காதல் கவிதைகள் நீ !
Chapter 9
.......................இதோ வந்துவிட்டேன்ம்மா , நீங்க ஏன் வரிங்க என்று கூறி கொண்டே எலுமிச்சை சாருடன் நிமிர்ந்தவள் எதிரில் நின்றவனை பார்த்து ஆச்சர்யத்தில் விழி விரித்து , நீங்க இங்க என்ன செய்றீங்க என திணற,
இந்த கேள்வி நான் உங்களை பார்த்து கேட்க வேண்டும் , ஏன் என்றால் இது என்னுடைய வீடு, என்று அவன் முடிக்க, ஒ....!, அம்மா ஏதோ வாசு என்றல்லவா கூறினார்கள் என்று அவள் குழப்பமாக வினவ , எஸ் வாசு...வாசன்..கீர்த்திவாசன்.. நான் தான் , அதற்கு என்ன இப்பொழுது, நீ எப்படி இங்கே வந்தாய் என்று நான் கேட்டதாக நியாபகம் என அவன் திமிராக பேச பேச , அவளுக்கு அப்படியே பூமிக்குள் சென்று விடமாட்டோமா என்று இருந்தது.
என்னம்மா கவிதா சத்தமாக உள்ளதே என கேட்டுகொண்டே சமையல் அறைக்குள் அவனது தாயார் வர , அடடே வாசு நீ எப்படா வந்தாய் , உன்னை நான் கவனிக்கவே இல்லை பாரு , என்னடா இவ்வளவு அதிசயமாக பார்க்கிறாய் , இது கவிதா என்று அவனுக்கு அறிமுக படுத்த , கவிதாவிற்கோ அப்பாடா , இவனது கேள்வியில் இருந்து தப்பித்தோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டவள் , எலுமிச்சை சாருடன் , அவனை தாண்டி சென்று சாரதாவின் பின்னே நின்று கொண்டாள் .
ஹால்க்குள் வந்தவர்கள் , இவன் தான்மா வாசு என்கிற கீர்த்திவாசன் என்று அவனையும் அவளுக்கு அறிமுக படுத்தினாள். ஹ்ம்ம்கும் இந்த பெயரினை கோவிலிலே முழுதாக சொல்லிருந்தால் இன்று இவன் முன்னே நிற்கும் நிலைமை வந்து இருக்காது என மனதிற்க்குள் நினைத்து கொண்டுஇருக்கும் பொழுதே , அப்புறம் என் பெயர் சொல்லவே இல்லை பாரேன் , என்று அவள் தொடங்க ,
சாரதா அம்மா , சரிதானே என்று கீர்த்தியினை பார்த்து கொண்டே கவிதா கூற , உனக்கு எப்படி தெரியும் , நான் உன்னிடம் கூறவே இல்லையேமா என்று அந்த தாய் பொருள் பொதிந்த பார்வையுடன் இருவரையும் நோக்க , தன் நாக்கினை கடித்து கொண்டவள் , இல்லையே நீங்கள் தான் கோவிலில் கூறினிர்கள்ம்மா , என்று நிலைமையை சமாளித்து அவளை ஜூஸ் பருக வைத்தாள் .
சரிங்கமா , குடிக்க நீர் கொடுக்க கூட ஆள் இல்லாமல் , படுத்து இருந்திர்கள் என்றுதான் கிச்சன் வரை வந்ததே , நீங்கள் பேசுங்கள் , நான் மாடிக்கு செல்கிறேன் என்று அந்த இடத்தை விட்டு விலக போனவனை தடுத்து, என்ன கீர்த்தி , வீட்டிற்கு விருந்தாளி வந்தால் , இப்படிதான் செல்வதா , என்று மகனையே கடிந்து கொண்டவள், கவிதாவை எங்கு பார்த்தேன் கூட கேட்கமாட்டியா நீ என்று அவனையும் அங்கேயே அமர்த்தினாள் சாரதா .
எப்படியும் சொல்லாமல் விடபோவதில்லை , சரி கூறிவிடுங்கள் என்று தாயை பார்த்து புன்னகை புரிந்தவனை , கண் அசராமல் பார்த்து கொண்டிருந்தாள் கவிதா , ச்ச , இவனை இப்படி சிரித்த முகமாக பார்க்கும் பொழுது எவ்வளவு அழகாக உள்ளது என்ற மனதார ரசித்து கொண்டு இருந்தாள்.
