காதல் கவிதைகள் நீ !
Chapter 11
.................................அந்த சைடில் , கீர்த்திக்கோ ! அப்பாடா ஒரு வழியாக மேடம்க்கு இப்பொழுதாவது உண்மை புரிந்ததே , இன்னும் ஒரு மாதத்தில் அனைத்து ப்ரொப்லெம் க்ளியர் செய்து எப்படியாவது இவளை திருமணம் செய்து விடவேண்டும் , இவ்வளவு நாட்கள் தூரத்தில் இருந்த பொழுது கூட தெரியவில்லை , ஆனால் இந்த இரண்டு நாட்களாக அருகில் வந்து என்ன பாடுபடுத்திவிட்டால் , இனியும் இவளை பிரிந்து நம்மால் வாழ இயலாது என அவன் கட்டிலில் இருந்த அவளது புகைபடத்தினை பார்த்து கண்ணடித்து கொண்டு நிம்மதியாக உறங்க போனான் நமது ஹீரோ கீர்த்தி.
அவன் கூறிய வார்த்தைகளில் செய்வது அறியாமல் திகைத்து நின்ற கவிதாவிற்கோ , தன் வாழ்க்கையை தானே கெடுத்து கொண்டது எண்ணி கண்களில் நீர் கோர்க்க படுக்கையில் விழுந்தாள்.
மறுபடியும் போன் அலற , யாராக இருக்கும் என எடுத்தவளுக்கு பாரதி என்று தெரிய , இவளால் தானே நம் வாழ்க்கையும் இப்படி என்ற ஆத்திரம் தோன்ற , அவசரமாக கால் அட்டென் செய்தவள் நான் உனக்கு என்னடி பாவம் செய்தேன் , ஏன் என்னுடைய வாழ்வை இப்படி பழிவாங்கி விட்டாய் என்று கோபமாக பேசிக்கொண்டே போக , அந்த சைடு பாரதி அழ துவங்கி இருந்தாள் .
கவி! ப்ளீஸ் டி , நான் செய்தது ஏதோ நீங்கள் சிறிது நாள் பிரிந்து இருந்து பிறகு சேர்ந்து விடுவிர்கள் என எதிர்பார்த்து தான் , ஏதோ என்னை நிராகரித்த கீர்த்திக்கு நான் தரும் தண்டனை என நினைத்துவிட்டேன் டி, பட் நீங்கள் இப்படி 3வருடமாக பிரிந்து வாழ்வீர்கள் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை , ஈவன் நீங்கள் பிரிந்து வாழ்வது கூட போன ,மாதம் என்னுடைய திருமணத்திற்காக நம் தோழி கீதாவுக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற பொழுது அவள் கூறி தான் தெரியும் , இப்பொழுது கூட என்னுடைய சுயநலத்திற்காக உன்னை பிரித்ததை எண்ணி மிகவும் வருந்தினேன் , அதனால் தான் நீ மீண்டும் கீர்த்தியை மீட் செய்து காதல் என்று பேசினால் கண்டிப்பாக உங்களது ப்ரொப்லெம் பற்றி ஒரு முடிவிற்கு வருவிர்கள் என்று எண்ணி தான், நான் அன்று உனக்கு கால் செய்து அவனிடம் சென்று என் காதலை சொல்லுமாறு வற்புறுத்தியதே , ப்ளீஸ் நீ மட்டும் மனதார என்னை மன்னிக்கவில்லை என்றால் , கண்டிப்பாக என்னால் நிம்மதியாக வாழ முடியாது டி என்று மனதார அழுபவளை அதற்கு மேல் துன்ப படுத்த முடியவில்லை கவியினால்.
