Sunday, 7 February 2016

காதல் கவிதைகள் நீ !


Chapter 2

.......சரி என்னவோ , உனக்காக இந்த ஒருமுறை பேசபோகிறேன் , ஆனால் அதற்குமேல் நீ பார்த்து கொள்ளவேண்டியதுதான் என்று அவளிடம் கூறிவிட்டு போன் வைத்தவளுக்கு அவனை எப்படி நாளை சந்திக்க போகிறோம் , எப்படி பேசபோகிறோம், நாளை நாள் எப்படி அமைய போகிறதோ தெரியவில்லை என்று உறங்கிவிட்டாள் அவள்.

அதிகாலையில் விழித்தவளுக்கு , இரவு அவனுடன் பேசிய வார்த்தைகளே மனதில் ஓடிகொண்டிருந்தது. என்னதான் கடந்த 3வருடங்களாக அவனை பிரிந்துவிட்ட போதிலும், அவனை பற்றி எண்ணாத நேரமில்லை. அவனுடன் பழகிய நாட்களை நினைத்து பார்த்தாலும் இறுதியாக அவனுடன் நடந்த பேச்சு வார்த்தையையும் சேர்த்தே நினைவிற்கு வந்தது. 


அன்று இறுதியாக அவன் கேட்ட அந்த வார்த்தைகள் இன்றும் மறக்க இயலவில்லை அவளால். ஆக, உனக்கு என்னிடம் இவ்வளவு தான் நம்பிக்கை அதானே என்று கோபமாக கேட்டவன்  , ஓகே இனி உனக்கு புரியவைத்தும் ஒன்றும் ஆகாது. நாம் பிரிந்துவிடலாம் என்று அவள் பதிலுக்கு கூட காத்திராமல் கிளம்பிவிட்டான் அங்கிருந்து. 


அதன் பிறகு வந்த நாட்கள் மிகவும் வேதனையாக இருந்தது அவளுக்கு. அவனை மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் அவள் பட்டபாடு அவளுக்கு மட்டுமே தெரியும்.ஏதோ தாய் ,தந்தையர் மீது வைத்து இருந்த அளவு கடந்த பாசமே அவளை நடமாட வைத்தது என்று கூட கூறலாம் . இவனால் மட்டும் எவ்வாறு இவ்வளவு இயல்பாக விலகமுடிந்தது  என்று கூட யோசித்து பார்த்துஇருக்கிறாள்  அவள் , சோ நாம் நினைத்த மாறி இவன் டைம் பாஸ்க்கு தான் நம்மிடம் அவ்வாறு பழகி நடித்து  இருப்பானோ என்று தன் மனதை தானே தேற்றிகொள்வாள். எது எப்படி இருந்து இருந்தாலும் அவளால் அவனை மறக்க முடியவில்லை என்பது மட்டுமே உண்மை. 


கடந்த 3வருடங்களாக நடேசன் கொண்டு வந்த வரன்களுக்கெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் உங்களுடன் இருக்க ஆசைபடுகிறேன்  அப்பா, இந்த பையனோட வேலை சரிஇல்லை அது இது என்று ஏதேதோ கூறி சமாளித்து வந்தாள். ஆனால் இதற்கு இது மட்டுமே முடிவாகதே, என்னதான் செய்யபோகிறமோ என்று நினைத்தே பல நாட்கள் தூக்கமின்றி தவித்தும்  இருக்கிறாள் அவள். ஆனால் இது எல்லாமே பெற்றவர்களுக்கு சிறிதும் சந்தேகம் வராமல் கவனமாக பார்த்து கொள்வாள்.


இந்த நிலையில் தான் , பாரதி அவனிடம் போய் தனக்காக பேச சொன்னபோது , உதட்டளவில் வேண்டாம் என்று அவளிடம் மறுத்தாலும் , மனது அவனை பார்க்க போகிறோம் என்று மிகவும் சந்தோஷபட்டதை அவளால் உணர முடிந்தது. ச்சே இது மட்டும் அவனுக்கு தெரிந்தால் எவ்வளவு கேவலமாக நினைப்பான் , எப்படியும் அவன் முன்பு மட்டும் காட்டி விட கூடாது என்று உறுதியாக மனதினில் நினைத்து கொண்டே அவனை பார்க்க தயாரானால்.


நீலவண்ண கலரில்  வெள்ளை நிற பூக்கள் தெளித்தது போல் அழகிய  குந்தன் வேலைப்பாடுடன் கூடிய சுரிதாரில் தேவதையாக காட்சி அளித்த்தாள் கவிதா , இடுப்பு வரை நீண்ட கூந்தலை தளர பின்னி ஜாதி 'பூவினை  மாலையாக சூடி , கிளம்பி கீழே வந்தவளை பார்த்த நடேசனுக்கோ அட இது நம்ம பொண்ணு தானா என்று கூட தோன்றியது. ஹே! லக்ஷ்மி இங்கே சீக்கிரம் வந்து உன் பொண்ணை பாரு என்று தன் மனைவியை ஆர்வம் பொங்க அழைத்தார் நடேசன்.


