என் காதல் நிலா !
அத்தியாயம் 2
...........இருவரும் ஒவ்வொரு மனநிலைமையில் எண்ணி கொண்டு உறங்க துவங்க , அடுத்த நாள் மிக அழகாக விடிந்தது.
அஜூ நேரம் ஆகிவிட்டது , இப்பொழுது கிளம்பினால் தான் அப்பாவை சமாளிக்கும் நிலைமை வராது என அவனுடைய திவி கெஞ்சி கொண்டிருக்க , இது எதுவும் காதில் கேட்காமல் அவன் அவளை பார்ப்பது ஒன்றே மிக முக்கியமான வேலை என்பது போல் அதனை தொடர , சரி நீங்கள் இப்படியே பார்த்து கொண்டிருங்கள் , நான் இப்பொழுது கிளம்புகிறேன் என்று எழ போனவளை , கை பிடித்து நிறுத்தினான் அர்ஜுன்.
திவி , நீயே ஏதோ ஒரு நாள் தான் வெளியே , அதுவும் கோவிலுக்கு வர சம்மதம் சொல்லுகிறாய் , இதில் வந்ததும் செல்ல வேண்டும் என்றால் எப்படி , என்னை பார்த்தால் உனக்கு பாவமாக இல்லையா என அவன் தன் முகத்தினை சுருக்க ,
இருக்கும் சார் , நன்றாகவே இருக்கும் , இப்பொழுதே பார்த்து பார்த்து பேசிவிட்டால் திருமணத்திற்கு பிறகு என்ன தான் செய்வது , என்றவளை நோக்கி , என்ன திவி உன்னை யார் அதன் பின் இப்படி தனியாக பேச விட போவது , நம்மளுடைய தேனிநிலவு முடியவே எப்படியும் ஒரு மாதம் தேவைப்படும் , அப்புறம் அப்படி இப்படி என்று அவன் இழுக்க ,
என்னது ஒரு மாதமா ,என தன் கண்களை விரித்து அவள் பார்க்க ,நீ இப்படி எல்லாம் கோவில் என்று யோசிக்காமல் என்னை பார்த்தால் , பின் உன் தந்தை யிடம் நம் திருமணத்திற்கு இன்றே பேச கிளம்பிவிடுவேன் , சரி தானா என கேட்க ,
ஐயோ , அஜூ நீங்கள் வேற , நான் ஒருவழியாக முதலில் தெரிவித்து , பின் உங்களை வரவைப்பது தான் நல்லது என்பவளை நோக்கி , மிகவும் அதிக நாட்கள் எடுக்காதே திவி என்னால் பொறுக்க முடியாது , அப்புறம் தப்பாக ஏதும் நடந்தால் நான் பொறுப்பில்லை பார்த்து கொள் என கண் சிமிட்ட , தன் வெக்கத்தினை மறைக்க , கிளம்புவோம் வாருங்கள் என அவள் நகர , திவி .........உனக்கு ஒரு மாதம் தான் நேரம் , அதற்குள் பேசி விடு ...... இல்லையென்றால் நானே என அவன் பாட்டில் பேசி கொண்டிருக்க ,
ஹலோ சார் , கீழே நாம் இருவருக்காக அனைவரும் காத்து கொண்டிருக்கிறார்கள் , நீங்கள் யாரிடம் என்ன பேச வேண்டும் என்று யாரோ தன்னை உலுக்க , கஷ்டப்பட்டு தன் கண்களை திறக்க , அவனுக்கு நேர் எதிரே மெரூன் கலர் சில்க் காட்டன் புடவையில் தன் மனைவி நிற்க , அட கடவுளே இது எல்லாம் கனவு தானா , சத்ய சோதனை டா அர்ஜுன் , என்று தன் கனவிலிருந்து வெளியே வந்தான் அவன்.