சரி டி , நீ விடு நான் பார்த்து கொள்கிறேன் , நீ சொல்லியதை அப்படியே நான் நம்பியது என்னுடைய தவறு , இதில் உன்னை குற்றம் கூறி ஒன்றும் ஆக போவதில்லை, சோ நான் தான் எப்படியாவது சரி செய்ய வேண்டும், பட் நீ திருமணத்தினை வைத்து இவ்வாறு இந்த நேரத்தில் அழுது கொண்டிருப்பது மிகவும் தவறு , நீ சென்று துங்கு சரிதானா என்று தன் தோழியை சமாதானம் செய்தாள் . மேலும் அவளை தேற்றும் விதமாக என்ன மேடம் என்னை திருமணத்திற்கு அழைக்கும் ஐடியாவே இல்லையா என்று இயல்பாகவே பேசி கொண்டிருக்க ,
கவி , இப்பொழுது கூட என்னை இவ்வளவு எளிதாக மன்னிக்க உன்னால் மட்டுமே முடியும் டி , கண்டிப்பாக கீர்த்தி உன்னைமன்னிப்பார் , நான் வேண்டுமானால் பேசி பார்க்கவா என்றவளை தடுத்து , அதெல்லாம் வேண்டாம் டி , நானே சரி செய்கிறேன் என்று அவளை பேசி சமாதானம் செய்து விட்டு கால் கட் செய்தவளால் நிம்மதியாக உறங்க முடியவில்லை , நாளை எப்படியாவது கீர்த்தியை நேரில் பார்த்து சமாதானம் செய்ய வேண்டும் என்று அழுது கொண்டே உறங்க துவங்கினாள்.
காலையில் எழுந்தவளுக்கு சரியாக தூக்கம் இல்லாததால் தலை அதிகமாக வலித்தது , இருப்பினும் தன்னுடைய இஷ்ட பிள்ளையாரை வேண்டி கொண்டு தயாராகி கீழே வந்தவளால் , தாயின் கவலைக்கு பதில் சொல்லி சமாளிக்க முடியவில்லை.
கவி, என்னதான் நினைத்து கொண்டிருக்கிறாய் நீ , உன் வயது பெண்கள் எல்லாம் திருமணம் செய்து பிள்ளை, குடும்பம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது நீ எங்களுடைய ஒரே பெண் , உனக்கு மணம் செய்து வைக்க எங்களுக்கு விருப்பம் இருக்காதா , நீ கேட்ட மாதிரி உன்னை தான் வேலைக்கும் அனுப்பிவிட்டோம் , இன்னும் நீ ஒத்து கொள்ள வில்லை என்றால் , நாங்கள் என்ன தான் செய்வது , எங்களை பற்றி நீ நினைத்து கூட பார்க்க மாட்டேன் என்கிறாய் , இனியும் உன்னை கேட்டு பயனில்லை என்று புலம்பி கொண்டிருந்த தாயின் வருத்தம் கவிக்கு புரியாமல் இல்லை,
அம்மா தயவு செய்து இன்னும் 2மாதம் , அதற்கு பிறகு கண்டிப்பா நான் லேட் செய்யபோவதில்லை ப்ளீஸ்ம்மா , என்று அழகாக கெஞ்சும் மகளை அதற்கு மேல் மிரட்ட மனம் வரவில்லை அந்த தாய்க்கு , கவி நீ பயப்படுவது போல் திருமணம் அவ்வளவு கடினமான விஷயம் இல்லைடா என்று தன் பெண் திருமணத்திற்கு பயப்படுவதாக எண்ணி கொண்டு அவள் பேசி கொண்டிருக்க , கவிதாவிற்கோ மனம் முழுவதும் கீர்த்தியிடமே இருந்தது அவனை சரி செய்யும் வழியை யோசனை செய்துகொண்டு.சரிங்கம்மா நான் கிளம்புறேன் , வொர்க் டைம் ஆகிவிட்டது அப்பாவிடம் கூறிவிடுங்கள் என்று தாயினை சமாளித்து விட்டு , அவனது அலுவலகத்தினை அடைந்தாள்,
அங்கோ , கீர்த்தி எப்படியும் இன்று அவள் நேரில் வருவாள் என எதிர்பார்த்தே கிளம்பினான். அவன் அணிந்திருந்த கருப்பு நிற ஷிர்ட்டும் , நீல நிற ஜீன்சும் அவனை ஒரு மாப்பிள்ளை தோரணையில் காட்டியது.
