Saturday, 20 February 2016

காதல் கவிதைகள் நீ !





Chapter 4

....................அதான் தெரியவில்ல்லை டா , பட் மெரூன் கலரில் பட்டு ஜரிகை புடவையில் அழகுதேவதையாக கோபமாக பார்த்தா டா , கவனிக்காம வந்து மோதிட்டு திட்டு வேறையானு பேசிட்டேன் , ஆனால்  அவள் முகத்தை பார்த்த பிறகு கோபபட முடியவில்லை டா , அப்படி ஒரு மென்மையான பார்வை டா , நோ சான்ஸ் மச்சி அதான் யாரா இருக்கும்ன்னு யோசிச்சேன் டா , சரி வா பார்த்துக்கலாம் , என்று தன் ஆர்கனைசிங் வொர்க் பார்க்க சென்று விட்டான் அவன்.

அங்கு விழா ஆரம்பித்திருந்தது.

டேய் எங்க இருந்திங்க ரெண்டு பேரும் , இங்க ஸ்டார்ட் பண்ணிட்டாங்க பாரு என்ற அருளின் கேள்விக்கு ,

இல்லை மச்சான்  , அங்கே நம்ம கீர்த்திக்கு ரொம்ப முக்கியமான  வொர்க் , அது வந்து ஒரு பொண்ணு  இவனை என்று இழுக்க.. , டேய் போதும் என்று கீர்த்தி கண்களால் கண்ணனை  சைகை செய்தான்.

ஹ்ம்ம் இல்ல அருள் , கொஞ்சம் லேட் , பட்  இன்ட்ரோ தரேன்னு ஒன் ஹவர் பேசுவாங்களே எல்லாம் ஓவரா அப்பாடா தப்பிச்சோம் நாம , தாங்க் காட் , என்ற கண்ணனின் பதிலில் வந்த சிரிப்பினை அடக்கி கொண்டான் கீர்த்தி வாசன்.

டேய் இந்த இயர் நம்ம சீனியர்ஸ் எப்படி செய்றாங்கன்னு பார்த்தா தான் நெக்ஸ்ட் இயர் நாம பண்ணமுடியும் சரியா என்று  அருள் கூற 

ஆமா கண்ணா அமைதியாக இருடா , நெக்ஸ்ட் என்னன்னு பார்க்கலாம்.

ஓகே கீர்த்தி , அப்படியே உன் ஆள் எங்கன்னு பாருடா , என்று கீர்த்தியின் காதை கடித்தான் கண்ணன்.

டேய் யாருன்னே தெரியவில்லை , அதுக்குள்ள ஆளா !, ஒழுங்கா ப்ரோக்ராம் பார்க்க விடு , அமைதியா இரு கண்ணா 

ஓகே ஓகே , அங்கே பாரு , நெக்ஸ்ட் நம்ம டிப்பார்ட்மெண்ட் தான் போல டா , பார்க்கலாம் ,நம்ம  கிளாஸ்மேட்ஸ் எப்படி இருக்காங்கன்னு என்று ஒரு வழியாக அமைதியானான் கண்ணன் 

மைக்கில் அடுத்தது கம்ப்யூட்டர் சைன்ஸ் டிப்பார்ட்மெண்ட் பெர்பார்ம்மென்ஸ் என்று அறிவிக்க ,  மேடையில் அவனை மோதியவளை பார்த்தவனுக்கு அட இவளும் நம்ம டிப்பார்ட்மெண்ட் தானா என்று மனதிற்குள் சிரித்து கொண்டான் கீர்த்தி வாசன்.

அங்கு மேடையில் குரூப் சாங் அவர்கள் பாடிகொண்டிருக்க , அவன் அவளையே பார்த்து தன் மனதினில் பதித்து கொண்டிருந்தான்.

டேய் கீர்த்தி அங்க பாரு , ஸ்டேஜில் அந்த மெரூன் டிரஸ் தான் உன்னை மோதியவளா என்ற கண்ணனின் குரலில் விழித்து, தெரியாதபோதே இவ்வளவு கேளி  , இன்னும் இவதான்னு சொல்லிவிட்டால் அவ்வளவு தான் , என்று மனதில் நினைத்து கொண்டு ,  இல்ல இல்ல டா , அவங்க இல்லை , கொஞ்சம் அமைதியா இருக்கியா நீ என்று அவனை அடக்கினான் கீர்த்தி.

அடுத்து நாம் தான் . கீர்த்தி , கண்ணா ரெடியா இருங்க என்று அருள் கூற , தன் மனதினை அடக்கி கொண்டு , பெர்பார்ம்மென்ஸ்க்கு ரெடி ஆகினான். 

