்ய  சோதனை டா  அர்ஜுன் ,  என்று  தன்  கனவிலிருந்து  வெளியே  வந்தான்  அவன். 

இல்லை , ஏதோ ஒரு கனவு  இல்லை  ஒன்றுமில்லை  என்று  சமாளித்து  விட்டு , நீ  கீழே  சென்றுவிடு , நான்  ஒரு 15மினிட்ஸ்  வந்து விடுவேன்  என்று  அவளை  அனுப்பி வைத்து  விட்டு எழுந்தவனுக்கு ,  ஹ்ம்ம்  ஒரு காலத்தில்  எப்பொழுது  திருமணம்  என்று காத்திருந்தோம் , இன்று  திருமணம்  ஆகியும்  கூட இப்படி  தனியே  வாழ்கிறோம் , இவளை பிரிய கூடாது  என்று செய்த சிறு தவறு  , இப்படி  ஒரேடியாக  தன்னை  அவளிடமிருந்து  பிரிக்கும்  என  எதிர்பார்க்காதவனாக , கடவுளே  எப்படியாவது  இவளுக்கு  உண்மையை  புரிய வைக்க  வேண்டும் , என்று  ஒரு  நிமிடம்  கண்  மூடி  திறந்தவன் , கீழே  செல்வதற்கு  ஆயத்தமானான். 

அபிராமி  பாட்டி  , நேற்று வந்த  பேரனின்  மனைவியிடம்  அவனது பெருமைகளை  அள்ளி  வீசி கொண்டிருக்க, திவ்யா  அதை  ஆர்வத்துடன்  அவனை பற்றி  அறிந்து  கொண்டிருந்தாள். 

என்னுடைய  பேரன்  மாதிரியே  ஒரு  கொள்ளு பேரனை  எப்பொழுது தர போகிறீர்கள்  என மூத்தவள்  விசாரிக்க , திவ்யாவிற்கோ  , மனதினில்  அர்ஜுன்  உருவில் சின்ன கண்ணனை  பார்க்க எதிர்பார்ப்பு  இருந்தாலும் இன்று  இருக்கும் சூழ்நிலையில்  எதையும் யோசிக்க  முடியவில்லை ,  இருப்பினும்  பெரியவரிடம் மாட்டி கொள்ள முடியாதே , அதானே பாட்டி , அடுத்த வருடம் , இந்த நேரம் உங்கள்  பேரன்  உங்களிடம் இருப்பான்  என  சிறு  வெக்கத்துடன் பதில் அளித்து  கொண்டிருக்க , 

மாடி  படிகளில்  இறங்கி  கொண்டிருந்த  அர்ஜுன்  அனைத்தையும்  தெளிவாக  கேட்டாலும் , அதை  தன்  மனையாள்  நேரில்  சொல்லி  கேட்க  ஆசைப்பட்டு , என்ன  பாட்டி  அடுத்த வருடம்  என்ன  வேண்டும்  உங்களுக்கு  என்று  பேசிக்கொண்டே  , இப்பொழுது  இவள்  அருகில்  அமர்ந்தால்  உண்டு  என்ற  பாவனையுடன்   சோபா  பெரிய  அளவாக இருப்பினும் , மனைவியின்  பக்கத்தில் அவளை  நெருக்கி  கொண்டு  அமர்ந்தான்  அவன். 

திரும்பி  அவனை  முறைத்தவள்  , எனக்கு  கிச்சனில்  வேலை  இருக்கு  என  எழ  போக , அதெல்லாம்  அனைத்தும்  முடிந்து  விட்டது  என்று  கோகிலா  வந்து  தன் மாமியார்  அருகில் அமர , இதற்கு மேல்  ஒன்றும் இயலாது  என  அமைதியாக  தன்னை கட்டுபடுத்தி  கொண்டாள்  திவ்யா . 

அது  ஒன்றும்  இல்லை  கண்ணப்பா , எனக்கு  உன்னை  போன்று  ஒரு கொள்ளு  பேரனை  எப்பொழுது  தர  போகிறீர்கள்  என  கேட்டு  கொண்டிருந்தேன் ,  அதற்கு  உன்  மனைவி  அடுத்த  வருடம்  இந்த  நேரம்  என்  மடியில்  பேரன்  இருப்பான்  என்று  கூறி  என்னை  மகிழ்ச்சியில்  ஆழ்த்திவிட்டாள்  என  தெள்ள தெளிவாக கூற ,ஐயோ  இப்படியா  எல்லாத்தையும்  சொல்வார்கள், இவன்  நம்மை  பற்றி  என்ன நினைப்பான்   என்று  மனதினில் நினைத்து  கொண்டிருக்க , 

அர்ஜுனோ  மிக சந்தோசமாக  , கண்டிப்பாக  பாட்டி , மேலிடமே  சொல்லி  விட்டாள்  என்றால்  அதற்கு மேல்  பேச்சிற்கே இடம்   இல்லை , கண்டிப்பாக   நடக்கும்  என  அருகில்  இருப்பவளை  பார்க்க , ஏற்கனவே  அவன்  நெருக்கம்  தந்த  மயக்கம் ,  இப்பொழுது  அவன்  பார்வை  என  சமாளிக்க  முடியாமல் வெக்கத்தில்  கன்னங்கள்  சிவக்க  , நான்  சென்று  காலை  சாப்பாட்டினை  எடுத்து  வைக்கின்றேன், மாமா  வரும்  நேரம்  ஆயிற்று  என்று  அங்கிருந்து  ஓடுபவளை  கண்டு  மூவரும்  சிரித்தனர். 