அம்மா நான் கிளம்புகிறேன் வொர்க் இருக்கு என்ற மகனின் குரலில் அவனை கவனித்தவள் , என்னடா வாசு , ஏதும் விஷயமா பார்க்க மாப்பிள்ளை மாதிரி இருக்கிறாய் , அப்ப சரி பொண்ணு பார்த்துவிட வேண்டியது தான் , என்னங்க நான் சொல்வது சரிதானே என்று கேசவனை இழுக்க ,
ஆமாம் வாசு ,அம்மா சொல்வதும் சரிதான் , அப்படி இல்லை ஏதும் லவ் அது இதுஎன்று இருந்தால் அப்பாவிடம் சொல் , நான் உன் அம்மாவை சரி செய்து விடுகிறேன் சரியா என்று கேசவன் கீர்த்தியிடம் போட்டு வாங்கும் விதமாக பேச , அப்பா நல்லா அம்மாவிடம் போட்டுவிட பிளான் செய்றிங்கன்னு தெரியுது, பட் நல்ல அம்மா இல்லை ,இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்கள் கண்டிப்பாக நல்ல விஷயம் நானே சொல்கிறேன் என்று அவர்களை அப்பொழுது சமாளித்து விட்டு கவியை இன்றும் பார்க்க போகும் ஆவலுடன் அலுவலகம் விரைந்தான்.
மே ஐ கம் இன் சார்
யா, எஸ் கம் இன் வாசவி
யா, எஸ் கம் இன் வாசவி
சார் , உங்களை பார்க்க கவிதா , அன்று கூட வந்தாங்களே , அவர்கள் உங்களை பார்க்க வந்து இருக்காங்க , ஏதோ முக்கியமான விஷயம்... என்று அவள் தொடர , மனதினில் நம்ம கெஸ்ஸிங் எப்போ தப்பு ஆனது என்று சிரித்து கொண்டு, ஓகே வாசவி நான் சொல்றப்ப அவர்களை அனுப்புங்கள் போதும், அது வரைக்கும் வெயிட் செய்ய சொல்லிடுங்க, வேற ஒன்றும் சொல்லவேண்டாம் ஓகே .
ஓகே சார்,
நெக்ஸ்ட் இன்று ஏதும் முக்கியமான பைல்ஸ் பார்க்க வேண்டியது இருக்கா ,
இல்லை சார், பட் அடுத்தவாரம் கிளையன்ட் மீட்டிங் , அதற்கு ரெடி பண்ண வேண்டிய வொர்க் இருக்கு சார் ,
ஓகே , அதை நாளை பார்த்து கொள்ளலாம் , மார்னிங் நீங்களே மேனேஜ் பண்ணிடுங்க , நான் சொல்லும் போது அவர்களை அனுப்புங்கள் , ஸோ இப்ப நீங்க கிளம்பலாம் என்று அவளை அனுப்பிவிட்டு வழக்கமாக பார்க்கும் ,மெயில் வொர்க் செக் செய்து விட்டு ஆபீஸ் சிசிடிவீ கேமரா ஸ்க்ரீன் ஆன் செய்து அதில் கவியின் அசைவுகளை கவனிக்க தொடங்கினான்.
அது எப்படி டியர் , சொல்லி வைத்த மாதிரி ப்ளாக்ல டிரஸ் பண்ணிருக்க , ஹ்ம் இந்த அளவு ஒற்றுமை இன்றும் குறையவில்லையே என மனது மிகவும் சந்தோஷபட்டது.