இல்லை , ஏதோ ஒரு கனவு இல்லை ஒன்றுமில்லை என்று சமாளித்து விட்டு , நீ கீழே சென்றுவிடு , நான் ஒரு 15மினிட்ஸ் வந்து விடுவேன் என்று அவளை அனுப்பி வைத்து விட்டு எழுந்தவனுக்கு , ஹ்ம்ம் ஒரு காலத்தில் எப்பொழுது திருமணம் என்று காத்திருந்தோம் , இன்று திருமணம் ஆகியும் கூட இப்படி தனியே வாழ்கிறோம் , இவளை பிரிய கூடாது என்று செய்த சிறு தவறு , இப்படி ஒரேடியாக தன்னை அவளிடமிருந்து பிரிக்கும் என எதிர்பார்க்காதவனாக , கடவுளே எப்படியாவது இவளுக்கு உண்மையை புரிய வைக்க வேண்டும் , என்று ஒரு நிமிடம் கண் மூடி திறந்தவன் , கீழே செல்வதற்கு ஆயத்தமானான்.
அபிராமி பாட்டி , நேற்று வந்த பேரனின் மனைவியிடம் அவனது பெருமைகளை அள்ளி வீசி கொண்டிருக்க, திவ்யா அதை ஆர்வத்துடன் அவனை பற்றி அறிந்து கொண்டிருந்தாள்.
என்னுடைய பேரன் மாதிரியே ஒரு கொள்ளு பேரனை எப்பொழுது தர போகிறீர்கள் என மூத்தவள் விசாரிக்க , திவ்யாவிற்கோ , மனதினில் அர்ஜுன் உருவில் சின்ன கண்ணனை பார்க்க எதிர்பார்ப்பு இருந்தாலும் இன்று இருக்கும் சூழ்நிலையில் எதையும் யோசிக்க முடியவில்லை , இருப்பினும் பெரியவரிடம் மாட்டி கொள்ள முடியாதே , அதானே பாட்டி , அடுத்த வருடம் , இந்த நேரம் உங்கள் பேரன் உங்களிடம் இருப்பான் என சிறு வெக்கத்துடன் பதில் அளித்து கொண்டிருக்க ,
மாடி படிகளில் இறங்கி கொண்டிருந்த அர்ஜுன் அனைத்தையும் தெளிவாக கேட்டாலும் , அதை தன் மனையாள் நேரில் சொல்லி கேட்க ஆசைப்பட்டு , என்ன பாட்டி அடுத்த வருடம் என்ன வேண்டும் உங்களுக்கு என்று பேசிக்கொண்டே , இப்பொழுது இவள் அருகில் அமர்ந்தால் உண்டு என்ற பாவனையுடன் சோபா பெரிய அளவாக இருப்பினும் , மனைவியின் பக்கத்தில் அவளை நெருக்கி கொண்டு அமர்ந்தான் அவன்.
திரும்பி அவனை முறைத்தவள் , எனக்கு கிச்சனில் வேலை இருக்கு என எழ போக , அதெல்லாம் அனைத்தும் முடிந்து விட்டது என்று கோகிலா வந்து தன் மாமியார் அருகில் அமர , இதற்கு மேல் ஒன்றும் இயலாது என அமைதியாக தன்னை கட்டுபடுத்தி கொண்டாள் திவ்யா .
அது ஒன்றும் இல்லை கண்ணப்பா , எனக்கு உன்னை போன்று ஒரு கொள்ளு பேரனை எப்பொழுது தர போகிறீர்கள் என கேட்டு கொண்டிருந்தேன் , அதற்கு உன் மனைவி அடுத்த வருடம் இந்த நேரம் என் மடியில் பேரன் இருப்பான் என்று கூறி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டாள் என தெள்ள தெளிவாக கூற ,ஐயோ இப்படியா எல்லாத்தையும் சொல்வார்கள், இவன் நம்மை பற்றி என்ன நினைப்பான் என்று மனதினில் நினைத்து கொண்டிருக்க ,
அர்ஜுனோ மிக சந்தோசமாக , கண்டிப்பாக பாட்டி , மேலிடமே சொல்லி விட்டாள் என்றால் அதற்கு மேல் பேச்சிற்கே இடம் இல்லை , கண்டிப்பாக நடக்கும் என அருகில் இருப்பவளை பார்க்க , ஏற்கனவே அவன் நெருக்கம் தந்த மயக்கம் , இப்பொழுது அவன் பார்வை என சமாளிக்க முடியாமல் வெக்கத்தில் கன்னங்கள் சிவக்க , நான் சென்று காலை சாப்பாட்டினை எடுத்து வைக்கின்றேன், மாமா வரும் நேரம் ஆயிற்று என்று அங்கிருந்து ஓடுபவளை கண்டு மூவரும் சிரித்தனர்.