ஓகே பிரண்ட்ஸ் , நெக்ஸ்ட் சேம் டிப்பார்ட்மெண்ட் பாய்ஸ் ப்ரோக்ராம் , என்று அறிவிக்க , வாழ்விற்கு படிப்பு என்பது வெறும் புத்தக அளவில் மட்டும் இல்லாமல் அறிவை வளர்க்கும் விதமாக இருக்கவேண்டும் என்ற கான்செப்ட்ட்டை வலிறுத்தி ப்ளே செய்த மைம் நிகழ்ச்சி , அனைவரையும் சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்தது.

மேடையில் அவனை பார்த்தவளுக்கு ஏனோ மனதில் ஒரு இன்பம் பொங்கியது. அவனுடைய ஆக்டிங் கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்  கவிதா.

ஹே பார்த்து டி வழியுது, அந்த மெரூன் ஷர்ட் தானே பார்த்துட்டு இருக்கிற  , கொஞ்சம் கேப் விடுறிங்களா மேடம் என்று அவளை இடைமறித்தது ப்ரியாவின் குரல் ,

ஹையோ ஸ்டார்ட் பண்ணிட்டியா நீ!, ப்ளீஸ் டி , நான் எல்லாரையும் தான் பார்க்குறேன் , என்று அவளை ஒருவாறாக அடக்கினாள் கவிதா.

விழாவில் பெஸ்ட் பெர்பார்ம்மென்ஸ் அவார்ட் என்று கீர்த்திவாசனின் டீமிற்கு அறிவிக்க , அவனுடைய பெயரை தனக்குள் பதித்து கொண்டாள் கவிதா.

ஒரு வழியாக ப்ரோக்ராம் முடிந்து கல்லூரியை விட்டு  கிளம்ப 5.30 ஆகிவிட்டது. மழைக்கலாம் என்பதால் கொஞ்சம் இருள் பரவ துவங்கிஇருந்தது. 

ஹே கவி , இதான் லாஸ்ட் பஸ் எனக்கு , பட் உன்னைய இங்கே தனியாக விட்டு போகவும் மனம் வரவில்லை , பேசாம என் கூட வந்துவிடு டுடே என்று கூறியவளை பார்த்து , அதெல்லாம் ஒன்றும் இல்லை , நீ கிளம்பு டி இப்ப , எனக்கு இன்னும் 5நிமிடத்தில் பஸ் வந்துவிடும் , நான் போய்விட்டு போன் பண்றேன் , என்று அவளை பஸ் ஏற்றி விட்டு தனியே நின்றவளுக்கு மனதில் கொஞ்சம் பயம் இருக்கதான் செய்தது.

பஸ் வந்துவிடும் என்று நின்றவளுக்கு அரைமணிநேரம் ஆகியும் வராதது கொஞ்சம் கொஞ்சமாக பயத்தை அதிகம் செய்தது.  நல்லா வேணும் எனக்கு , இவினிங் கூப்பிட வரவா என்று காலையில் கேட்ட தந்தையிடம் கூட , அதெல்லாம் வேண்டாம்ப்பா , நானே வந்துவிடுகிறேன் , தேவைபட்டால் போன் பண்ணுகிறேன் என்று தைரியமாக கூறினேன் அல்லவா இப்பொழுது பட வேண்டியவள் தான் என்று மனதினில் இருந்த பயத்தை கட்டுபடுத்தி கொண்டு தனியே பேசிகொண்டிருந்தாள்.

வேணும்னே இடித்து விட்டு , தவறே செய்யாத மாதிரி தைரியமாக பேசினிங்க , இப்போ உங்களுக்கே பயமா என்றவனின் குரலில் திரும்பியவளுக்கு அங்கே கீர்த்திவாசனை கண்டதும் ஒரு வித சந்தோசமும் , நிம்மதியும் உண்டாகியது. நாம் பயத்துடன் நிற்பது இவனுக்கு எப்படி தெரிந்தது , அனைவருக்கும் தெரிகிற மாறியா  இப்படி நிற்கிறோம் என்று தன்னையே நொந்து கொண்டாள்.

இல்லை அது வந்து... பஸ் வரவில்லை , கூட்டமும் இல்லையா அதான் கொஞ்சம் யோசனையாக இருந்தேன் , அண்ட் சாரி வேணும்னே இடிக்கவில்லை , தெரியாம'தான் , பட் அகைன் சாரி என்று தன் தவறை ஒத்துக்கொண்டாள் அவள்.

ஹ்ம்ம் ஓகே நோ ப்ராப்ளம்  , ஐ  யம்.. என்று தொடங்க போனவனை , கீர்த்தி வாசன் தானே என்று அவளது குரல் இடைமறித்தது . உங்களுக்கு எப்படி என்று அவன் யோசனையாக பார்க்க அதான் ஸ்டேஜ்லையே சொல்லிவிட்டார்களே, என புன்னகைத்தாள் அவள்.