வாசவி , கவியின் அருகில் செல்ல அவள் உள்ளே வர ரெடி ஆனது போல் எழுந்து நிற்பதும் தெளிவாக தெரிந்தது. சார் வொர்க்ல இருக்காங்க மேம் , நீங்க வெயிட் செய்ங்க என்று கூறிவிட்டு வாசவி சென்று விட சோர்வுடன் கவி அமர்வதும் தெரிய , கீர்த்தியின் பார்வை முழுக்க கவியினது செயல்களில் இருந்தது.
அவள் முகம் கலங்கிஇருந்தது கீர்த்திக்கு தெளிவாக தெரிந்தது. அவள் அடிக்கடி நேரம் பார்ப்பதுமாக கன்னத்தில் கை வைத்து அமர்ந்து இருந்தது , கவலை கொண்டிருக்கும் , புள்ளிமானை போல் காட்சி அளித்தது.
அவளுடைய முடி காற்றில் ஆட , அவள் சூடிருந்த பூவின் வாசம் அவனது ரூம்க்குள் வருவது போல் உணர்ந்தான், கருப்பு வண்ணத்தில் ரெட் கலரில் துப்பட்டா தோகை விரித்த மயிலினை போன்று இருந்தது. அவளது காதணிகள் காற்றில் ஆட அதில் இருந்து கூட சத்தம் வருவது போல் உணர்ந்தான் கீர்த்தி. உதட்டு சாயம் பூசபடாத அவளது ஆரஞ்ச் நிற உதடுகள் என்னவோ செய்ய அடுத்து கழுத்து என்று பார்வையை கீழே இறக்கியவன் , உள்ளுணர்வு எச்சரிக்க போதும் கீர்த்தி சென்சார் போட்டுடலாம் , இதற்கு மேல் தப்பு என்று மனதிற்குள் எண்ணி கொண்டு , ஸ்க்ரீனில் அவளை பார்த்து மெய் மறந்து அமர்ந்திருந்தான் அவன்.
நேரம் ஆக ஆக , அவள் பதற்றம் அடைவது நன்றாகவே தெரிய , அவளை அழைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தவனுக்கு போன் கால் வர அதை அட்டென் செய்து பேசி கொண்டே கவனித்து கொண்டிருந்தான் இவளை'.
இங்கோ , கவிதாவிற்கோ ஒரு வேலை நம்மை பார்க்க விருப்பம் இல்லாமல் தான் இப்படி வெயிட் செய்ய சொல்லிருக்கானோ , நம்மை பார்க்காமலே அனுப்பி விடுவனோ என்று சந்தேகம் தோன்ற , அவளது கண்கள் கலங்க தொடங்கின , ச்ச வெளியிடத்தில் என்ன இது அழுகை என்று தன்னையே நொந்து கொண்டு அவள் அவசரமாக கைக்குட்டை கொண்டு துடைப்பதும் தெரிய , உடனே பதறியவன் , போனில் பேசியவரிடம் முக்கியமான வொர்க் இருக்கு நான் கூப்பிடுகிறேன் என்று கட் செய்து விட்டு , வாசவியிடம் அவர்களை உள்ளே அனுப்பும்படி கட்டளை இட்டான்.
உள்ளே வந்தவள் , கீர்த்தி என்று துவங்க , திஸ் இஸ் மிஸ்டர் கீர்த்தி வாசன் , என்ன வேண்டும் சொல்லுங்கள் என்று அவன் பேச ,
கீர்த்தி ப்ளீஸ் , நான் செய்தது மிக பெரிய தப்பு தான் , ஆனால் அதற்காக இனியும் உங்களை பார்க்காமல் என்னால் பிரிந்து வாழமுடியாது , என்று அவள் பேசிக்கொண்டே போக,
என்னது , சரியாக கேட்க வில்லை என அவன் அழுத்தம் கொடுத்து பேசினான்.
