Sunday, 13 March 2016

காதல் கவிதைகள் நீ !





Chapter 7



................அன்று அப்படி இருந்த கீர்த்தியா இன்று தன்னை யார் என்று கூட தெரியவில்லை என கூறுகிறான் , அந்த அளவு அவனை காயபடுத்தி விட்டோமா என்று நிகழ் காலத்திற்கு வந்தவளால் அழுகையை அடக்க முடியவில்லை. மேஜை மீது இருந்த அவனது போட்டோவினை பார்த்தவளுக்கு  அவன் மடியில் படுத்து அழவேண்டும் என்று தோன்றியது.

கவிதா சாப்பாடு ரெடி , சாப்பிட வாடா என்ற தாயின் குரலில் , தன் கவனத்தை நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தவள் அவசர அவசரமாக எழுந்து தன் சோகம் தெரியாதவாறு அழுந்த  முகம் கழுவி , இதோ வந்து விட்டேன்மா என்று தாயிடம் விரைந்தாள். 

அம்மா , மார்னிங் சாப்பிட்டதே ஏதோ பண்ணுது, அண்ட் இன்னும் கொஞ்சம் தலைவலி இருக்கு. சோ நான் சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்மா ப்ளீஸ் , என சிறு பிள்ளையினை போல் கெஞ்சும் கவியை பார்த்தவள் , சரிடா நீ இப்பொழுது சென்று தூங்கு ,  இவினிங் நல்ல சுக்கு மல்லி காபி போட்டு தரேன் , தலைவலி பறந்து போய்விடும் சரிதானா என்று செல்லமாக தன் மகளின் கன்னத்தினை வருடினாள்.

அம்மா , சொன்னா ஓகே தான் என்று தன் அழுகையினை மனதிற்குள் அடக்கி கொண்டு , அவளிடம் இயல்பாக பேசிவிட்டு , தன் அறைக்குள் வந்தவளுக்கு , கீர்த்தியின் நியாபகங்கள் மறுபடியும் விடாமல் வந்து சென்றது.

அங்கோ , கீர்த்திக்கு அவள் கண் கலங்க கோபமாக கிளம்பி சென்ற பிறகு , வேலையே ஓடவில்லை. ஒரு காலத்தில் அவளை பார்த்து பார்த்து கவனித்தவன் , இன்று அவள் அழுவதற்கு நாமே காரணம் ஆகி விட்டோமே என்று தன் மீதே அதிக கோபம் கொண்டான்.

இந்த 3வருடங்களாக அவளை பார்க்கவில்லையே தவிர , அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று அவளை பற்றிய சிறு விவரங்களை கூட  அவன் சேகரிக்க தவறவில்லை. ஒரு வருடத்திருக்கு முன்பாக அவள் வேலை மாற்றியது முதல்,  கடந்த மாதம் உறவினர் திருமணம் என்று சென்று விட்டு ஒரு வாரம் கழித்து அவள் வீடு வந்தவரை அனைத்துமே தெரிந்து வைத்திருந்தான்.  

ஏன்என்றால் எப்படியும் ஒரு நாள் தன் தவறு உணர்ந்து வருவாள், அன்று பார்த்து கொள்ளலாம் என்று நம்பிக்கையுடன்  இருந்தான். அண்ட் அவள் இல்லாத ஒரு வாழ்க்கையினை அவன் நினைத்தும் பார்த்ததும்  இல்லை.

அன்று அவளை பிரிந்த கடைசி நாள் கூட , அவள் நம்பிக்கை இல்லாமல் பேசியது  அவனை அதிக கோபப்படுத்தியது , திருமண வாழ்விற்கு நம்பிக்கை என்ற ஒன்று  மிகவும் முக்கியமானது , அதுவே இல்லாமலா இவள் இவ்வளவு நாள் நம்மிடம் பழகினால் என்று ஆத்திரமும் வர ,உன்னிடம் பேசி பயன் இல்லை என்று அவளிடம் இருந்து விலகி வந்ததே . 

நம்பிக்கையே இல்லாமல் எப்படிதான் இவள்  என்னை லவ் செய்தால் , என்று ஒருவாரம் அவள் மீது அளவு கடந்த கோபத்துடன் இருந்தவன் , பிறகு தான் ஒரு முடிவிற்கு வந்திருந்தான் . நண்பர்களாக  பழகிய நாட்களில் இவள் கேட்டு இருந்தால் கூட விளக்கம் கொடுக்கலாம், ஆனால் இருவரும் தங்களது வாழ்கையே மற்றவர் தான் என்று நினைத்து கொண்டிருக்கும் பொழுது இப்படி நடந்து கொண்டதே அவனை ஆச்சர்ய பட  வைத்தது . 

பட் இன்றைக்கு அவளுக்கு விட்டு கொடுத்து புரியவைத்தால் கூட , வாழ்வு அதனுடன் முடிய போவதில்லையே, திருமணம் என்று ஆகிவிட்டால் ஆயிரம் விஷயம் இருக்கும் , இருவரும் அனுசரித்து போகவேண்டிய அளவிற்கு ஒவ்வொன்றும் அமையும்   , ஆனால் இவள் இப்படி நம்பிக்கையே இல்லாமல் இருந்தால் எப்படி நிம்மதியாக வாழ முடியும் , சோ அவளுடைய தவறை உணர்ந்து அவளாக வந்தால் மட்டுமே வாழ்கை நன்றாக இருக்கும் என்று இன்று வரை அவளுக்காக காத்திருக்கிறான்.