காலை  உணவு  முடிந்து  , சந்தான ராமசாமி  அலுவலகம்   கிளம்ப , மூத்தவள்  ஓய்வெடுக்க  தன்  அறைக்கு  செல்ல ,  மதியம்  சாப்பாடு  நான்  பார்த்து  கொள்கிறேன்  நீ  சென்று  அர்ஜூனுடன்  பேசி கொண்டிரு  என்று  அவளை  அனுப்பி  வைத்தாள்   கோகிலா. 

ஆமா  கார்த்தி  , நீ  அதையெல்லாம்  தெளிவாக  பார்த்து  கொள் , அந்த  கிளைண்ட்க்கு பெமென்ட் ப்ரோசஸ்    ,என  தன் நண்பன்  மற்றும்  தொழில்  முறை  பார்ட்னரிடம்  விளக்கி  கொண்டிருந்தவன்  , அறைக்குள்  திவ்யா  நுழைய  , மச்சான்  நான்  பிறகு  உனக்கு  போன்  செய்கிறேன்டா   , என்று  தொடர்பினை  துண்டித்தவன் , அப்புறம்  திவ்யதர்ஷினி சாரி  சாரி  பெயர்  சொல்லவில்லை மேடம் ,   பாட்டியிடம்   சொன்னது  எப்பொழுது  நடைமுறை  படுத்தலாம்  என்று  ஆர்வமாக  விசாரிக்க , அவனை  சுட்டெரிக்கும்  பார்வை  பார்த்தவள் , தன்  அறைக்குள்  நுழைய  முயல , அவளை  பிடித்து  நிறுத்த  அவன்  இழுத்த  வேகத்தில்  நிலை  தடுமாறி  அவள்  விழ போக , அதை  தடுக்க   அவளை  பிடித்தவன்  , சாரி  என்று  வேகமாக  விலகினான். 

இவன்  நெருங்கி  வந்தாலும்  தொல்லை , தள்ளி  போனிலும்  தொல்லை  தான்  என்று  அலுத்து கொண்டவள்  , பெரியவர்கள்  மனது  நம்மால்  கவலை பட  வேண்டாம்  என்று  அவர்களுக்காக நான்  கூறிய  பொய்  என  உங்களுக்கே  தெரியும்  என்று  நகர  ஆரம்பிக்க , 

இதே தான்  திவி  , ஒரு  நன்மைக்காக  தாராளமாக  பொய்  கூறலாம்  , அப்படி  தான்  நான்  உன்னிடம்  கூறியதும் , இதில்  என்னை  தள்ளி  வைத்து  நம்மை  கஷ்ட படுத்த ஒன்றுமே  இல்லை  , நீ  சிறிது  புரிந்து  கொண்டால்  போதும்  என்று  அவன்  இது  தான்  நேரம்  என்று  விளக்க  , அது  எப்படி  உங்களையே  முழுதாக  நம்பும்  ஒருத்தியிடம்  இறுதி  வரை  உண்மையை  மறைத்து  , 

அவளால்  உங்களை  பிரிந்து  வாழவே  முடியாது  என்ற  நிலை  வந்ததும் , அப்பாடா  இனி  இவளால்  ஒன்றும்  செய்ய  இயலாது  என  தெரிந்து  கொண்டு  உண்மையை   சொல்விர்கள்  , நான்  உடனே  ஏற்று  கொள்ள   வேண்டுமா  , இதற்கெல்லாம்  ஏற்றவள்  நான்  இல்லை  புரிந்ததா , சோ  உங்களுடைய  நேரத்தினை  வீணடிக்காமல்  , வேறு  ஒருத்தியை  நீங்கள்  தேர்ந்தெடுத்தாலும்  சரிதான் , நான்  வேண்டுமானால் விலகி  கொள்கிறேன்  என்று  நகர  போனவளை  கை  பிடித்து  நிறுத்தி  ,

 இந்த  ஒரு  ஜென்மம்  மட்டுமில்லை  மை  டியர்  மனைவி , இன்னும்  எத்தனை  ஜென்மம்  என்றாலும்  இந்த  அர்ஜுனிற்கு  திவ்யா  ஒருத்தி  தான்  மனைவி  புரிந்ததா , அது  மட்டுமில்லால்  நீயே  பாட்டியிடம்  கூறியது  போன்று  நம்  கனவு  படி  இரண்டு  குழந்தை  என  நாமும்  மிக  சந்தோசமாக  வாழ  தான்  போகிறோம்  , அதுவும்  கூடிய  விரைவில்  என்று  சொல்லிவிட்டு  அந்த  அறையை  விட்டு  வெளியேறினான்  அவளது  கணவன் அஜூ .............................




மீண்டும் வளரும் ..........