வழக்கம் போல , உனக்காக பெருமாளிடம் , வேண்டி கொண்டிருந்தேனா , அப்பொழுது மயக்கம் வருவது போல் இருக்க , இவள் தான் நீர் கொண்டு வந்து எனக்கு உதவி , வீடு வரை கூடவும் வந்தாள் , நீயானால் அவளுக்கு ஒரு நன்றி கூட சொல்லமாட்டேன் என்கிறாய் , போ கீர்த்தி
ஐயோ அம்மா , எவ்வளவு முறை தான் , உங்களுக்கு கூறுவது தனியே செல்லவேண்டாம் என்று , என் பேச்சை மட்டும் கேட்காதீர்கள் என்று தாயினை பாசமாக மிரட்டி கொண்டே , நன்றி கூற கவிதாவினை நோக்கியவன் , அவள் பார்வை இதுவரை தன் மேல்தான் இருந்ததா என்று புருவம் உயர்த்த, அவன் இப்படி திடிரென கவனிப்பான் என்று எதிர்பாராத கவியோ , அவசரமாக தன் பார்வையினை விலக்கிகொண்டவளுக்கு முகம் வெட்கத்தால் சிவந்துஇருந்தது.
கீர்த்தி வாசன் மனதுக்குள் சிரித்து கொண்டே , கவிதாவோ , காவியாவோ அம்மாவை பத்திரமாக கூட்டி வந்ததற்கு மிகவும் நன்றி என அவன் கேலியாக கூற, அவளோ அவனை பார்த்து முறைத்து கொண்டு , என் பெயர் கவிதா , ஓகே என்று பதில் கொடுத்தாள். இவ்வளவு பேசுபவர் ஒன்று தனியே விடகூடாது , அப்படி இல்லை என்றால் , அவர்கள் கேட்பதை செய்வது தானே , என வேண்டும் என்றே சாரதாவிற்கு பரிந்து பேசினாள்.
சும்மா, அவர்கள் கேட்பது என்னவென்று தெரியாமல் உளற வேண்டாம் , என கீர்த்தி பதிலுக்கு உரைக்க
ஏன், திருமணம் தானே , செய்வதற்கு என்ன , இல்லை யாரையாவது நினைத்து கொண்டு என்று கவி துவங்க , அப்படி கேள் நன்றாக என்று அவளுக்கு ஒத்து பாடினாள் சாரதா.
அவ்வாறு , நான் நினைத்து கொண்டு , காத்திருக்கும் அளவுக்கு எனக்கு எந்த பெண்கள் மேலும் ஏதும் தோன்றவும் இல்லை, அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை போதுமா என்று தன் பதிலை சற்று அழுத்தமாகவே கவிதாவினை பார்த்து கூறினான் கீர்த்தி .
இதில் நம்பிக்கை கெடும் அளவுக்கு என்னப்பா இருக்கு , இதோ இந்த கவிதா மாதிரி ஒரு பெண்ணை கூட்டி கொண்டு வந்து , இவளை தான் திருமணம் செய்யபோகிறேன் என்று கூறினாள் நான் என்ன வேண்டாம் என்றா கூறபோகிறேன் என சாரதா இயல்பாக கூற , இருவருக்கும் வியர்கவே தொடங்கி விட்டது.
அம்மா , நீங்கள் வேற இதெல்லாம் கூற போக , அந்த பொண்ணு ஏன்டா ஹெல்ப் செய்தோம்னு அழபோகிறார்கள் பாருங்கள் , என தன் தாய்க்கு பதில் கூறிவிட்டு , நான் கிளம்புகிறேன்ம்மா நீங்கள் பேசுங்கள் என்று அந்த இடத்தை விட்டு மறுபடியும் விலக ஆரம்பித்தவனை ,வாசு ரொம்பவே நேரம் ஆகிவிட்டது , நீ சென்று கவிதாவினை வீட்டுக்கு கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடு சரியா என கூறினாள் அந்த தாய்.
ஐயோ ! அம்மா அதெல்லாம் வேண்டாம் என்று இருவரும் ஒரே நேரத்தில் ஒன்றாக கூற , சாரதாவிற்கே ஆச்சரியம் அதிகமானது. என்ன 2பேருக்கும் நல்ல பொருத்தம் இருக்கும் போல என்று அவள் சிரித்து கொண்டே இயல்பாக கூற , இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர்.
வாசு , நீ இப்பொழுது கொண்டு சென்று விட்டு விட்டால் வந்தால் தானே , அவளுக்கு மறுபடியும் எனக்கு உதவி என்றால் செய்ய தோன்றும் , சொன்னதை செய் என்று கூறிவிட்டு , கவிதா ஒரு நிமிடம் இரும்மா இதோ வந்து விட்டேன் என உள்ளே சென்றாள் சாரதா.
தனித்து விடப்பட்ட இருவரும் ஒருவரை பார்த்து கொள்ள கூடாது என்று வேண்டும் என்றே திரும்பி நின்று கொண்டிருக்க , ஒரு தட்டில் மஞ்சள் நிற புடவை , மற்றும் குங்குமம் உடன் வந்து கவிதாவிடம் நீட்ட , அம்மா இதெல்லாம் எதற்கு என்று தர்மசங்கடம் ஆனால் கவிதா.