அப்பா ஏன் , நீங்க வேற , காலையிலே கேலி பண்ண நான்தான் கிடைத்தேனா , என்று வெக்கத்துடன் பதில் கூறியவளை விசித்திரமாக நோக்கினா ர் அவர்.
என்ன்னங்க சத்தம் , சமைக்கும் போது கத்தாவிட்டால் என்ன என்று அலுத்து கொண்டு சமையல் அறையில் இருந்து வெளியில் வந்தவளுக்கு கவிதாவின் தோற்றம் வியப்பாக இருந்தது. அடடே கண்ணு! என்ன அதிசயம் குந்தன் சுடிதார் , பூ என்று ஒரே அமர்க்களமாக இருக்கிறதே \என்று வினவினாள்  லக்ஷ்மி .

அம்மா நீங்களுமா!, இப்பொழுது தான் அப்பா ஸ்டார்ட் பண்ணாங்க , இப்ப நீங்களா போங்கம்மா என தன் முகமாற்றத்தை மறக்க முயன்றாள் கவிதா.
அட இல்ல கண்ணு இந்த 3 வருடமாக நீ கடமைக்கு கிளம்புகிற மாதிரி இருக்கும் , இன்று தான் காலேஜ் படிக்கும் போது பார்த்த பொண்ணு மாறி பிரகாசமா தோன்றுகிறாய், என்னடா விஷயம் என்று மெய்யான ஆச்சர்யத்துடன்  வினவிய தாயினை பார்த்து முறுவலித்தாள்  கவிதா.

லக்ஷ்மி பேசிட்டே இருக்காம போய் சுற்றிபோடு ,

ஆமாங்க நான் மறந்தே போயிட்டேன் , இதோ 2நிமிஷத்துல வந்துட்டேன் கண்ணு

ச்சே இன்று என்ன இவ்வளவு வித்தியாசம் தெரிகிறதா என மனதுக்குள் நினைத்து கொண்டவள் , இன்று அவனை பார்க்க போகிற காரணத்தினால் பார்த்து பார்த்து கிளம்பியது நியாபகம் வந்தது. இவ்வளவு நாள் வெறும் கடமைக்கு கிளம்பி அவசர அவசரமாக ஆபீஸ்க்கு ஓடியதும்  நினைவிற்கு வந்தது.

என்னடா இன்று சீக்கிரமாக கிளம்புகிறாய் என்ற நடேசனின் குரலில் நினைவிற்கு வந்தவள், இல்லப்பா இன்று பிரண்ட்ஸ் மீட் பண்ணவேண்டும் சோ, பர்மிசன் போட்டு இருக்கேன்பா அதான் ,

அம்மா சீக்கிரம் வாங்க கிளம்பனும் , என்று அவசர அவசரமாக எதையோ உண்டுவிட்டு விரைந்தவளை ஒரு வித ஆச்சர்யத்துடன் பார்த்துகொண்டு இருந்தனர்  அவர்கள் .


அலுவலகம் வந்தவனுக்கு மனதில் ஆர்வம் தொற்றி  கொண்டது இன்றைய  நாளை எண்ணி.

மே ஐ கம் இன் சார்

யா, எஸ் கம் இன் வாசவி

குட்மார்னிங் சார் , இன்றைய வொர்க்ஸ் ஸ்டேட்டேஸ் என்று தொடர போனவளை , இல்ல வாசவி இன்று 10மணிக்கு இம்பார்டன்ட் வொர்க் இருக்கு , சோ மற்ற ப்ளான்ஸ் டைம் சேஞ்ஜ் பண்ணிகோங்க ஓகே . தென் வேற ஏதும் சொல்லணுமா , ஆர் அதர்வைஸ் நீங்க போகலாம்.

சார் கேட்டா தப்பா நினைக்கமாட்டிங்களே, இன்று உங்களுடையபிறந்தநாளா மிகவும் சந்தோசமா ,இருக்கமாறி இருக்கிங்க , இவ்வளவு நாட்களில் நான் இப்படி பார்த்தது இல்லையே அதான் சார் கேட்டேன் சாரி.

ஹ்ம் வாசவி , அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே , நீங்க கிளம்பலாம் என்று புன்னைகயுடன் கூறிவிட்டு தன் லாப்டாப்னில் கவனத்தை பதித்தான்.

இவள் வருகை தன்னை இவ்வளவு பாதிக்கும் என்று அவன் எண்ணவில்லை. அவளை மறந்துவிட்டதாக நினைத்தது எல்லாம் என்னை நானே ஏமாற்றி கொண்டதா என்று தன்னையே கேட்டு கொண்டான் .

ஹலோ சார் , கவிதானு ஒருத்தவங்க மீட் பண்ண வந்து இருக்காங்க ,பட் அப்பாயிண்ட்மெண்ட் ஏதும் வாங்கவில்லை சார் , அதான் ,

நோ மேம் , அவங்களை அனுப்புங்க நான் பார்த்து கொள்கிறேன்

எஸ் ஓகே  சார் , மேம் நீங்க போகலாம்

ஓகே தாங்கக்யூ

மே ஐ  கம் இன்

எஸ் கம் , என்று கூறி நிமிர்ந்து அவளை பார்த்தவனுக்கு இமைகளை கூட சிமிட்ட தோணவில்லை.