பிரண்ட்ஸ் , இது என்னுடைய இரண்டாம் நாவல் , முந்தைய நாவலை போன்று இதற்கும் உங்களுடைய ஆதரவினை எதிர்பார்க்கிறேன்.......தாங்க் யு நண்பர்களே....






இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி


சாந்தா தேவி . வீ


  












Friday, 19 October 2018

YEN KAADHAL NILA

                               

                                      என் காதல் நிலா !


 அத்தியாயம் 1





அது ஒரு பெரிய மண்டபம், ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அமர ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. மண்டபம் முழுவதும் வண்ண மலர்களால் மற்றும் பலூன்களால் அலங்கரிக்க பட்டிருக்க , ஒளி உமிழும் விளக்குகள் பாரபட்சமின்றி தன்னுடைய கதிர்களை வீசி கொண்டிருந்தது.

திருமண மண்டபம் உறவினர்களால் நிறைந்து இருக்க , இரு குடும்பங்களும் வந்து கொண்டிருப்பர்வர்களை வரவேற்பதிலும் அவர்களை சாப்பிட செய்து கவனிப்பதிலும் நேரம் சென்று கொண்டிருந்தது .

வந்தவர்கள் மாப்பிள்ளை பெண்ணின் ஜோடி பொருத்த  அழகினை பார்த்து வியந்து பேசி கொண்டிருக்க , சந்தானராமசாமி  மிக பெருமையாக , நாம் தேடியிருந்தால் கூட இப்படி ஒரு பெண்ணை கண்டிருக்க முடியாது, என்ன இருந்தாலும் என் மகனாயிற்றே  என்று நம் கதையின் நாயகனை பற்றி தன் மனைவி கோகிலாவிடம் புகழ்ந்து கொண்டிருந்தார்.

நாராயணமூர்த்தியோ  பெண்ணை பெற்றவராயிற்றே , தன்னுடைய சுகர் மாத்திரையை கூட போட மறந்து வேலைகளை கவனித்து கொண்டிருந்தார் . அவருடைய மனைவி துர்காதேவியோ அவரை எப்படியாவது  மாத்திரை போட  வைத்திட வேண்டும் என அவருக்கு பின்னாலயே சென்று கொண்டிருக்க , திருமணத்திற்கு வந்த வாண்டுகள் தங்களுடைய மிக முக்கியமான பணியான  ஓடி பிடித்து விளையாடும் விளையாட்டின் மூலமாக அங்கிருந்த பெரியவர்களை இடித்து தள்ளி ஒரு வழி ஆக்கி கொண்டிருந்தனர்.

சந்தானமூர்த்தி ஏற்பாடு செய்திருந்த கச்சேரி குழுவினரோ இன்றைய இளைஞர்களுக்கு தேவையான காதல் பாடல் மூலமாக அங்கிருந்த இளசுகளுக்கு இலவச விருந்து படைத்து கொண்டிருந்தன. இப்படி ஒரு திருமண சாப்பாடு எங்கேயும் சாப்பிட்டது கிடையாது என மணமகன் உறவினர்களே பெருமை பேசும் அளவிற்க்கு நாராயணமூர்த்தி அந்த ஊரிலேயே மிக பெரிய சமையல்காரரை ஏற்பாடு செய்து அதையும் குறைவில்லாமல் கவனித்து கொண்டிருந்தார் .

மணமேடையில் அலங்காரம் மின்னி கொண்டிருக்க , ஐயர் மந்திரங்களை செவ்வனே சொல்லி கொண்டிருந்தார். வேண்டாவிருப்பாக தன் அருகில் அமர்ந்து , இன்னும் சிறிது நேரத்தில் தன் மனைவியாக போகிறவளை நிமிர்ந்து பார்த்தான் ஈஸ்வரன்  என்று பாசமாக பெற்றவர்களாலும் , அர்ஜுன் சார் என்று தொழில் வட்டாரத்தாலும் , அர்ஜுன் என்று நண்பர்களாலும் , அஜூ என்று ஒரு காலத்தில் அவளால் காதலாக  அழைக்கப்பட்ட நம் நாயகன் அர்ஜுனேஸ்வரன் .

மயில் கழுத்து நிற பெரிய பார்டர்  ஜமுக்கி வேலைப்பாடு செய்யப்பட்ட புடவையில் ரோஜா நிற ஆரி வேலைப்பாடு செய்யப்பட்ட ரவிக்கையில்   , தங்க மயிலாக அவள் ஜொலித்து கொண்டிருக்கும் அவளது  அழகு , அவனை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது. 

பார்வையின் வீரியம் தாங்காமல், திவ்யா என்று பெற்றவர்களாலும் , தர்ஷினி என்று தோழிகளாலும் , திவி என்று அவனால் மட்டுமே அழைக்கப்பட்ட நம் கதையின் நாயகி திவ்யதர்ஷினி நிமிர்ந்து அவனை பார்க்க , பட்டு வேட்டி பட்டு  சட்டையில் அவனுக்கே உரித்தான கம்பீரத்துடனிருக்க , ஒரு நிமிடம் இருவரும் தங்களை மறந்து மற்றவரை ரசிக்க , ஐயர் கூறிய மந்திரத்தில் முதலில் விழித்தது அவளேதான். 