வீட்டிற்கு வருபவர்களுக்கு கொடுப்பது நம் குடும்ப வழக்கம் தான்டா பெற்று கொள், வாசு கொஞ்சம் சொல்லேண்டா என்று கூறபோக , அதற்கு மேல் தாமதிக்காமல் ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா , என்று காலில் விழுந்து வணங்கி , பெற்றுகொண்டாள் கவிதா .
உங்கள் அம்மா , மிகவும் மரியாதையாக வளர்த்துஇருகிறார்கள் , சீக்கிரமே உனக்கு திருமணம் , நீ நினைத்த மாதிரி நடக்கும் என்று கூற , நிமிர்ந்து கீர்த்தியினை அவள் பார்க்க , இம்முறை அவன் அவளையே இவ்வளவு நேரம் பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்து முகசிவப்பினை மறைத்து அவ்விடத்தை விட்டு கிளம்பினாள்.
அடிக்கடி , வந்து போம்மா , வாசு கூட்டிட்டு போ , நான் சென்று மேலே படுக்க போகிறேன் என்றவளிடம் , சரிங்கமா என கூறிவிட்டு வெளியே வந்தான்.
கவி , பின் சீட்டில் அமர போக , நான் ஒன்றும் உனது டிரைவர் இல்லை புரிகிறதா , முன்னே வந்து உட்கார் என்று கதவினை திறந்து விட்டான் அவன். அவள் ஒரு வித படபடப்புடன் , அமர , வண்டியினை ஸ்டார்ட் செய்து , சாங் ப்ளையர் ஆன் செய்தான்.
அதில் , அன்பே , என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் , கனவே கனவே கண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன்.......என்றே பாடி கொண்டே போக, கவிதா கீர்த்தியினை பார்த்து முறைத்து வைக்க , நல்ல நேரம் பார்த்து தான் இந்த சாங் ப்ளே ஆகனுமா என்று செட்டினை ஆப் செய்து விட்டு அமைதியாக ஓட்டினான் கீர்த்தி.
அப்புறம் , என்னை நம்பவைத்து ஏமாற்றியதை போல் , இப்பொழுது என் அம்மாவிடம் எதும் செய்ய துவங்கி விட்டயா , அப்படி ஏதாவது என்றால் அதற்கு நான் அனுமதிக்க போவதில்லை ஓகே , என வேண்டும் என்றே அவளை வம்புக்கு இழுத்தான் அவன்
என்ன , நான் உங்களை ஏமாற்றியனா , நல்ல கதையாக இருக்குதே,
ஹ்ம்ம் , 2வருடம் காதலிக்குறேன்னு சொல்வீங்க , ஆனால் அவங்க மேல் நம்பிக்கை கூடவா இருக்காது , ச்ச , இந்த பொண்ணுங்களே இப்படிதான் என்று பொதுவாக கூற , அது என்ன அப்படி சொல்றிங்க , உங்கள் மேல் சந்தேகம் என்றால் விளக்கம் இல்லாமலா போகும், அதை சொல்லி புரியவைக்க முடியாமல் இது தான் நேரம் என்று விட்டு விட்டு போகும் ஆண்களை விட பெண்கள் ஒன்று தப்பு இல்லை புரியுதா என்று அவள் பதிலடி கூறினாள் கவிதா.
சரி ஒரு மனுஷன் யாரை லவ் செய்தான் என்பது தெரிந்தும் கூட தெரியாத மாதிரி காலையில் வந்து அவ்வளவு பேசிவிட்டு சென்றாய் , இது மட்டும் ரொம்ப நியாயமான விஷயமா உங்களுக்கு, என்று பதிலுக்கு உரைக்க , ஆமாம் நீங்கள் விளக்கம் கூட தராமல் போனதை பார்த்தால் அன்று பாரதி கூறிய அனைத்துமே உண்மை தான் போலயே , அந்த சந்தேகத்தினால் தான் காலையில் அப்படி கேட்டேன் போதுமா !, வேண்டும் என்றே அவளும் நோகடிக்க ,
சோ இந்த மூன்று வருட பிரிவில் கூட நீ எது உண்மை என்று புரிந்து கொள்ளவில்லை அதானே , மிகவும் பெருமை படுத்தி விட்டாய் நீ தான்க் யூ மிஸ் கவிதா, என்ன கூறினாய் நான் பாரதியை கழட்டி விட்டேனா , கிடையாது உண்மையில் உன்னை தான் ஏமாற்ற வேண்டும் நினைத்தேன் , ஆனால் அதற்குள் நீ புரிந்து கொண்டு விலகி விட்டாய் , போதுமா ,சோ இன்னும் 2மினிட்ஸ்ல நீ மட்டும் வண்டியை விட்டு இறங்கவில்லை , உன்னை என்ன என்ன செய்வேன்னு நான் உனக்கு புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை புரிஞ்சுதா என்று அவன் கோபமாக கூற , அதில் பயந்தவள், எங்கு இறங்கி எங்கு போக போகிறோமோ தெரியவில்லையே என்று மனதில் நினைத்து கொண்டே கண்ணாடியின் வெளியே பார்த்தால் அவள் வீடு வந்து இருந்தது.
