Sunday, 14 February 2016


காதல் கவிதைகள் நீ !



Chapter 3


................என்னது கிஸ் , ஹக்கா , ச்ச , உங்க பெர்சனல் பற்றி எனக்கு ஒன்றும் இல்லை , நீங்க யோசிச்சு பொறுமையா இவக்கிட்ட என்ன பண்ணேன்னு சொல்லுங்க, இப்ப  நான் கிளம்புகிறேன் bye , என்று ஆத்திரமாக கூறிவிட்டு கிளம்பிவிட்டாள் கவிதா.

அவனுடைய அந்த கடைசி வார்த்தைகளில் கண்களில் தேங்கிய கண்ணீரை கட்டுபடுத்திகொண்டு கிளம்பியவளால் ஆபீஸ்சிற்கு இன்று செல்ல முடியும் என்று தோன்றவில்லை. அங்கு சென்று வேதைனையை வெளிகாட்ட முடியாமல் தவிப்பதற்கு பதிலாக வீட்டிற்கு சென்று விடுவது நல்லது என்று அலுவலக தோழியிடம் லீவ் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

என்னடா ஆபீஸ்சிற்கு போகவில்லையா , ஏதும் ப்ராப்ளமா கவிதா , என்னாச்சுடா , என்றவளுக்கு கவிதாவின் முகம் சரிஇல்லை என்று தெளிவாக  காட்டியது

தாயின் குரலில் தன் முகமாற்றத்தை மறைத்து, இல்லைம்மா, பிரண்ட்ஸ் மீட் பண்ணியதில் கொஞ்சம் அசதியா இருக்குதுங்கம்மா, அதான் லீவ் சொல்லிவிட்டு வந்துட்டேன் , நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்ம்மா , 

சரிடா நீ போ , நான் மதிய சாப்பாடு ரெடி செய்து விட்டு எழுப்புகிறேன்டா ,

சரிங்கம்மா , என்று தாயினை  ஓரளவு சமாதானம்  செய்து விட்டு தன் படுக்கையில் வந்து விழுந்தவளுக்கு , அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை. இவனை பார்க்க ஆசையாக கிளம்பி சென்றதென்ன , இப்பொழுது அதற்கு மாறாக அவன் பேசிய அந்த வார்த்தைகளை எண்ணி இவ்வாறு அழுவதென்ன என்று  தன்னையே நொந்து கொண்டாள்.

அவனை பிரிந்த அந்த கடைசி நாளில் கூட அவ்வளவு எளிதாக பிரிவு இருக்கும் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்கவில்லை. ஏதோ அவனிடம் விளக்கம் கேட்க வந்தவளிடம் இனியும் உனக்கு புரியவைத்து பயனில்லை என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டு கிளம்புவான் என அவள் சற்றும் எதிர்பார்கவில்லை.

அதிலும் இன்று கூட இருவரும் ஒரே வண்ணத்தில் உடை அணிந்துஇருந்தது அவர்களுடைய மன ஒற்றுமையை காட்டுவதாக எண்ணி சந்தோசபட்டு கொண்டிருந்தவளை அவன் கடைசியாக பேசிய வார்த்தைகள் மிகவும் துன்புறுத்தியது. எவ்வளவு முயன்றும் கல்லுரி நாட்களுக்கு தன் மனம் செல்வதை கட்டுபடுத்த முடியவில்லை.

அன்று ப்ரெஷ்சர்ஸ் டே , இரண்டாம் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல் வருட மாணவர்களை வரவேற்கும் நாள். அன்று தான் அவள் முதன்முதலில் அவனை சந்தித்தது. 

ஹே கவி  சீக்கிரம் டி , நமக்கு பிரசென்டேசன்க்கு டைம் ஆகுது ,

ஹ்ம்ம் இதோ பிரியா  ரெடி டி வா கிளம்பலாம் என்று அவசர அவரசரமாக உடைகளை சரிசெய்து கொண்டு ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியில் வந்தவளை எதிர்பார்காத நேரத்தில் நேருக்கு நேர் மோதினான் அவன் கீர்த்திவாசன்.