இவனையா இப்படி பார்த்து கொண்டிருக்கிறோம் என்று அவள் ஒரு கோப பார்வையுடன் முகத்தினை திருப்பிக்கொள்ள , இன்னும் கொஞ்சம் நேரம் இவ பக்கத்தில் நான் உட்கார்ந்து இருந்தால், என்னை ஒரு வழி ஆக்கிவிடுவாள்  என்று மனதில் நினைத்து கொண்டு, ஐய்யரே  மந்திரத்தினை விரைவாக கூறினால் நன்றாக இருக்கும் என பேசிவிட, ஏன் உங்களால் ஒரு மணி நேரம் கூட பொறுத்து கொள்ள முடியாதா என்பது போல் அவள் அலட்சிய பார்வையை வீச , கடவுளே துவக்கமே இப்படியா என்று விதியை நொந்து கொண்டு அவன் தனது திருவாயை மூடியதுடன்  தன் வேலையை தொடர ஆரம்பித்திருந்தான்.

சிறியவர்கள் இப்படி நினைத்து கொண்டிருக்க , பெரியவர்களோ தங்களது கடமையை கண கச்சிதமாக பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தனர் . முகூர்த்த நேரம் நெருங்க , பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் அவள் கழுத்தில் மங்கள நாண் பூட்டி , திவ்யதர்ஷினி நாராயணமூர்த்தியாக இருந்தவளை , திவ்யதர்ஷினி அர்ஜூனாக மாற்றி  தன்  மனைவி ஆக்கியிருந்தான் அர்ஜுன். 

இந்த ஒரு நாள் , இந்த ஒரு நொடி ஒவ்வொரு பெண்ணுமே தன் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக இருப்பதை போல ,  திவ்யாவிற்கும் இருப்பதில் ஆச்சர்யமில்லை. நெற்றியில் குங்கும திலகமிட்டு , அக்கினி சுற்றி வலம் வந்து பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் அந்த நாள் இனிமையாக துவங்கியது.

ஒருவாறாக அனைத்தும் முடிந்து கண்ணீர் மல்க பெற்றவர்களை பிரிந்து  , திவ்யா , அர்ஜுன் வீட்டிற்குள் வலது கால் எடுத்து வைத்து உள்ளே வர 5மணி ஆகியிருந்தது. விளக்கு ஏற்றி அந்த குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக அவள் மாறியிருக்க , எங்கிருந்தோ ஒரு பெரியவர் இன்று மிகவும் நல்ல நாள் , அனைத்தும் இன்றே வைத்து விடலாம் என்ற ஆலோசனைபடி , சாந்தி முகூத்தத்திற்கான ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. 

இரவு 9மணி அளவில் கேலிக்கும் கிண்டலுக்கும் குறைவில்லாமல் அவளை , அவன் அறைக்குள் அனுப்ப ,  மற்றவர் முன்னிலையில் பயத்துடன் , வெட்கமும் இருப்பது போன்று வந்தவள் , உள்ளே வந்ததும் , எந்த ஒரு எண்ணமுமின்றி , எனக்கான அறை எங்கே என்று அவனை அழைக்க , அப்பொழுது தான் அவளை நிமிர்ந்து பார்த்தான் நம் அர்ஜுன்.

காலையில் ஒருமாதிரி அழகு என்றால்  , இப்பொழுது வேறு மாதிரியாக , மஞ்சள் நிற ஷிபான் சில்க் புடவையில் அவள் நிற்க , ஏதும் பேச தோன்றாமல் அவளை பார்த்து கொண்டிருப்பவனை , உங்களுக்கு வேலை இல்லை என்றால் அப்படி வெளியே சென்று வாருங்கள் , எனக்கு மிகவும் சோர்வாக உள்ளது , என் அறை எங்கே என்று கூறினால் வசதியாக இருக்கும் என்பவளை ,மனதில் ஒரு வித ஏக்கத்துடன் , அதற்கு முன் சிறிது பேச வேண்டும் என்று கூறினான் அவன்.

நமக்குள் பேச வேண்டிய அனைத்துமே பேசியாகிவிட்டது, மற்றவர் முன் எப்படி நடிக்க வேண்டும் என நீங்கள் பாடம் எடுக்க தேவையில்லை, என்று சட்டெனெ மூஞ்சியை திருப்பி கொண்டாள் திவ்யா.

இதோ பார் திவி , என துவங்கியனை , அப்படி கூப்பிட உங்களுக்கு தகுதி இல்லை என்று தெளிவாக பேசிதானே திருமணமும் நடந்தது, பிறகு இன்னும் என்ன , என்று கடுகடுத்தவளை , ஓகே திவ்யதர்ஷினி என்று அவன் துவங்க , என் பெயரை கூட நீங்கள் கூப்பிட கூடாது என்று கோபமாக உரைத்தாள் அவனது மனையாள்.

சின்ன ஒரு கேலி புன்னைகையுடன் அவளை நோக்கி , சரி அப்படி என்றால் என் நண்பனை போன்று டியர் , டார்லிங் , கண்மணி, குட்டிமா  என்று அழைக்கலாமா இல்லை நான் உன்னை அழைக்காமலே என் மனது புரிந்து நீயாக திரும்பி விடப்போகிறாயா  என்று கேலி செய்பவனை , என்ன நக்கலா என்று முறைக்கும் நிமிடத்தில் அவனுடைய அந்த புன்னைகையில் தன்னை மறக்கவும் தவறவில்லை திவ்யா.

