Saturday, 5 March 2016

காதல் கவிதைகள் நீ !



Chapter 6

..............அவனுடைய அணைப்பில் மெய் மறந்தவளை , ஒரு நிமிடத்திற்கு பிறகு விடுவித்தான் அவன், இப்போ நீ சொல்லு நீயும் என்னை காதலிக்குற தானே , என்று அவள் முகத்தினை தன்  கைகளில் ஏந்தி கொண்டு வினவினான்  அவன் கீர்த்திவாசன்,  அவள் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது.


பதற்றத்தில் விழித்தவன் , ஹோ , இவ்வளவு நேரம் நாம் கண்டது கனவு தானா!, எவ்வளவு இயல்பாக இருந்தது என்று கடிகாரத்தினை  பார்த்தவன் , மணி 4.30 என்று காட்டியது, அட! பகல் கனவு பலிக்கும் என்று சொல்றாங்க , நடந்தால் நல்லாதான் இருக்கும் , ஆனாலும்  , கனவில் வந்த மாதிரி நேரில் நடந்தால் , அய்யோ! அவளிடம் நம்மால்  அடி வாங்க முடியாது, என்று மனதினில் சிரித்து கொண்டான்.  எப்படியோ இன்று கவியிடம்  எப்படியாவது தன் காதலை தெரிவித்து விட வேண்டும் என்று உறுதி கொண்டான்.

இன்று விடுமுறை முடிந்து , எப்படியும் நாளை நேரில் பார்த்து விடுவோம் என்று நாள் முழுதும் அவளை பற்றி எண்ணி கொண்டிருந்தது தான் இன்றைய கனவிற்கு காரணம் என்று சிந்தித்து கொண்டிருந்தவன் , நம் கனவில் சோனியா கூட வந்தாலே , இது எப்படி என்று நினைத்து பார்க்க அதற்க்கான விடையும் கிடைத்தது . காலையில் அம்மாவுடன் பேசிகொண்டிருந்த பொழுது , சோனியாவின் படிப்பு பற்றி பேசிகொண்டிருந்ததும் , அதற்கு தாம் , நம்ம வாண்டுக்கு படிப்பு முடிந்ததும் அவளுக்கு நல்ல  மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று நினைத்ததும் நியாபகம் வந்தது . 

ஹ்ம்ம் இப்படியே யோசித்து கொண்டிருந்தால் அவ்வளவு தான், அப்புறம் காலேஜ் போய் தான் தூங்க வேண்டி வரும் என்று தன் கனவு பற்றிய எண்ணங்களை ஒதுக்கி விட்டு  , தன் அன்றாட யோகா பயிற்சியினை தொடங்கினான்.

அங்கு , அம்மா! சீக்கிரம் வாங்க , இன்று விடுமுறை முடிந்து போகிறேன்லமா , ஸோ கோவிலுக்கு போய்விட்டு தான் கிளம்பணும், பாஸ்ட்ட்டா வாங்க , என்று அவசர படுத்தி கொண்டிருந்தால் கவிதா , இன்று எப்படியும் அவனிடம்  தன் மன எண்ணங்களை கூறி விட வேண்டும் , அப்பப்பா இந்த ஒரு வாரம் அவனை பார்க்காமல் நாம் பட்ட பாடு கடவுளுக்கு தான் வெளிச்சம் , இனியும் இதை தாமதிக்க கூடாது என்று மனதினில் நினைத்து கொண்டாள் . 

மஞ்சள் நிற சுரிதாரில் , நீலவண்ண பூக்கள் தெளித்து போல் உடை அணிந்து , அவள் சூடிய ஒற்றை மஞ்சள் நிற'ரோஜா அவளை ஒரு அழகு தேவதையாக காட்டியது. 

அவசர அவசரமாக தன் இஷ்ட தெய்வமான பிள்ளையார் கோவிலுக்கு சென்றவள் கடவுளிடம் , இன்று அவனிடம் தன் காதலை கூறபோவது பற்றியும் , அவனை தன் வாழ்கையில் இருந்து பிரித்து விடாதே என்றும்  மனமார வேண்டிகொண்டாள். 

வகுப்பறையில் ஹாய் கவி , விடுமுறை எல்லாம் எப்படி போனது , என்னை பற்றி நினைத்தாயா , இல்லையா என்ற பிரியாவின் கேள்வியை கூட கவனிக்காமல்  , அவளது கண்கள் கீர்த்தியினையே தேடிகொண்டிருந்தது.  தூரத்தில் அவன் வருகையினை பார்த்தவளுக்கு மனது லேசாக பறக்க தொடங்கியது.  

இள மஞ்சள் வண்ண ஷிர்ட்டும் , நீல வண்ண ஜீனும் அவனுக்கு அழகாக பொருந்திஇருந்தது , அது எப்படி இருவரும் ஒரே வண்ண உடையினை ஒன்றாக இயல்பாக அணிகிறோம் என்று அவளுக்கே வியப்பாக இருந்தது. இது தான் மன பொருத்தம் என்பதா என்று மனதில் நினைத்து சந்தோஷ பட்டு கொண்டாள்.