 இன்று அவளை பார்த்த பொழுது கூட ஒருகணம் அனைத்துமே மறந்து போக , அவள் அவனுடைய கவி என்ற எண்ணமே முதலில் தோன்றியது. ஆனால் அவள் நேற்று இரவு பேசும் பொழுது தன் தோழிக்காக தான் வருகிறேன் என்று திமிறாக கூறியது நியாபகம் வர , முகத்தினில் வராத கோபத்தினை இழுத்து பிடித்து வரவழைத்து கொண்டு அவளிடம் வேண்டும் என்றே அலட்சியமாக பேசினான்.  ஆனால் இப்பொழுது அதற்காக வருத்தபடுபவனும் அவனே.


சார் , மே ஐ கம் இன் , என்ற செக்ரடரி வாசவியின் குரலில் , விழித்தவன் எஸ் கம் இன் , என்று கவிதாவினை பற்றிய எண்ணங்களை தற்காலிகமாக ஒதுக்கி விட்டு வேலையினை கவனிக்க துவங்கினான்.

அங்கு கவிதா , தாயினை சமாளித்து விட்டு வந்து கட்டிலில் விழுந்தவளுக்கு கீர்த்தியை ஆழமாக காதலிக்க துவங்கிய நாட்கள் நினைவலைகளாக வந்தது. அன்று தன் உயிர் தோழி ப்ரியாவிற்கு நடந்த துன்பதினில் தான் அதிகமாக அழுததை பார்த்து பொறுத்து கொள்ள முடியாமல் கீர்த்தி அதிக சிரத்தையுடன் அதை செய்தது யார் என்று கண்டு பிடித்து அவளை அவன் சந்தோஷ படவைத்த நாட்கள்  ஒவ்வொன்றாக நினைவிற்கு வந்தன.

ப்ரியா, தாய் இல்லாமல் , தந்தையும் இரண்டாம் வருட படிப்பின் பொழுது குடும்ப கஷ்டம் காரணமாக வெளிநாடு செல்ல ,தன் உயிர் தோழி கவிதா வீட்டினில் தங்கி கல்லுரி படிப்பினை தொடர்ந்தாள். என்னதான் அடுத்தவர் வீட்டில் தங்கவைக்க ப்ரியாவின் தந்தைக்கு மனம் இல்லை என்றாலும் , கவிதாவின் தாய் தந்தையர் கொடுத்த நம்பிக்கையின் பேரில் அவளை அங்கே தங்க அனுமதிருந்தார். சோ  கவிதா , ப்ரியா இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்தனர்.

ஹே! ப்ரியா பாஸ்ட் டி , டைம் ஆகுது பார் , இன்னும் கிளம்புறியா , என்று வண்டியினை ஸ்டார்ட் செய்து கொண்டு அவசர படுத்த, இதோ வந்துட்டேன் , என்று அவசர அவசரமாக வந்தாள்.

ஏய் இவ்வளவு நேரமா நீ கிளம்ப , சீக்கிரம் போகணும் ஏறுடி ,

ஆமா , ஆமா சீக்கிரம் போய் தானே ஆகனும் , இல்லையென்றால் இந்த ஜுலியெட் பார்க்கமுடியாமல் அங்கே ரோமியோ தவிச்சு போய்விட மாட்டார் , கிளப்புங்க  மேடம் என்று ப்ரியா கிண்டலடிக்க , 

ஏய் பார்த்து டி , அம்மா அப்பா காதுல விழபோகுது உன்னைலாம் , இருடி அப்புறம் வெச்சுகிறேன்..

ச்ச , என்னை வெச்சு என்ன பண்ண போற நீ , இதை மட்டும் கீர்த்தி கேட்டுஇருக்கவேண்டும் , அவ்வளவு தான்  ஹா ஹா  என்று சிரிக்க 

ஹே , வாலு  நீ  மட்டும் இப்ப வழக்கமாக கேக்குற மாதிரி மன்னிப்பு கேட்கவில்லை , இப்படியே தள்ளி விட்டு நான் பாட்டுக்கு போய் கொண்டே இருப்பேன் , அப்புறம் உன் இஷ்டம் என்று விளையாட்டாக மிரட்ட 

ஐயோ , நீ செய்தாலும் செய்வ டி , மன்னியுங்கள் தாயே!, மன்னியுங்கள் தாயே! என்று கூறி கைகூப்ப , ஹ்ம் அந்த பயம் இருக்கணும் என்று சிரித்து கொண்டே கல்லூரிக்கு விரைந்தனர்.................



ஹாய் பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருந்தா கமெண்ட் பண்ணுங்க  ஆர் இந்த FB Page லைக் பண்ணுங்க 


ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் சண்டே  போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......


Thankyou 



இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI













No comments:

Post a Comment