ஓகே மேடம் , மற்றவர் முன்னிலையில் மட்டும் நான் எப்படி அழைத்தாலும் இது போன்று திருப்பி கொள்ள வேண்டாம் , மற்றபடி நானாக உன்னை அழைக்க போவதில்லை சரிதானா என்பவனை , இதுக்கெல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை என்று மனதிற்குள் அதற்கும் வசை பாடினாள் திவ்யா.

முன்னரே நாம் பேசியவாறு அதோ வலது புறம் அது உன்னுடைய அறை , நீயாக அழைத்தாலொழிய நான் அதற்குள் வரப்போவதில்லை , உன்னுடைய அனுமதி இல்லாமல் வேறு ஏதும் நடக்காது என்று அவன் ஒரு மாதிரியாக முடிக்க , நானாக உங்களை அழைப்பேனா , கனவில் கூட நடக்க போவதில்லை , என்று அதற்கு மேல் அங்கிருக்காமல் தன்னுடைய சிறிய அறைக்குள் நுழைந்து விட்டாள் . 

இருவரும் ஒவவொரு மனநிலைமையில் எண்ணி கொண்டு உறங்க துவங்க , அடுத்த நாள் மிக அழகாக விடிந்தது................................




மீண்டும் வளரும் ..........



பிரண்ட்ஸ் , இது என்னுடைய இரண்டாம் நாவல் , முந்தைய நாவலை போன்று இதற்கும் உங்களுடைய ஆதரவினை எதிர்பார்க்கிறேன்.......தாங்க் யு நண்பர்களே....



இப்படிக்கு 
உங்கள் நாவல் தோழி 
சாந்தா தேவி . வீ 











Sunday, 22 May 2016

காதல் கவிதைகள் நீ !

 Chapter 16


.......................................சரி நான் உன்னிடம் பேசவேண்டுமே இதைப்பற்றி என்று அவனருகில் இருந்த கட்டிலில் அவளை அமர்த்தியவன் , அவனது அணைப்பினிலே , அன்று நடந்தது என்னவென்றால் என்று தொடங்க ஆரம்பிக்க , வேண்டாம் கீர்த்தி உங்களை நான் முழுவதும் நம்புகிறேன் , ஸோ விளக்கம் கூட தேவையே  இல்லை என்று அதை  தடுக்க , அப்படி இல்லை கவி , இது என்னோட திருப்திக்காக நான் கூற நினைக்குறேன் ப்ளீஸ் என்று அவளை அமைதியாக்கி தன் விளக்கங்களை கொடுத்தான்.

அன்று அந்தப்பெண் வானதி அவளை நான் அணைக்காத குறையாக கூட்டி சென்றது உண்மை தான் கவி , ஆனால் அவள் அப்பொழுது ட்ரக்ஸ் சாப்பிட்டு முழு போதையில் இருந்தாள் , அதோடு நிற்க கூட முடியாமல் தள்ளாடும் நிலைமை , அண்ட் வசந்த் அவனுக்கு நம்ம தங்கை இப்படி செய்துவிட்டால் என்று கடும் கோபத்தில் அவளை அறைந்தே விட்டான் , தங்கை என்று கூட பாராமல் அவளை அப்படியே விட்டுவிட்டு வா கீர்த்தி என என்னை வேறு தடுத்தான் , நான் தான் விடுடா இதை பற்றி பிறகு விசாரிப்போம் என அவனிடம் சண்டை போட்டு அவளை அழைத்து சென்றது

அன்று அவள் மட்டும் ட்ரக்ஸ் யூஸ் செய்த விஷயம் மட்டும் கல்லூரியில் தெரிந்து இருந்தால் பாவம் படிப்பும் இழக்க வேண்டி வந்து இருக்கும் பின் அவள் வாழ்கையே வீணாகி இருக்கும் அல்லவா ,அது தான் யார்க்கும் தெரியாதவாறு அப்படி அணைத்து சென்றதே , ஆனால் இதை பற்றி  அடுத்த நாள் கண்டிப்பாக உன்னிடம் தெளிவாக கூறிவிட வேண்டும் என்றுதான் நினைத்து இருந்தேன் குட்டிமா, 

ஆனால் அன்று வானதியின் டிபார்ட்மெண்ட் எக்ஸாம் வேறு , நான் சென்று பெர்சனலாக ஹெச்ஓடி பார்த்து பேசி சரி செய்யவேண்டும்  , மற்றும் அந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டுமே என்ற எண்ணம் வேறு , ஸோ அன்று அந்த மன நிலையில் உன்னுடன் நின்று கூட பேச தோன்றவில்லை கவி, பட்   நீ சந்தேகிப்பதை போல்  பேசியது உண்மையில் என்ன இவள் என்று உன் மேல் அதிக கோபத்தை வரவழைத்தது , 