நான்  கவி... என்று கூறியும் அவன் பார்வையின் அர்த்தம் அவளை நோக்கியே இருக்கிறது என்று  புரிய  , ஹலோ சாரி என்று சத்தமாக அவளது  குரலில் விழித்தவன் ,  ச்சே ஐ நீட் டு கண்ட்ரோல் மைஸெல்ப் என மனதில் நினைத்து கொண்டு , எஸ் டேக் யுவர் சீட் , மே இ நோ ஹூஸ் திஸ் என்று வேண்டும் என்றே வினவினான்.

ஹலோ என்னை நியாபகம் இல்லையா ,

நான் நியாபகம்வெச்சுக்கிற லெவல்க்கு நீங்க யாருன்னு தெரியவில்லை , ஐ ஹாவ் மோர் வொர்க்ஸ் , சோ பாஸ்ட்டா சொன்னிங்கனா ஈசியா இருக்கும் என்று வேண்டும் என்றே அலட்சியமாக பேசினான்/

ஹ்ம்ம், நான் கவிதா 3இயர்ஸ்க்கு பிபோர் உங்க கிளாஸ்மேட்.

ஓகே , மிஸ்  ..... ஹ்ம்ம் , சாரி மிஸ் ஆர்   மிசஸ் கவிதா ,, அதுக்கு இப்ப என்ன , என்று மிசஸ் என்பதில் அழுத்தம் கொடுத்து பேசியவனை பார்த்து முறைத்து கொண்டே .

,ஹலோ மிஸ் ஒன்லி , உங்கள்கிட்ட என் ப்ர்ண்ட்  பாரதி பற்றி பேசணும்.

உங்களையே யாருன்னு தெரியவில்லை , இதுல உங்க பிரன்ட் பற்றி தெரிஞ்சுகிட்டு நான் என்ன செய்யபோகிறேன்

என்னை பற்றி உங்களுக்கு தெரியனும்னு நான் இங்க வரவில்லை . ஓகே நான் சொல்லவறதை கேக்குற பிளான்ல இருந்தா சொல்லுங்க , பேசலாம் ஆர் எல்ஸ் நான் கிளம்ப வேண்டியது தான் .

ஓகே சொல்லுங்க என்ன அவங்களுக்கு,

ஹ்ம்ம் அவள் உங்களை லவ் பண்ணிட்டு இருக்கா காலேஜ் டேஸ்ல இருந்து,

வாட் ,என அவன் அதிர

இல்ல அவள்  உங்களை லவ் பண்ணிருக்கா காலேஜ் டேஸ்ல , அண்ட் நீங்களும் அவளை லவ் பண்ணமாறி பார்த்து இருக்கீங்க  சோ அதை கன்பார்ம் பண்ண தான் வந்து இருக்கேன் , அவளோதான் சார் விஷயம் , நீங்க எஸ்னு பாஸ்ட்டா சொல்லிட்டீங்கனா நான் கிளம்ப வேண்டியது தான்.

நான் யாரை லவ் பண்ணேன்னு உங்களுக்கு தெரியாதா என்று அவன், அவள் முகத்தினை பார்க்க

இல்ல அது வந்து ,

என்ன சொல்லவேண்டியது தானே உங்க பிரண்ட்ட, அதை விட்டு என்னிடம் கன்போர்ம் பண்ண கிளம்பியாச்சு என திமிறாக அவன் கூறவும் ,

இல்லை , நீங்க லவ் பண்ணவங்ககிட்டயே உண்மையை மறைச்சவங்க , அதை பற்றி கேட்டா , உனக்கு புரியவைக்க முடியாதுன்னு கிளம்பிடுவீங்க , சோ இதே மாறி அவளிடமும் எதும் பன்னிருபிங்கலோன்னு சின்ன டவுட் அவளோதான் சார்

ஏய் , என கோபமாக டேபிளில் கோபத்தை காட்டியவன் , ஹ்ம்ம் எஸ் யூ  ஆர் கரெக்ட் . 10கிஸ் , 20ஹக் அப்படின்னு நிறைய விஷயம் பண்ணிருக்கேன் , பட் அதெல்லாம் உன் ப்ர்ண்ட்ட பண்ண மாறி நியாபகம் இல்லை, சோ எதும் நியாபகம் வந்தால் நான் கால் பண்ணி சொல்கிறேன் இப்ப நீங்க கிளம்பலாம் ஓகே என்று தெனாவட்டாக கூறினான்.

என்னது கிஸ் , ஹக்கா , ச்ச , உங்க பெர்சனல் பற்றி எனக்கு ஒன்றும் இல்லை , நீங்க யோசிச்சு பொறுமையா இவக்கிட்ட என்ன பண்ணேன்னு சொல்லுங்க, இப்ப  நான் கிளம்புகிறேன் bye , என்று ஆத்திரமாக கூறிவிட்டு கிளம்பிவிட்டாள் கவிதா......


ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......
 ,

,

இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI









No comments:

Post a Comment