கவிதாவிற்கோ அப்பாடா என்று இருந்தது. உங்கள் கூட வந்ததே பெரிய தப்பு , ச்ச என்று அவனை பார்த்து முறைத்து விட்டு வீட்டிற்குள் சென்று கதவினை வேண்டும் என்றே ஓங்கி அறைந்து விட்டு உள்ளே சென்றாள். ஒருவாராக தாய் , தந்தையிடம் நார்மலாக பேசிவிட்டு உள்ளே சென்று தன் படுக்கையில் விழுந்தவள் , போன் அழைக்க யார் என்று எடுத்து பார்த்தால் பாரதி என காட்டியது , இவளால் தானே இவ்வளவும் , உன்னை இருடி என்று மனதினி நினைத்து கொண்டே ,
ஹலோ பாரதி சொல்லுடி ,
ஹ்ம்ம் கவி , என்ன ஆனது , கீர்த்தியை பார்த்தாயா , எல்லாம் கூறிவிட்டியா என்று கேட்டு கொண்டே போக ,
பாரதி தயவு செய்து இனி கீர்த்தி பற்றி என்னிடம் பேசாதே , ப்ளீஸ் அப்படி பேசுற மாதிரி என்றால் எனக்கு நீ கால் பண்ணவே வேண்டாம் புரிஞ்சுதா , இப்போ வைத்து விடு என்று கோபமாக உரைக்க , அந்த சைடு பாரதி , கவி ப்ளீஸ் ஒரு 5மினிட்ஸ் நான் சொல்வதை மட்டும் கேள் , எனக்காக டி என்று கெஞ்ச , சரி சொல்லு என்று அமைதி ஆனால் கவிதா.
நம் கல்லூரி கடைசி வருடம் அன்று கீர்த்தி பற்றி நான் கூறிய அனைத்துமே பொய் டி , ப்ளீஸ் அவ்வாறு செய்ததற்கு நீ முதலில் என்னை மன்னிக்க வேண்டும் , பட் அது எல்லாமே பொய் மட்டும்தான் என்று கூற கவிதாவிற்கோ தலையே சுற்றியது மனதினில் கீர்த்தியின் முகம் நியாபகம் வர , என்னது பொய்யா என்னத்தை டி சொல்லி தொலைக்குற முதலில் தெளிவாக சொல்லு பாரதி ..............................................................
ஹலோ பாரதி சொல்லுடி ,
ஹ்ம்ம் கவி , என்ன ஆனது , கீர்த்தியை பார்த்தாயா , எல்லாம் கூறிவிட்டியா என்று கேட்டு கொண்டே போக ,
பாரதி தயவு செய்து இனி கீர்த்தி பற்றி என்னிடம் பேசாதே , ப்ளீஸ் அப்படி பேசுற மாதிரி என்றால் எனக்கு நீ கால் பண்ணவே வேண்டாம் புரிஞ்சுதா , இப்போ வைத்து விடு என்று கோபமாக உரைக்க , அந்த சைடு பாரதி , கவி ப்ளீஸ் ஒரு 5மினிட்ஸ் நான் சொல்வதை மட்டும் கேள் , எனக்காக டி என்று கெஞ்ச , சரி சொல்லு என்று அமைதி ஆனால் கவிதா.
நம் கல்லூரி கடைசி வருடம் அன்று கீர்த்தி பற்றி நான் கூறிய அனைத்துமே பொய் டி , ப்ளீஸ் அவ்வாறு செய்ததற்கு நீ முதலில் என்னை மன்னிக்க வேண்டும் , பட் அது எல்லாமே பொய் மட்டும்தான் என்று கூற கவிதாவிற்கோ தலையே சுற்றியது மனதினில் கீர்த்தியின் முகம் நியாபகம் வர , என்னது பொய்யா என்னத்தை டி சொல்லி தொலைக்குற முதலில் தெளிவாக சொல்லு பாரதி ..............................................................
ஹாய் பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருந்தா கமெண்ட் பண்ணுங்க ஆர் இந்த FB Page லைக் பண்ணுங்க
ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் சண்டே போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......
Thankyou
இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI
No comments:
Post a Comment