பிறகு அடுத்த இரண்டு நாட்கள் வானதியின் பெற்றவர்களை சரிசெய்து அவள் ட்ரீட்மென்ட்க்கு ஏற்பாடு செய்தோம் கவி , ஒருவழியாக அனைத்து ப்ரோப்லெமும் முடிவிற்கு வர பிறகு தான் நம் பிரிவு நினைவிற்கு வந்தது கவி ,ச்ச இப்படி பேசிவிட்டோமே என்று வருந்தினால் கூட , இன்னொரு மனது இவள் எப்படி என்னை நம்பாமல் யாரோ பேசுவதை கேட்டு வந்து இன்று இப்படி பேசுகிறாள் , இவ்வளவு தான் நாம் கொண்டிருந்த அன்பின் அளவா என ஒரே வெறுப்பாக இருந்தது கவி , நம்பிக்கை இல்லாமல் வாழும் வாழ்வானது நரகத்திற்கு சமம் , ஸோ அதை புரிந்து கொண்டு நீயாக வரவேண்டும் என்றுதான் நான் விலகி இருந்ததே குட்டிமா ,பட் அதற்காக இவ்வளவு காலம் உன்னை பிரிந்து வாழ்ந்தற்கு என்னை மன்னிக்க வேண்டும் டி நீ , ப்ளீஸ் என அவள் கைகளை இறுக பற்றி கொண்டான். 

இல்லை இல்லை கீர்த்தி , நீங்கள் அந்த பெண்ணுக்கு எவ்வளவு பெரிய உதவியை செய்து இருக்கீர்கள் , அது தெரியாமல் நான் வானதி உங்களுடைய லவர் அது இது என்று கோபப்படுதியது என்னுடைய தவறு கீர்த்தி , ஸோ ப்ளீஸ் சாரி  எல்லாம் கேட்கவேண்டாம்  என்று தொடரபோனவளை நிறுத்தி , 

சரி இப்பொழுது பவியிடம்  பேசும்பொழுது  ஏதோ  அவனை  தப்பாக நினைக்கவில்லை என்றாலும் ,விளக்கம் கூட கேட்காமல்  
சந்தேகப்பட்டு , இந்த 3வருடங்களாக அவனை விட்டு தள்ளி இருக்கிறேன் என்று கூறினாயே , அப்படி என்றால் அன்றுமே நீ என்னை சந்தேகப்படவில்லையா கவி என அவன் அதிர்ச்சியாக வினவ , ஹ்ம்ம் என்று ஒப்பு கொண்டு தலையைஆட்டினாள்  அவள். 

ஐயோ கவி ,என்ன  ஏது என்று கூட வினவாமல்  அவசரப்பட்டு இந்த 3வருடங்களாக உன்னை பிரிந்து இருந்து மிகவும் கஷ்ட படுத்தி விட்டேனே , எவ்வளவு மெச்சுரிட்டி இல்லாமல் நடந்து கொண்டு இருந்தோம் பாரேன் கவி , என்னை மன்னித்து விடு ப்ளீஸ் என அவன் அதையே மறுபடியும் கூற , போதும் கீர்த்தி என்று அவன் வாயினை தன் கைகளால் மூடினாள் அவள்.

நானும் தானே , பாரதி கூறினால் , யார் யாரோ பேசிகொண்டார்கள் என்று எதையோ நினைத்து கொண்டு உங்களிடம் கோபமாக பேசியது , அப்படி பார்த்தால் நானும் மன்னிப்பு கேட்க வேண்டும் , ஆகையால் இதை விட்டு விடலாமே  ப்ளீஸ் என்று கூற ,சரி   சரிடா என் குட்டிமா சொல்லி நான் கேட்காமல் போவேனா ,அதை விடவும் இனி வேறு வேலைகள் நிறைய இருக்கிறது கவி சரிதானே  என்று அவளை பார்த்து கண் சிமிட்ட அவள் முகம்வெட்கத்தால் சிவந்து போனது. 

அப்பாடா என் மனைவி வெட்கப்படும் பொழுது எவ்வளவு அழகாக இருக்கிறது பார் , அப்படியே இழுத்து வைத்து என்னவோ செய்யணும் கூட தோன்றுகிறதே , கவி ஒன்று மட்டும் நிச்சயம் , ஒவ்வொரு முறை நீ அழும்பொழுது உன்னை இப்படி தான் சமாதானம் படுத்த வேண்டும் என்று நினைத்து கஷ்டப்பட்டு கட்டு படுத்தி கொண்டு நிற்பேன் தெரியுமா என்று கூற , 

ஹ்ம்ம் எஸ் எஸ் கீர்த்தி , இன்பாக்ட் இதை எனக்கு புரிய வைத்ததே அத்தை தான் , என்று கூறி புன்னகைக்க , என்னது அம்மாவா என்று அவன் ஆச்சர்யம் காட்டினான் , 