ஹாய் கவி , எப்படிஇருக்கீங்க மேடம் என்ற கீர்த்தியின் குரலில் விழித்தவள் , ஹ்ம்ம் என்ன கேட்டிங்க, என்று அவனையே கேள்வி கேட்க , போச்சுடா , ஒருவேளை இவளுக்கும் நம் கனவு மாதிரி எதாவது ஏடாகூடமாக வந்து இருக்குமோ என்று நினைத்து சிரித்து விட்டான் .

இவன் தன்னை தான் கேலி செய்கிறான் என்று உணர்ந்தவள் , இல்லை ரிசல்ட் பற்றி யோசித்து கொண்டிருந்தேன் என்று ஒருவாறாக சமாளித்தாள். 

ஹ்ம்ம் ஓகே ஓகே , நான் உன்னிடம் முக்கியமான் விஷயம் கூறவேண்டும் என்று அவன் கூற தொடங்க , அதே சமயம் அவளும் நான் உங்களிடம் முக்கியமான விஷயம் கூறவேண்டும் என்று கூறி கொண்டிருந்தாள் , ஒரு நிமிடம் இருவரும் பார்த்து கொள்ள ,சிரிப்பு வந்து விட்டது இருவருக்கும்.

சரி நீங்களே சொல்லுங்க , அவள் விட்டு கொடுக்க , இல்லை வகுப்பு முடியட்டும் என்று அவரவர் இடத்திற்கு சென்று விட்டனர் இருவரும்.

மதியம் வகுப்பு முடிந்து , அவளை தனியே சந்தித்தவன் ,தன் கனவு பற்றிய விவரங்களை கூறினான், அதில் நீ ரொம்ப கோபமாக இருந்த கவி , நான் கூட இப்படிதான் உன்னை சமாதானம் படுத்தினேன் என்று அவள் கைகளை தன் கைகளுக்குள் சேர்த்து கொண்டான்,

என்னதான் மனது ஆசைபட்டாலும் , பொது இடம் என்று மனதில்\
நினைத்து கொண்டு , இருங்க கீர்த்தி அடுத்து என்னவென்று நான் கூறுகிறேன் , நீங்க இப்படிதான் பக்கத்தில் வந்து பேசிட்டு இருந்து இருப்பிங்க , நான் கூட என் கையால் 4 அறை இதோ இந்த கன்னத்தில் கொடுத்து இருப்பேன் என்று கூறி சிரிக்க , அம்மா! தாயே ஆளை விடுறியா  என்று அவன் பயந்தவனை போல் நடித்தாலும் , இறுதியில் , கவி மற்றதை விடு , நான் உன்னை மனதார காதலிக்குறேன் , என்னோட லைப் முழுதும் உன் கூட வாழ ஆசைபடுகிறேன் , உனக்கு இதில் சம்மதமா என்று அவன் நேரிடையாக கேட்டு விட்டான்.

என்னதான் அவள் எதிர்பார்த்தது என்றாலும் அவளுக்கு மனது படபட என்று அடித்து கொண்டிருந்தது. எஸ் கீர்த்தி ஐ டூ லவ் யூ என்று தன் காதலையும் மனதார தெரிவித்தாள் அவள். 

தாங்க் காட் !, ரொம்ப சந்தோசம் கவி, என்னதான் உன் முகமே உன்னை பற்றி கூறினாலும் நீ சொல்லி கேட்கின்ற பொழுது உண்மையாகவே ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது , அப்படியே உன்னை என்று அவன் துவங்க , ஐயோ போதும் போதும் சார் ஸ்டாப் பண்றீங்களா!, உங்களோட இந்த எக்ஸ்பிரஸ்சன்ஸ் எல்லாம் நம்ம திருமணத்திற்கு பிறகு வைத்து கொள்ளுங்கள் என்று அங்கிருந்து புன்னைகையோடே கிளம்பிவிட்டாள் கவிதா'.

 அன்று அப்படி இருந்த கீர்த்தியா இன்று தன்னை யார் என்று கூட தெரியவில்லை என கூறுகிறான் , அந்த அளவு அவனை காயபடுத்தி விட்டோமா என்று நிகழ் காலத்திற்கு வந்தவளால் அழுகையை அடக்க முடியவில்லை. மேஜை மீது இருந்த அவனது போட்டோவினை பார்த்தவளுக்கு  அவன் மடியில் படுத்து அழவேண்டும் என்று தோன்றியது.......



ஹாய் பிரண்ட்ஸ் , இந்த ஸ்டோரி உங்களுக்கு இண்ட்ரெஸ்ட்ட்டா இருந்தா கமெண்ட் பண்ணுங்க  ஆர் இந்த FB Page லைக் பண்ணுங்க 


ஓகே பிரண்ட்ஸ் நெக்ஸ்ட் சண்டே  போஸ்ட்ல மீட் பண்ணலாம் bye ......
 ,

இப்படிக்கு
உங்கள் நாவல் தோழி
SANTHA DEVI

No comments:

Post a Comment