ஒரு கணம் அவளது சிரிப்பினில் தடுமாறியவன் , ஒ ஓகே ஓகே , நீங்க ,

ஐ யம் கவிதா என்று தன்னை அறிமுகபடுத்தி கொண்டாள் அவள். அண்ட் உங்க மைம் தீம் சூப்பர் , என்று தன் பாராட்டினை தெரிவித்தாள். 

ஹ்ம்ம் எஸ் தாங்க்யூ ,அண்ட் உங்களோட சாங்கூட சூப்பர் , கன்க்ராட்ஸ் என்றவனை பார்த்து , சார் அது குரூப் சாங் , என்று சிரித்தவளிடம் , நான் உங்களை மட்டும் தானே கவனித்தேன் என்று பதில் கூறினான் அவன் ,

 ஹ்ம்ம் சாரி சார் என்ன சொன்னிங்க 

நத்திங் கவிதா, உங்க பஸ் எப்பொழுது வரும் என்று கேட்டேன் ,

ஹ்ம்ம் , தெரியவில்லை , பட் நீங்க எப்ப கிளம்புவீங்க , என்று அவள் பதற்றமாக கேட்க , எனக்கு இங்க பக்கதுல தான் , நீங்க பஸ் ஏறுற வரைக்கும் டைம் இருக்கு போதுமா மேடம் என்று அவன் சிரித்து கொண்டே கூறினான்.

ஹ்ம்ம் ரியலி தாங்க்ஸ் சார். 

ஓகே இனிமே நாம பிரண்ட்ஸ் நமக்குள்ள எதுக்கு இந்த சார் ,மேடம்லாம் , ஜஸ்ட் நேம் சொல்லுங்க போதும் கவிதா ஓகே வா, என்று அவர்கள் பேசிகொண்டிருக்க மணி 7.30 தொட்டுஇருந்தது.

ஒருவழியாக அவளது பஸ் வந்துவிட அவனிடம் நன்றி கூறிவிட்டு கிளம்பிவிட்டாள் அவள். அன்று இரவு வீட்டிற்கு வந்தவனுக்கு அவளது நினைவுகளே அதிகம் இருந்தது. தன்னுடைய மனைவி எவ்வாறு இருக்கவேண்டும் என்று இந்த நாள் வரை தான் கண்ட கனவுகள் அவள் மூலமாக நேரில் வந்தது போல் இருந்தது. 

அவளுடைய கண்கள் , அதிர்ந்து பேசாதவண்ணம் அவள் பேச்சு , அவளுடைய நீளமான கூந்தல், அந்த அழகான சிரிப்பு , அவள் பேசும்பொழுது அழகாக அசைந்த அவளது  காதணி என்று ஒவ்வொன்றுமே அவனுக்காகவே அவள் பிறந்திருகிறாளோ என்று என்ன வைத்தது .

பார்த்த ஒரு நாளில் லவ்வா , டேய் கீர்த்தி இதெல்லாம் ரொம்ப அதிகமாக இருக்கு, அவள் பாட்டுக்கு மாமா பையன் , அத்தை பையன்னு யாரையாவது காட்டினால் அப்புறம் நம் நிலைமை தேவதாஸ் ரேஞ்சுக்கு போய்விடும் , சோ இப்போதைக்கு இதை விட்டுவிட்டு , பொறுமையாக யோசிப்போம்  என்று தன்னையே கேளி செய்து கொண்டு படுக்க சென்றுவிட்டான் அவன்.

அங்கு வீடு வந்து சேர்ந்தவள் , தாய் தந்தையரிடம் பேசி சாப்பிட்டுவிட்டு வந்து படுத்தவளுக்கு இன்று நடந்தவைகள் நியாபகம் வந்தன. ச்சே அவனை போய் வெக்கமே இல்லாம மோதிருக்கோம் ,என்னதான் நினைத்து இருப்பான் நம்மளை பற்றி என்று தன்னையே திட்டி கொண்டாள் . 

அவனை மோதிய அந்த நொடியில் தன் மனது அதிகமாக படபடத்தது நியாபகம் வந்தது. இது வரையில் தன் வாழ்நாளில் இப்படி ஒரு படபடப்பு வந்ததிலேயே , ஆனாலும் அவள் படித்தது இருபாலர் பள்ளி என்பதால் ஆண் நண்பர்கள் இருந்தாலும் , இன்று கீர்த்தி வாசனை இடித்த பொழுது ஏற்பட்ட உணர்வு தனக்கே புதிதாக இருந்தது. 
எது எப்படியோ காலை அவனுக்கு நன்றி கூறவேண்டும் என்று தன் மனதினை கட்டுக்குள் கொண்டு வந்து உறங்கிவிட்டாள் அவள்..........




ஹாய் பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருந்தா கமெண்ட் பண்ணுங்க  ஆர் இந்த FB Page லைக் பண்ணுங்க 


ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் சண்டே  போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......
 ,

,

இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI










No comments:

Post a Comment