இல்லை , அதுவந்து , இனியும் உங்களை பார்க்காமல்....
ஸ்டாப் செய்ரீங்களா மேடம் , இந்த 3வருடம் எங்க இருந்த நீ , நான் எப்படி இருக்கேன் என்றாவது கொஞ்சம் யோசித்து பார்த்து இருப்பியா ,அப்படியே பேச வந்துவிட்டாள் என்று அவன் அலட்சியமாக பதில் கூற,
ஹ்ம்ம் உங்களை பார்க்க நேரில் வரவில்லை தான் , ஆனால் தினமும் உங்களது போட்டோ முன்பு பேசி கொண்டு தானே இருந்தேன்.
ஓ , அப்படிங்களா மேடம் , பேசாம அந்த போட்டோவையே திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டியது தானே , இங்க வந்து ஏன் என்னுடைய நேரத்தையும் வேஸ்ட் செய்ற,
கீர்த்தி , ப்ளீஸ் நான் செய்தது மிக பெரிய தவறு தான் , பாரதி கூறியதை அப்படியே கேட்டது என் தப்பு தான் , ஆனால் அதற்காக என்ன தண்டனை என்றாலும் ஏற்று கொள்ள தயாராக இருக்கிறேன் , ப்ளீஸ் என்று அவள் கண் கலங்க ,
நம்ம கீர்த்திக்கு தான் , அவங்க லவர் அழுதா பொறுக்கமுடியாதே , ஸோ அதை உடனே தடுக்கும் விதமாக , இங்க பாரு , முதலில் இப்படி அழுது சாதிக்கலாம் என்று நினைப்பதை ஸ்டாப் செய்றியா என அவன் மிரட்டும் குரலில் பேச ,
அவனை அதிர்ந்து நோக்கினாள் கவிதா, இல்லை நான் ஒன்றும் நடிக்கவில்லை , என்று அந்த நேரத்திலும் அவனுக்கு பதிலடி கொடுக்க அவள் தயங்கவில்லை.
அவள் அப்படி கோபமாக பேசிய விதத்தில் மயங்கியவன், அடுத்த நிமிடமே இவள் முன்னால் மயங்காதே மனமே அமைதி கொள் என்று உடனே தன்னை கட்டுபடுத்தி கொண்டு , சரி நீ நடிக்கவில்லை , பட் அதற்காக உன்னை மன்னிக்கவும் முடியாது , கிளம்புறியா இப்பொழுது என்று அவளிடம் பதில் கொடுத்தான் அவன்.
கீர்த்தி , கொஞ்சம் கன்சிடர் பண்ணகூடாதா , ப்ளீஸ் என்று தொடரபோனவளை,
கிளம்புடீன்னு சொன்னேன் , என்று அதிரடி பதில் கொடுத்தான்.
அவன் , டி சொல்லிய விதம் அவளுக்கு ஏதோ உணர்த்த , என்னது டி யா என்று நிமிர்ந்து அவன் முகத்தினை பார்க்க,
ஆமாம் , டி தான் , இப்பொழுது கிளம்புங்கள் மேடம் என்று ஒருவழியாக அவளை வெளியே அனுப்பிவிட்டு , தன் சீட்டில் அமந்தவனுக்கு , என்னடா கீர்த்தி , இவள் இப்படியே இன்னும் 2முறை நேரில் வந்துவிட்டு போனால் என்றால் , ஒருவாரம் கூட தாக்கு பிடிக்கமாட்டேன் போலயே என்று இறுதியில் ஒரு முடிவிற்கு வந்தவனாக தன்னுடைய பள்ளி தோழிக்கு கால் செய்தான்.................................................
ஹாய் பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருந்தா கமெண்ட் பண்ணுங்க ஆர் இந்த FB Page லைக் பண்ணுங்க
ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் சண்டே போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......
Thankyou
இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI
No comments:
Post a Comment