ஒரு நிமிடம் தடுமாறியவள் , ஹலோ சார் நேரா பார்த்து வரதெரியாதா என்று கோபமாக வினவியவளை . ஹலோ எக்ஸ்கியுஸ் மீ!, நான் சரியாகதான் வருகிறேன் , நீங்க இவ்ளோ பாஸ்ட்ட்டா வந்து மோதிவிட்டு என்னிடமேவா என்று சத்தமாக கூறியவனால் ,அவள் முகம் பதற்றம் அடைவதை பார்த்து விட்டு அமைதியானான். பர்ஸ்ட் வெளியில் பார்த்து நடங்க ஓகே என்று வேகமாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான் அவன் .

என்னடி இங்க சத்தம் , ஹே கவி வாட் ஹாப்பெண்ட் டி ,என்று அவளை பிடித்து பிரியா உழுக்க , ஹ்ம்ம் என்னடி கேட்ட என்று நிகழ் காலத்திற்கு வந்தாள் கவிதா . ஹ்ம்ம் சாப்பாட்டுல  சால்ட் போடா வில்லையும் , அதான் உன்னை ஸ்டேஜ்க்கு கூப்பிடுறாங்க போறியா டி என்று கேலியாக வினைவியவளை பார்த்து என்ன என்னைய  கூப்பிடுறாங்களா  , எங்கடி என்று பதற்றமாக கேட்க , பிரியா சிரித்து கொண்டு நிற்பதை பார்த்து போடி உன்னைலாம் அடி என்று விளையாட்டாக கையை தூக்கி மிரட்டினால் கவிதா.

என்னைய அடிக்கிறது இருக்கட்டும் யார்ட்ட  டி பேசிக்கிட்டு இருந்த , சத்தம் கேட்டுச்சே டி,

அது இல்லடி , யாருன்னு தெரியவில்லை , பட் பாஸ்ட்டா மோதிட்டாங்க , அதான் கோபமாக பேசினேன் டி, ஆனால் தப்பு என் மேல தான் டி,அதான்.

என்னது மோதிட்டியா , வாவ் அப்புறம் என்ன டி ஆச்சு அவன் உன்னை அப்படியே பிடிச்சு, ஹ்ம்ம்...

ஹே மாடு , போதும்டி ஸ்டாப் பண்ணிக்கோ , அதெல்லாம் ஒண்ணும் நடக்கவில்லை , அவன் என்னை பார்த்து திட்டிட்டு தான் போறான் ,இப்ப கிளம்புறின்களா மேடம்  ஆளைபாரு உடனே வந்துட்டா , டைம் ஆயிட்டு டி , இப்ப பாஸ்ட்டா வரியா இல்லையா நீ!

ஹே ஓகே ஓகே டி , அவனை அப்புறம் பார்த்துக்கலாம் வா , அங்க நம்ம பிரண்ட்ஸ் வெயிட்டிங் பார் அஸ் ஒன்லி டி , வா என்று கிளம்பி விட்டனர்.

டேய் கீர்த்தி , என்னடா யோசனை பண்ணிட்ருக்க, அங்க பாரு அருள் நமக்காக வெயிட் பண்றான், வா என்ற கண்ணனின் குரலில் விழித்தவன் , இல்லடா கண்ணா இப்ப அங்க ஒரு பொண்ணு யாருன்னு தெரியவில்லை டா  , பட் பாஸ்ட்டா இடிச்சுட்டேன் அதான் , பாவம் திட்டிட்டு வேற வந்துட்டேன் அதான் 

என்னடா பொண்ணா , எப்படி மச்சான் இருந்தாள் , யாருடா அது 

அதான் தெரியவில்ல்லை டா , பட் மெரூன் கலரில் பட்டு ஜரிகை புடவையில் அழகுதேவதையாக கோபமாக பார்த்தா டா , கவனிக்காம வந்து மோதிட்டு திட்டு வேறையானு பேசிட்டேன் , ஆனால்  அவள் முகத்தை பார்த்த பிறகு கோபபட முடியவில்லை டா , அப்படி ஒரு மென்மையான பார்வை டா , நோ சான்ஸ் மச்சி அதான் யாரா இருக்கும்ன்னு யோசிச்சேன் டா , சரி வா பார்த்துக்கலாம் , என்று தன் ஆர்கனைசிங் வொர்க் பார்க்க சென்று விட்டான் அவன்................


ஹாய் பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்டரெஸ்ட்ட்டா இருந்தா கமெண்ட் பண்ணுங்க  ஆர் இந்த FB Page லைக் பண்ணுங்க https://www.facebook.com/Kadhal-Kavidhaigal-Nee-1738330329723744/      

Thankyou 


ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் சண்டே  போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......
 ,

,

இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI




No comments:

Post a Comment