ஆமாம் பின் சார் பாட்டுக்கு அன்று வீட்டிற்க்கு பெண் வந்துவிட்டு எனக்கு விருப்பம் இல்லை , அம்மாவிற்காக தான் என்று கூறினால் பிறகு நான் என்னதான் செய்வது , அதோடு இல்லாமல் அன்று கட்டிபிடித்து முத்தம் வேறு , என்னடா இது இரண்டும் கான்ட்ராடிக்சனா இருக்குதே என்று யோசித்தேன்   , பின் தான் அத்தையிடம் இது பற்றி கேட்கலாம் என்று வந்தேன்  , அப்பொழுது அவர்கள் தான் இதை தெளிவு படித்தினார்கள் கீர்த்தி , அதன் பின் நாம் பழகிய எல்லாமும் நினைத்து பார்த்தேன் அப்பொழுது தான் எனக்கே அது விளங்கியது , அதோடு அன்று மாலை உங்கள் தோட்டத்தில் நாம் பேசிக்கொண்டு இருந்த பொழுது உங்களை டெஸ்ட் செய்யதான் தீவிரமாக அழுவதை போல் நடித்தேன் நீங்களும் உடனே , கவி அழாதே செல்லம் அப்படி இப்படி என்று என்னுடைய அதே கீர்த்தியாக பேசினீர்களா , அன்று தான் அப்பாடா என்று நிம்மதியாக  இருந்தது கீர்த்தி. 

ஹ்ம்ம் பார்த்தேன் பார்த்தேன் , நான் அப்படி அணைத்து சமாதானம் செய்த பொழுது நீ என்னை நிமிர்ந்து உன்னுடைய இந்த அழகான கண்களை விரித்து பார்த்தாயே , அப்பொழுதே புரிந்து கொண்டேன் நீ கண்டுபிடித்து விட்டாய் என அவனும் பதிலுக்கு உரைத்தான். 

சரி கீர்த்தி ஒரு டவுட் , 3வருடங்களுக்கு பிறகு ஒருவேளை நான் பாரதி பற்றி பேசவேண்டும் என்று நேரில் வராமல் இருந்து இருந்தால் நீங்களும் பேசிருக்க மாட்டிர்களோ என்ற கேள்விக்கு அவளது மூக்கின் நுனியை பிடித்து ஆட்டியவன் , அது தான் இல்லைடா , மெச்சுரிட்டி இல்லாமல் பிரிந்தது போதும் , அட்லீஸ்ட் நாம் மீண்டும் இணைவதற்கு முன் நமது வருங்காலம் சேப்டியாக இருக்குமாறு பார்த்து விட்டு அதன்பின் உன் முன்னால் வரவேண்டும் என்று பிளான் செய்தேன் டியர் , அப்பொழுதுதானே நாம் இணைந்த பிறகு முழுநேரமும் உன்னை மட்டுமே பார்த்து கொண்டு உன்னுடன் இப்படி கொஞ்சி கொண்டே நேரத்தை போக்க முடியும் எப்படி உன் கணவன் என்று சொல்வதை கேட்க கேட்க கவிக்கு வெட்கத்தில் முகம் சிவந்து இருவரும் காற்றில் பறப்பது போல் உணர்ந்தாள் அவள்  ,

மீண்டும் அவனே தொடர்ந்து இன்பாக்ட் அடுத்த ஒரு மாதத்திற்குள் நானே உன்னை எப்படியாவது நேரில் வந்து சந்தித்து எதாவது பேசி தொடங்க வேண்டும் என்று தான் காத்திருந்ததே , நல்லவேளை நீயே வந்து என் வேலையை சுலபமாக்கிவிட்டாய் டியர் ,எப்படியோ நம் பிரிவுக்கு காரணமாக இருந்த பாரதியே நாம் மீண்டும் சேரவும் வழி செய்தாலே அது வரை நல்லது இல்லையா என்று  ஒருவாராக அனைத்தையும் பற்றி இருவரும் ஒரு தெளிவிற்கு வந்து கொண்டு இருக்க , 

ஹ்ம்ம்கும்...இங்கே நாங்களும் இருக்கிறோம் என்று தொண்டையை செருமினால் பவித்ரா , அவள் அருகில் அவள் கணவனும் , வந்துட்டாங்கடா என கீர்த்தி நினைக்க , இவர்கள் முன்னாடி இப்படி கட்டி கொண்டு நிற்கிறோமே என்று அவசரமாக விலகினாள் கவிதா . 

டேய் போதும் இப்பொழுதே அனைத்தையும் பேசிவிட்டால்  பின் திருமணத்திற்கு பிறகு பேச ஒன்றுமே இல்லையே என வருத்தப்பட வேண்டி வரும் கீர்த்தி என்று பவித்ரா கேலி செய்ய, 

இந்த பவித்ராவிற்கு ஒன்றுமே தெரியவில்லை , திருமணத்திற்கு பின் பேசுவதற்கு எங்கே நேரம் இருக்க போகிறது என்று கீர்த்தி கவிதாவின் காதில் சத்தமில்லாமல் கூற , அதை கேட்டு ஐயோ கீர்த்தி ப்ளீஸ்  என்று வெட்கத்தை கட்டு படுத்தமுடியாமல்  முகம் சிவக்க நின்றாள்  கவிதா. 

கவிதாவின் முக சிவப்பினை கண்டு பவித்ரா  , டேய் நீ எதற்கும் தள்ளியே இரு என்று இருவரையும் விலக்கி நிறுத்தி விட்டு  ஹீ ஹீ என சிரிக்க , அங்கு சந்தோசம் மட்டுமே நிறைந்து இருந்தது. 