காலை உணவு முடிந்து , சந்தான ராமசாமி அலுவலகம் கிளம்ப , மூத்தவள் ஓய்வெடுக்க தன் அறைக்கு செல்ல , மதியம் சாப்பாடு நான் பார்த்து கொள்கிறேன் நீ சென்று அர்ஜூனுடன் பேசி கொண்டிரு என்று அவளை அனுப்பி வைத்தாள் கோகிலா.
ஆமா கார்த்தி , நீ அதையெல்லாம் தெளிவாக பார்த்து கொள் , அந்த கிளைண்ட்க்கு பெமென்ட் ப்ரோசஸ் ,என தன் நண்பன் மற்றும் தொழில் முறை பார்ட்னரிடம் விளக்கி கொண்டிருந்தவன் , அறைக்குள் திவ்யா நுழைய , மச்சான் நான் பிறகு உனக்கு போன் செய்கிறேன்டா , என்று தொடர்பினை துண்டித்தவன் , அப்புறம் திவ்யதர்ஷினி சாரி சாரி பெயர் சொல்லவில்லை மேடம் , பாட்டியிடம் சொன்னது எப்பொழுது நடைமுறை படுத்தலாம் என்று ஆர்வமாக விசாரிக்க , அவனை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தவள் , தன் அறைக்குள் நுழைய முயல , அவளை பிடித்து நிறுத்த அவன் இழுத்த வேகத்தில் நிலை தடுமாறி அவள் விழ போக , அதை தடுக்க அவளை பிடித்தவன் , சாரி என்று வேகமாக விலகினான்.
இவன் நெருங்கி வந்தாலும் தொல்லை , தள்ளி போனிலும் தொல்லை தான் என்று அலுத்து கொண்டவள் , பெரியவர்கள் மனது நம்மால் கவலை பட வேண்டாம் என்று அவர்களுக்காக நான் கூறிய பொய் என உங்களுக்கே தெரியும் என்று நகர ஆரம்பிக்க ,
இதே தான் திவி , ஒரு நன்மைக்காக தாராளமாக பொய் கூறலாம் , அப்படி தான் நான் உன்னிடம் கூறியதும் , இதில் என்னை தள்ளி வைத்து நம்மை கஷ்ட படுத்த ஒன்றுமே இல்லை , நீ சிறிது புரிந்து கொண்டால் போதும் என்று அவன் இது தான் நேரம் என்று விளக்க , அது எப்படி உங்களையே முழுதாக நம்பும் ஒருத்தியிடம் இறுதி வரை உண்மையை மறைத்து ,
அவளால் உங்களை பிரிந்து வாழவே முடியாது என்ற நிலை வந்ததும் , அப்பாடா இனி இவளால் ஒன்றும் செய்ய இயலாது என தெரிந்து கொண்டு உண்மையை சொல்விர்கள் , நான் உடனே ஏற்று கொள்ள வேண்டுமா , இதற்கெல்லாம் ஏற்றவள் நான் இல்லை புரிந்ததா , சோ உங்களுடைய நேரத்தினை வீணடிக்காமல் , வேறு ஒருத்தியை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் சரிதான் , நான் வேண்டுமானால் விலகி கொள்கிறேன் என்று நகர போனவளை கை பிடித்து நிறுத்தி ,
இந்த ஒரு ஜென்மம் மட்டுமில்லை மை டியர் மனைவி , இன்னும் எத்தனை ஜென்மம் என்றாலும் இந்த அர்ஜுனிற்கு திவ்யா ஒருத்தி தான் மனைவி புரிந்ததா , அது மட்டுமில்லால் நீயே பாட்டியிடம் கூறியது போன்று நம் கனவு படி இரண்டு குழந்தை என நாமும் மிக சந்தோசமாக வாழ தான் போகிறோம் , அதுவும் கூடிய விரைவில் என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான் அவளது கணவன் அஜூ .............................
மீண்டும் வளரும் ..........
பிரண்ட்ஸ் , இது என்னுடைய இரண்டாம் நாவல் , முந்தைய நாவலை போன்று இதற்கும் உங்களுடைய ஆதரவினை எதிர்பார்க்கிறேன்.......தாங்க் யு நண்பர்களே....
இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
சாந்தா தேவி . வீ