அதிகாலை 6மணி..... வேண்டுதலின் படி வயலூர் முருகன் கோவிலில் முகுர்த்தம் , சொந்த பந்தங்கள் நிறைந்து நிற்க , கவிதா மெரூன் கலர்  புடைவையில் கற்கள் கோல்டன் கலரில் பதித்திருக்க தோகை விரித்த மயிலினை போல்  பெண்மைக்கே உரிய நாணத்துடன் மணப்பெண்ணாக வர , அவளை பார்த்த பார்வையில் இமைகளை கூட அசைக்க தோன்றாமல் தன் பார்வையாலே விழுங்கி கொண்டிருந்தான் மணமகன் கீர்த்தி, இவள் என் மனைவி என்ற பெருமிதத்துடன்.

கெட்டிமேளம் முழங்க , கவிதாவின் கழுத்தில் திருமாங்கல்யத்தை கீர்த்தி  பூட்ட , அவர்களது திருமணம் அனைவரது ஆசியுடனும் நடந்தேறியது,  அவளது நெற்றி வகிட்டில் குங்குமத்தை இட , தன் காதல் நிறைவேறிய திருப்தியில் கவிதாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் வர , அதை கவனித்த அவளது கணவன் ஸ்ஸ்... கவி , என்று அடக்கி , அவளது கையை இறுக பற்றிக்கொண்டு அக்னியை வலம் வந்தனர் அந்த மணமக்கள். 

இவர்களது ஜோடி பொறுத்ததிணை பார்த்து வந்த கூட்டம் புகழ்ந்து தள்ள , பெற்றவர்கள் மனதிருப்தியுடன் அவர்களை வாழ்த்தினர். பிரியா , கண்ணன் ,அருள், பாரதி , வானதி , வசந்த், பவித்ரா , பிரபா,   என்று அவர்களது நண்பர்கள் வட்டாரம் சூழ்ந்து நின்று அவர்களை கேலி செய்து கொண்டே மனதார  வாழ்த்தியது.

அனைத்து பார்மாலிட்டிசும் முடிந்து அன்று இரவு கீர்த்தியின் அறைக்குள் கையில் பால் சொம்புடன்  நுழைந்த கவிதாவை , அப்பாடா இனி யாரும் என்னை தடுக்க மாட்டார்கள் என்று அவளை பின்னிலிருந்து  இறுக பற்றி கொண்டான் அவளது கணவன்.

கீர்த்தி அதுக்குள்ளவா, உன்னிடம் ஒன்று முக்கியமான சந்தேகம் கேட்க வேண்டும்   என்ற மனைவியின் வார்த்தையில், என்னத்தை டி இப்போழுது  கேட்க போகிறாய் என்று முகத்தினை பாவமாக வைத்து கொண்டு கீர்த்தி வினவ , அதுவா அது வந்து...வந்து   என்று வேண்டும் என்றே அவனை தவிக்க விட்டாள் கவிதா . 

அதான் வந்து விட்டாயே சொல்லேன் டி , என்ன வேண்டும் சொல்லு  என்று கேட்க , ஹ்ம்ம் வந்து முதலில் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று அப்பாவியாக கேட்க , ஏண்டி மனுசனை வெறுப்பேத்துற அதான் கையில் பால் இருக்கே , அதை குடிக்க வேண்டியது தானே என்று கூற , அட ஆமாம் இல்லை , என்று தானும் குடித்துவிட்டு அவனிடம் நீட்டினாள் கவிதா , அவளை விழுங்கும் பார்வை பார்த்து கொண்டே அதை குடித்தவன் ,

ஹ்ம்ம் இப்போதாவது சொல்லேன் டி என்று கூற , அது வந்து நம்மளோட பிள்ளைகளை எந்த ஸ்கூலில் சேர்ப்பது கீர்த்தி, அதை தான் யோசித்து கொண்டு இருக்கிறேன்  என்று அவள் சீரியசாக வினவ , ஹ்ம்ம்  ஏன்டி கேட்கமாட்ட , நாம இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் பிள்ளைகள் வானத்தில் இருந்து தான் குதிக்கவேண்டும் என்று அவன் கூறிய பதிலை கேட்டு சிரித்து கொண்டு நின்றவளை பார்த்து , உன்னைலாம் பேசவிட்டதே தப்பு டி  என்று அவளது இதழ்களை தனது இதழ்களால் மூடி தன்னுடைய முத்தத்தினை பதிக்க ,அதில் மெய் மறந்து  கொஞ்சம் கொஞ்சமாக கவிதா அவனுள் கலந்து கொண்டிருந்தாள்.இருவரும் அவர்களது  வாழ்கையை வண்ண கோலமாய்  வரைந்து கொண்டிருந்தனர். அவர்களை வாழ்த்தி தென்றல் காற்று காதல் கவிதைகளாக வீச , நாமும் அவர்களை வாழ்த்தலாமே.....


                                                    ................முற்றும்................




ஹாய் பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி கண்டிப்பாக உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருந்து இருக்கும் என்று நம்புறேன் , தேங்க்ஸ் பார் யுவர் சப்போர்ட் பிரண்ட்ஸ்...................தேங்க்ஸ் ஒன்ஸ் அகைன்............ 


ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் ஸ்டோரியில்  மீட் பண்ணலாம் bye ......



Thankyou 


இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI